Subscribe to RSS Feed

புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம்

on June 9th, 2013 by sakthi

என்னென்ன வண்ணங்கள் எந்தெந்த மலர்களில் உண்டோ அவ்வண்ணம் மாந்தரும் அவனியில் அந்தந்த குணங்களில் மிளிர்வர் எங்கெங்கு தேனென்று தேடி அங்கங்கு சுவைத்திடும் தேனி போல் என்னென்ன இன்பங்கள் என்றே அங்கேல்லாம் அலைந்திடுவர் இகத்தினில் எவ்வகைத் துயரங்கள் உண்டோ அவ்வழி தன்னில் நுழையாதோர் உண்டோ எத்தகை அனுபவங்கள் அடைந்தாலும் அத்தனையும் அறிவினில் உறைத்திடுவரோ ? எத்தரும் சுத்தரும் இணைந்ததே உலகம் அத்தனை வகைகளின் உறைவிடம் இதுவே புத்தரும், சித்தரும் துளிர்த்ததும் இங்கே புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம் சக்தி சக்திதாசன்

Continue reading about புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம் »

Category: Uncategorized, கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன்

on June 9th, 2013 by sakthi

அழியாக் கானங்களை நெஞ்சில் அழகுற விதைத்தவனே ! அற்புதக் குரல் வளத்தால் அன்னைத் தமிழைப் பாடியவனே ! எத்தனை கானங்கள் ஒலித்தன எத்தகை வகையில் மனங்களில் நிலைத்தன ஏழிசைக் கானங்களின் வேந்தன் நீயே எங்கள் தமிழிற்கு ஒரு மகுடம் நீயே டிஎம்ஸ் என ஒலிக்காத தமிழ் உதடுகள் தமிழ் அகிலத்தில் இல்லை என்பேன் முத்தான பல தெய்வீகப் பாடல்களை மதங்கள் அனைத்திற்கும் சமர்ப்பித்தவனே அல்லா,யேசு, ஈசன் என உன்னால் அர்ச்சிக்கப்படாத தெய்வங்கள் எவை அய்யா ? ஆரத்திச் சுடராய், அழகிய மாலைகளாய் ஆண்டவன் மேல் […]

Continue reading about உன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை

on April 11th, 2013 by sakthi

நெஞ்சினில் ஆசையை வளர்த்து நேசத்தின் ஆழத்தில் புதைந்து நிஜத்தின் நீளத்தை மறந்த நங்கையே இதைக் கேளாய் உள்ளத்தைக் கொடுத்து மறு உள்ளத்தை வாங்கிடும் உறவே உண்மைக் காதல் உணர்ந்திடுவாய் உலகின் நிகழ்வுகளை அறிந்திடுவாய் இளமையின் வேகத்தின் சுழற்சியில் இளைஞர்கள் செப்பிடும் மொழிகளில் இதயத்தை இழந்திட்ட பின்னால் இழப்பின் மிஞ்சுவது வலியே ! ஒட்டிப் பிறந்த உறவுகளும உன்னை ஒப்பிலாப் பெண்ணாக்கிய தாயவளும் ஒப்பற்ற மகிழ்வினை டைந்திடும் வகையில் ஒருத்தியாய் உயர்ந்திட உழைத்திடுவாய் அழியாக் காதல் உன்னது என்றால் […]

Continue reading about நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

on April 6th, 2013 by sakthi

கமபரசத்தில் தொலைத்த கணங்கள் கம்பனின் இலக்கியம் சாதாரண இலக்கியமன்று . இன்பச்சுனை அதனுள் விழுந்து விட்டால் எழுவது என்பது முடியாத காரியம். வசிட்டர் படைத்த இராமாயணத்திற்கும் கம்பன் படைத்த இராமாயணத்திற்கும் அனேக இடைவெளி உண்டு. கம்பன் படைத்த இராமகாதை தமிழை அதன் இலக்கிய எல்லைஅ வரை கொண்டு சென்றது. வாழ்க்கையில் அடிமட்ட மனிதரின் உணர்ச்சிகளை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டினான் கம்பன். அவனுடைய ரசமிகு விபரணைகள் கண்களின் முன்னே பாத்திரங்களை களிப்புடன் நடமிடச் செய்தன. உள்லத்தில் வெறுமை […]

Continue reading about »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்

on April 6th, 2013 by sakthi

வானகத்தின் மேனியிலே நட்சத்திரங்கள்வீற்றிருக்கும் வண்ண விளக்குகளாய்கானகத்தின் மரத்திலெல்லாம் ஆடி நிற்கும்காற்றிலந்த பச்சை இளந்தளிர்கள்தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்தொலைவில் போகும் ஊர்கோலங்கள்பட்டுவிடச் சிலிர்க்கும் இளந் தென்றல்பட்டுடலை மெல்ல வருடிச் செல்லும்சொட்டுகின்ற பனித்துகள்கள் ஒளியில்சொக்கி மிளிரும் ஒளிர் பொன் துகளாய்மீடும் அந்த பறவைகள் கானங்களைமிதக்க வைக்குமெமை வான் வெளியில்பூட்டி வைத்த கற்பனைத் தேர் தானாகபூட்டுடைத்து பவனி வரும் வானுலகில்ஏட்டிலொரு கவி படைக்க எனக்கிங்கேஎழில்மிகு பசுந்தரை விரிந்தது கம்பளமாய்செம்மொழி தொடுத்தொரு கவிமாலை பின்னசெந்தமிழ்த்தேன் நெஞ்சில் சுரந்தே இனித்ததுசெந்துரம் ஜொலித்திருக்க என் தமிழன்னைசெழிப்புடனே […]

Continue reading about தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on April 6th, 2013 by sakthi

அன்பு நண்பா !நலமோடிருப்பாய் எனநானும் நயமானநம்பிக்கையுடனே வரைகின்றேன்நட்பு மடலை உனக்கேநானிலத்தில் தினமும்நான் காணும் காட்சிகள்சோதனைக்குள் உள்ளத்தைசேர்த்து விடுகின்ற நிலை தன்னைசிறிதாகப் பகரவென்றேசிறியேனின் இக்கடிதம்எத்தனை நிறங்கள் நண்பா ?தோட்டத்து மலர்களிலே !எத்தனை விதம் நண்பாபூவுலக மாந்தர் தம்முள்நெஞ்சொன்று நினைத்திருக்கவாயொன்று பகர்ந்திருக்ககையொன்று புரிந்திருக்கதான் பெரியோன் என நினைந்துஉதாசீனம் செய்கின்றார் அவரும்உண்மையான உள்ளம் கொண்டோரைஉதடுகளின் விரிப்புகள் அவை வெறும்உணர்வற்ற போலிப் புன்னகைகள்நாளும் தம் தோள் வலிக்கநலிந்தே உழைத்திடும் தோழனவன்நிம்மதியற்ற வாழ்வதைப் பார்த்தும்நிம்மதியாகத் தூங்குகிறார்கை நிறையப் பணம் கொண்டுகண் நிறையப் பேராசை கொண்டுஆலயங்கள் […]

Continue reading about நண்பனுக்கொரு மடல் »

Category: நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வாழ்க்கை வாழ்வதற்கே !

on April 4th, 2013 by sakthi

காலைக் கதிரவன் தன் கதிர்களை பூமியின்மேனியின் மீது தவழ விடுகிறான் தோழனே ! விடிந்து விட்டதுஎழுந்திடுவாய் ! ஏற்றமிகு செயல்கள் பல ஏர்போல் பீடுநடை கொண்ட உனக்காகக் காத்துக் கிடக்கின்றன ! இதயத்தின் ஆழத்தில் உறங்கும் இணையில்லா இலட்சியங்கள் அரும்பாகவே பாவம் கருகிவிடும் அரும்புகள் பல உன் உழைப்புக்காக ஆவலாய்க் காத்து நிற்கிறார்கள் ஏன் தோழா? இன்னும் தயக்கம் ? உன் அனுபவப் பாசறையில் ஆயிரமாய் கருத்துகள் கொட்டிக் கிடக்கின்றனவே ! இன்னும் ஏனடா தயக்கம் ? […]

Continue reading about வாழ்க்கை வாழ்வதற்கே ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள்

on March 22nd, 2013 by sakthi

செல்ல முடியாத பயணங்கள் சொல்ல முடியாத கருத்துகள் அள்ள முடியாத செல்வங்கள் – இவையே தள்ள முடியாத ஞாபகங்கள் வெல்ல முடியாத யுத்தங்கள் மெல்ல முடியாத உண்மைகள் கொல்ல முடியாத தருணக்கள் – இவையே கிள்ள வைக்கின்ற உணர்வுகள் துள்ள வைத்திடும் ஆசைகள் தெள்ளத் தெளிவான அறிவலைகள் கள்ளத் தனமான செய்கைகள் – இவையே முள்ளைப் போல உறுத்துபவை குள்ளத் தனமான தந்திரங்கள் பிள்ளைத் தனமான சூட்சுமங்கள் வெள்ளைத் தனமற்ற பார்வைகள் – இவையே என்னை யறிந்து […]

Continue reading about என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

on March 7th, 2013 by sakthi

சிந்தனை செய்யுங்கள் தோழர்களே சித்தத்தில் உண்மையைக் காணுங்கள் மாதர் தம் பெருமைகளை உணர்ந்து மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள் சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து சாத்திரங்கள் பலவும் ஓதியவள் காதலியாய் கண்களிலே புகுந்து எமை கைபிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள் எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை ஏற்றி நாமும் போற்ருவதற்கு ஒருநாள் அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும் அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான் கொழுந்து விட்டெறியும் கவிதைகளால் கொளுத்தினான் பெண்ணடிமைக் […]

Continue reading about வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அண்ணன் வாழ்கிறேன் உனையே நம்பி

on March 6th, 2013 by sakthi

கண்களைத் திறந்திடு தம்பி கனவினை வளர்த்திடு நம்பி உலகினை உணர்ந்திடு தம்பி உழைப்பினை ஈந்திடு தம்பி உனக்குள் உறங்குது தீரம் உணர்ந்திடு அதுவே வீரம் உதிர்த்திடு வியர்வைத் துளிகளை நனைத்திடும் நிலத்தை அவை தாம் களைந்திடு பேதங்கள் தனை கலைத்திடு வறுமைப் பேயை உரங்கிடும் மனங்களை எல்லாம் உசுப்பியே எழுந்திடச் செய்வாய் அன்னையின் கனவுகள் எல்லாம் அவனியில் நனவாய் மாற்றிடும் அன்பு மைந்தன் நீயே தம்பி அண்ணன் வாழ்கிரேன் உனையே நம்பி சக்தி சக்திதாசன் 07.03.2013

Continue reading about அண்ணன் வாழ்கிறேன் உனையே நம்பி »

Category: கவிதை | No comments yet, be the first »