Subscribe to RSS Feed

காகிதப்பூ வாசங்களே !

on February 18th, 2016 by sakthi

பயணங்கள் முடிவதில்லை
பாதையும் தெரிவதில்லை
பாடத்தின் முடிவில் ஒரு
பத்தியும் புரியவில்லை

நேரத்தின் நீளத்தில்
புதைந்திருக்கும் கோலங்கள்
மீதமில்லா வகையினிலே
செலவாகிடும் காலங்கள்

நிச்சயத்தின் முடிவினிலே
நிசப்தமான நியாயங்கள்
நெஞ்சத்தின் முன்றலில்
சதிராடிடும் சாத்திரங்கள்

விளக்கமில்லா விடயங்கள்
வெளிச்சத்தின் கருமைகள்
மூடியில்லா பெட்டியினுள்
மோதிநிற்கும் நினைவலைகள்

காரியத்தின் வெற்றியிலே
காரணங்கள் அம்பலமே
வீரியத்தின் ஓரத்திலே
விவேகங்கள் பூஜ்ஜியமே

நாணயத்தின் ஒருபக்கம்
ஞாபகத்தின் அடித்தளமே
கானல்நீரானதுவே நேரில்
கண் பார்த்த உண்மைகள்

சோதனைக்கு ஒரு தளமும்
வேதனைக்கு மறு தளமும்
மனிதரிவர் வாழ்வெல்லாம்
வெறும் காகிதப்பூ வாசங்களே !

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

One Response to “காகிதப்பூ வாசங்களே !”

  1. K.S.Nagarajan
    February 18th, 2016 at 9:05 pm

    Meaningful. If I add to this to mean meaningless is made meaningful, that is meaningful.

    K.S.Nagarajan,
    Chennai,
    Raju Chithappa. Wonderful.

Leave a Reply