Subscribe to RSS Feed

on April 6th, 2013 by sakthi

கமபரசத்தில் தொலைத்த கணங்கள்

kamban4

கம்பனின் இலக்கியம் சாதாரண இலக்கியமன்று . இன்பச்சுனை அதனுள் விழுந்து விட்டால் எழுவது என்பது முடியாத காரியம். வசிட்டர் படைத்த இராமாயணத்திற்கும் கம்பன் படைத்த இராமாயணத்திற்கும் அனேக இடைவெளி உண்டு.

கம்பன் படைத்த இராமகாதை தமிழை அதன் இலக்கிய எல்லைஅ வரை கொண்டு சென்றது. வாழ்க்கையில் அடிமட்ட மனிதரின் உணர்ச்சிகளை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டினான் கம்பன்.

அவனுடைய ரசமிகு விபரணைகள் கண்களின் முன்னே பாத்திரங்களை களிப்புடன் நடமிடச் செய்தன.

உள்லத்தில் வெறுமை தோன்றும் சில சமயங்களில் கம்பனின் இலக்கியச் சுனைக்குள் சிறிது நீச்சலடித்தால் புத்துணர்ச்சி பெற்றிடலாம்.

இராமகாதையின் வில்லனாக வருணிக்கப்பட்டவன் இராவணன். அவ்வில்லனின் பாத்திரத்தை அதுவும் குறிப்பாக அவன் மரணமடைந்த காட்சியை கம்பன் விபரிக்கும் விதம் இருக்கிறதே ! அப்பப்பா , உள்ளத்தின் உணர்வுகளுக்கு ஒருமுறை கிளுகிளுப்பூட்டுகிறது.

மாபெரும் வீரன் இராவணன். அது மட்டுமின்றி மாபெரும் சிவபக்தன். சீதையைக் கவர்ந்து கொண்டு வந்ததால் இராமனின் பானத்திற்கு இரையாகி உடல் சல்லடையாகி நிலத்தில் வீழ்ந்து கிடக்கிறான்.

வீழ்ந்திருக்கும் அவன் உடல் ஒரு மலைபோல் காட்சியளிக்கிறது. யுத்தங்களில் தோல்வியையே கண்டறியாத மாஒஎரும் வீரனான தன் கணவன் இறந்து வீழ்ந்து கிடக்கும் செய்தியரிந்து அவ்விடம் நோக்கி ஓடி வருகிறாள் அவன் மனைவி மண்டோதரி.

அங்கே உடல் சல்லடையாக வீழ்ந்திருக்கும் இராவணனின் உடலைக் கண்டு கவலை பீரிட்டுக் கொண்டு வர ஜயமுறுகிறாள் மண்டோதரி. அன்பிற்கும், கனிவிற்கும் , பொறுமைக்கும் பெயர் பெற்ற இராமனா என் கணவனின் உடலைச் சல்லடையாகத் துளைத்திருக்கிறான் ? அவனுக்கு இவ்வளவு கோபம் வராதே ! பின் எப்படி ?

சிவன் வாசம் செய்கின்ற திருக்கயிலை மலையையே பெயர்த்தெடுக்கும் வகையில் பலம் பொருந்திய சரீரத்தைக் கொண்ட என் கணவனின் உடலையா இத்தகிய சல்லடையாக துளைத்திருக்கிறார் ஸ்ரீராமன் ? என்று எண்ணிய அவள் மனம் ஓ? சீதையின் மீது காமம் கொண்ட இராவணனின் உடலின் எப்பாகத்தில் அக்காமக்காதல் புதைந்து கிடக்கிறது என்பதை அறிய அவகாசம் இல்லாததினால் அவனுடலில் எப்பகுதியில் அக்காமக்காதல் உறைந்திருந்தாலும் அது அழிந்து போகட்டும் என்றேதான் உடல் முழுவதையும் ராமர் சல்லடையாக்கி விட்டார் என்று கூரிக் கொள்கிறது.

இதைக் காவியக் கவி எம் கம்பன் கையாளும் விதத்தைப் பார்ப்போமா ?

வெள்ளெருக்கு சடைமுடியான் வெற்பெடுத்த

திருமேனி மேழும் கீழும்

எள்ளிருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்

இடன்நாடி இழைத்த வாறே

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

மனச்சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி

ஆகா எத்தனை அருமையாக இத்தனை பெரிய உணர்ச்சிப் படலத்தை சொற்சுவை கூட்டி எமக்களித்த இனிய என் காவியக் கவிஞன் கம்பனின் கவிதைச்சுனையில் பருகிய தேனைப் பகிர்ந்து கொண்டேன்.

மீண்டும் தேன் கொண்டு வருவேன்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

07.04.2013

| Posted in இலக்கியத்திடல்

Leave a Reply