Subscribe to RSS Feed

புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம்

on June 9th, 2013 by sakthi

man-seek-2

என்னென்ன வண்ணங்கள்

எந்தெந்த மலர்களில் உண்டோ

அவ்வண்ணம் மாந்தரும் அவனியில்

அந்தந்த குணங்களில் மிளிர்வர்

எங்கெங்கு தேனென்று தேடி

அங்கங்கு சுவைத்திடும் தேனி போல்

என்னென்ன இன்பங்கள் என்றே

அங்கேல்லாம் அலைந்திடுவர் இகத்தினில்

எவ்வகைத் துயரங்கள் உண்டோ

அவ்வழி தன்னில் நுழையாதோர் உண்டோ

எத்தகை அனுபவங்கள் அடைந்தாலும்

அத்தனையும் அறிவினில் உறைத்திடுவரோ ?

எத்தரும் சுத்தரும் இணைந்ததே உலகம்

அத்தனை வகைகளின் உறைவிடம் இதுவே

புத்தரும், சித்தரும் துளிர்த்ததும் இங்கே

புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம்

சக்தி சக்திதாசன்

| Posted in Uncategorized, கவிதை

Leave a Reply