Subscribe to RSS Feed

படித்”தேன்” . . . . சுவைத்”தேன்”

on February 18th, 2016 by sakthi

இன்று காலை எனது “வாட்ஸ் அப்” செய்திக் கோர்வையில் ஒரு படத்துடன் கூடிய கவிதை வரிகள் வந்து விழுந்தது.

மிகவும் எளிமையாக ஆனால் தன்னுள் மறைந்துப் புதைத்திருக்கும் பொருட்செறிவு ஆழமானதாக இருக்கும் வகையில் அமைந்திருந்த அந்த கவிதை வரிகள் என்நெஞ்சத்தில் அழகாய்ப் பதிந்து விட்டது.

நண்பர் இராஜா தியாகராஜன் அவர்களின் சிந்தையில் உதித்த ஒரு கவிதை. அது என்னெஞ்சில் ஏற்படுத்திய தாக்கம் அழகானது, இனிமையானது, ஆழமாய்ச் சிந்திக்க வைத்தது.

அது கவிதையோ அன்றி வரிகளோ எதுவாயினும் என்னைப் பொறுத்தவரி உள்ளத்து உணர்ச்சிகளை வரிகளாய்க் கொட்டினால் அது கவிதையே.

ஒரு தூண்டிலில் புழுவைக் கொக்கியில் கொழுவி மீனைப் பிடிப்பதற்கு நீரில் எறிகிறோம். அந்த இரையைப் பிடுங்கும் அதில் சிக்குண்டு தான் எத்துணை வேதனை அடையப் போகிறோம் என்று அந்த மீன் உணர்கிறதா என்ன ?

அந்தத் தூண்டிலில் அது சிக்குவதற்குக் காரணம் என்ன ? தன் கண்முன்னே காணும் அனைத்தையும் தான் உண்ண வேண்டும் எனும் ஆவல் அல்லவா ?

அது போலத்தான் நாமும் எமது கண்முன்னே தோன்றுபவைகளை அடைய வேண்டும் எனும் பேராசையும், அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் எனும் பேராசையும் மனிதரை எத்தனையோ சிக்கல்களுக்குள் மாட்டி விடுகின்றது இல்லையா ?

இதோ என் சிந்தையைக் குளிர வைத்த அவ்வரிகளைப் பார்ப்போம் வாருங்கள்,

மனமே மாறாயோ . . .

தூண்டிலிலே தொக்கிநிற்கும்
. . . சுவைமிக்க துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட
. . . வேதனையை எண்ணாது
காண்பதெல்லாம் கொள்வதுவும்
. . . கண்போனபோக்கில் களிப்பதுவும்
மாண்பெனவே மயங்குகின்ற
. . . மனமேநீ மாறாயோ ?

இராஜ தியாகராஜன்

படித்தவுடன் தேனைப் போல இனித்து அச்சுவை நெஞ்சில் பதிந்திடச் செய்த இவ்வினிய வரிகளின் சொந்தக்காரன் நண்பர் இராஜ. தியாகராஜன் அவர்களின் சிந்தையின் வெளிப்பாடு தித்திக்க வைக்கிறது

சக்தி சக்திதாசன்

| Posted in சொல்லச் சொல்ல இனிக்குதடா

One Response to “படித்”தேன்” . . . . சுவைத்”தேன்””

  1. K.S.Nagarajan
    February 18th, 2016 at 9:34 pm

    Good. I liked it. Whether we learn facts of life or leave our wisdom to the history, I like it. Ramayanam, as I understand emphasises the NEED of Self Discipline to be Eka Patni Vratan and the essence of Sri Madh Bagavatham is Maha Bharath distilled in to Gita. This gives us the wisdom that Hindu Dharma = the Law of Nature, like Gravity & electromagnetic waves, our state of mind at conception, influences, impacts the VIRTUE in the Conceived to give us the pleasure or pain equal in magnitude as our state of mind.
    My research is based on this to deliver in modern package.

    Thank U,

    Yours affectionately,

    K.S.Nagarajan.
    Chennai.

Leave a Reply