Subscribe to RSS Feed

காலமிட்ட ஆணையிது

on February 12th, 2016 by sakthi

சிந்தனையில் தேனூறும்
பொன்னான வேளையிது
எந்தனையின் இதயமதில்
ராகமிடும் புதுத் தாளமிது

தித்திக்கும் மாலைநேரம்
திகட்டுகின்ற கானங்கள்
தேடுகின்ற பொழுதெல்லாம்
தேன்சிந்தும் கணங்கள்

ஏதேதோ ஞாபகங்கள்
எங்கெங்கோ நினைவலைகள்
எத்தனையோ பயணங்கள்
அத்தனையும் ஆனந்தமே !

மறைகின்ற வேளையிலும்
மயக்குகின்ற ஆதவனும்
பிறக்கின்ற பொழுதினிலே
சுரக்கின்ற பால் நிலாவும்

என்னுள்ளே உறங்குமொரு
கவிஞனை தட்டியெழுப்பி
கவிதையொன்றை ஆக்கிட
காலமிட்ட ஆணையிது

சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized

Leave a Reply