Subscribe to RSS Feed

உனக்கு எனது நன்றிகள்

on March 30th, 2015 by sakthi

நீ விழியால் பேசிய
கணங்கள் எல்லாம்
நான் என்னை முழுதாய்
இழந்த பொழுதுகள்

உன்
அங்க அசைவுகள்
என்னோடு ரகசிமாய்
பகிர்ந்த கதைகள்
புரிந்த போது
எமக்கிடையே
விரிந்தது இடைவெளி

உனக்கு
அவைகள் எல்லாம் ஏதோ
வாலிப விளையாட்டுகளாய்
விந்தைகள் புரிந்திருக்கலாம்
வாலிபன் என்னைக்
கவிஞனாக்கிய புண்ணிய
வேளைகளைப் புரிந்த போது
புலம் பெயர்ந்த ஒரு
புண்ணான வேளையது

கண்களால் நீ பேசிய
கதைகளின் மூலம் புரிந்த போது
உனது
உண்மையான வேடமும் புரிந்தது
இழக்கவில்லை நான் எனது காலத்தை

ஏனெனில் !

உண்மையான
காதலின் அர்த்தத்தை எனக்குப்
புரிய வைத்தது உன்னுடைய
வாலிப விளையாட்டுகளே !

ஆமாம் . . . .

நான் காதலிக்கும் பெண்ணை விட
என்னைக் காதலிக்கும்
உள்ளம் ஒன்றே எனது பாக்கியம்
எனும்
உண்மையை உணர வைத்தவளே
உனக்கு எனது நன்றிகள்

சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized

Leave a Reply