Subscribe to RSS Feed

தினமொரு வினவல்

on April 2nd, 2014 by sakthi

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்
எம்மால் செய்ய முடியாது எனும் தடைச்சுவர்கள் பலவற் எழுப்புவதில் வல்லவர்களாக இருக்கும் நாம் அச்சுவர்களைக் கடக்கும் பாலங்களை அமைக்கத் தயங்குகிறோம். பொறுமை அவசியமானதே ! ஆனால் அதை மிகவும் தெளிவான யதார்த்தத்துடனும் தீர்க்கமான இலட்சிய நோக்குடன் கடைப்பிடிப்பதெ வெற்றியளிப்பதாகும். ஊர் ஊராகச் சென்று மக்கள் யாராவது ஏதாவது உணவு கொடுத்தால் உண்டு விட்டு இல்லையானல் பச்சைத் தண்ணீரைக் குடித்து விட்டுப் படுக்கும் சித்தர் ஒருவரை ஒரு பணக்காரர் சந்தித்தார். ஜயா நீங்கள் ஊர் ஊராக அலைந்து திரிய வேண்டாம் நான் உங்களுக்கு ஒரு ஆசிரமம் அமைத்து சகல வசதிகளையும் கொடுக்கிறேன் நீங்கள் அதிலே தங்கீஇயிருந்து உங்களிடன் ஞானம் பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு உதவிப் பேரும் புகழும் பெறலாம் என்றார். அதர்கு அந்த ஞானியோ சிரித்தார். பின்பு ஒரு ஊதுபத்தியை ஏற்றி வைத்தால் ஒரு அறை முழுவதும் நறுமணம் கமழும் ஆனால் அந்த ஊதுபத்தி அழிந்து விடுமே ! சுயத்தை இழந்து புகழ் சம்பாதிப்பது எந்த விதத்திலும் பயன் தராது என்றார். என் இனிய இளம் தலைமுறையே ! தன்னைத் தெரிந்து கொள்ளாத தன்னைப் புரிந்து கொள்ளாதவர்கள் தேடும் புகழ் கத்தியில் இருக்கும் தேனைச் சுவைக்கத் தலைப்பட்டு நாக்கை இழந்து விடுவது போலாகும். அதைவிட தாகத்தைத் தணிப்பதற்கு தண்ணீரே போதுமல்லவா ?
அன்புடன்
சக்தி

| Posted in தினமொரு வினவல்

Leave a Reply