Subscribe to RSS Feed

ஏப்பிரல் ஒன்று !

on April 1st, 2015 by sakthi

ஏப்பிரல் ஒன்று !

காலையில் விழித்ததும்
முகக் கண்ணாடியில்
முழு உருவத்தையும் பார்த்தேன்
சிரித்தது என்னைப் பார்த்து . . . .

ஓ ! இன்று முட்டாள்கள்
தினமல்லவா ?
அதுதான் எனைப்பார்த்து
என் உருவம்
இன்றெனது நாள் என்று
பாராட்டுகிறதோ ?

சிந்தனைச் சக்கரங்கள்
விரைவாகச் சுற்றியும் ஏனோ
திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் !
சிக்கிக் கொண்டு விட்டது
நினவுச் சகதிக்குள் . . . .

தெளிவு எனும் பலம் கொண்டு
உந்தித் தள்ள வேண்டுமோ ?

ஒன்றல்ல , இரண்டல்ல
எனக்குச் சூட்டப்பட்ட
முட்டாள் எனும் மகுடங்கள் . .

ஓ ! அதுதான் எனது முத்திரையோ ?

காலத்தின் சுழற்சியில் அகப்பட்ட
துரும்பாக அலைக்கப்பட்ட மனதின்
வலியில் கூட ஏதோ ஒரு சுகமோ ?

வாலிப முறுக்கோடு பொறுப்பின்றி
வாழ்வில் விளையாடிய காலம் முதல்
வயோதிபத்தின் வாசலில் காலடி
வைத்த இந்தக் காலம் வரை . . .

முட்டாள் எனும் சூட்டப்பட்ட
மகுடங்கள் ஏனோ மற்றவருக்கு
வேடிக்கையாகத் தென்படலாம்
ஆனால், அம்மகுடங்கள் ஒவ்வொன்றும்
அழகாகப் பதித்த அனுபவ முத்திரைகள்
அவைகள் உள்ளத்தினை அழுத்தி
அழுக்குகளை அகற்றும் யாத்திரைகள்

வாழும் ஆண்டொன்றும்
வந்திடும் ஏப்பிரல் ஒன்றுகள்
தந்திடும் முட்டாள் பட்டங்கள்
மிஞ்சிடும் அனுபவ அத்தியாயங்கள்

ஓ ! அதனால் தான்
முட்டாளின் மூளையிலே
முன்னூறு பூ மலரும்
என்றார்களோ ?

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

One Response to “ஏப்பிரல் ஒன்று !”

  1. DHAVAPPUDHALVAN
    April 1st, 2015 at 8:14 am

    ஏப்ரல் முதல் நாளில் மீண்டுமொரு சுயபரிசோதனை.

Leave a Reply