Subscribe to RSS Feed

உள்ளம் பேசுதே !

on April 1st, 2014 by sakthi

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
வாழ்க்கை இனிய கணங்கள் நிறைந்தது. கடந்தகாலத்தின் கைதிகளாக வாழ்வதை விட எதிர்காலத்தை நிர்மாணிப்பவர்களாக வாழ்வதே சாலச்சிறந்ததாகும். வசந்தம், கோடை, இலையுதிர், மாரி என ஒவ்வொரு வருடமும் பருவகாலங்களால் ஆனது போல வாழ்க்கையும் இன்பம், துன்பம் எனும் காலநிலைகளுக்குட்பட்டது . இயற்கையின் பருவ, காலநிலை மாற்றங்களுக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது போல இன்ப, துன்பம் எனும் இயற்கை நிலைகளுக்கேற்ப எமது வாழ்க்கையையும் மாற்றி அனுசரித்து வாழப்பழகிக் கொள்தலே அமைதியான வாழ்க்கைக்கு வழிமுறையாகும். நேர்வழியில் நட்ந்தால் அது எமக்கு நண்பர்கள் பலரை ஈட்டித் தராது போகலாம் ஆனால் எம்மோடு இணைந்த நண்பர்கள் அனைவருமே உயர்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். என் இனிய இளைய தலைமுறையே வாழ்க்கை சுவையானது எம்முடைய வலிகளே எமக்கு வாழ்வில் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மிக்க அனுபவங்களாகின்றன.
அன்புடன்
சக்தி

| Posted in தினமொரு வினவல்

Leave a Reply