Subscribe to RSS Feed

வாழ்க்கை வாழ்வதற்கே !

on April 4th, 2013 by sakthi

காலைக் கதிரவன் தன்

கதிர்களை பூமியின்மேனியின் மீது

தவழ விடுகிறான்

தோழனே !

விடிந்து விட்டதுஎழுந்திடுவாய் !

ஏற்றமிகு செயல்கள் பல

ஏர்போல் பீடுநடை கொண்ட

உனக்காகக் காத்துக் கிடக்கின்றன !

இதயத்தின் ஆழத்தில் உறங்கும்

இணையில்லா இலட்சியங்கள்

அரும்பாகவே பாவம் கருகிவிடும்

அரும்புகள் பல உன் உழைப்புக்காக

ஆவலாய்க் காத்து நிற்கிறார்கள்

ஏன் தோழா? இன்னும் தயக்கம் ?

உன் அனுபவப் பாசறையில்

ஆயிரமாய் கருத்துகள் கொட்டிக் கிடக்கின்றனவே !

இன்னும் ஏனடா தயக்கம் ?

போன காலங்கள் போகட்டும்

அவை கெட்ட கனாக்கள்

நிகழும் காலத்தை உன்கரங்களால் செதுக்கிவிடு

வருங்காலத் தலைமுறை உன்னை

வாழ்த்தியபடியே முன்னேற்ரம் கண்டிடும்

அன்பினால் எழுதப்பட்ட வரலாறுகள்

என்றுமே மறைவதில்லை

அமைதியின் வழி ஏற்றப்பட்ட

உன்னத இலட்சிய தீபங்கள்

என்றுமே அணைவதில்லை

எழுந்திடு தோழா !

நீளும் என் கரங்களோடு

உன் கரங்களையும் இணைத்து விடு

அமைதி வழி எமது தலைமுறைக்காய்

அன்புப் பாடங்களை உயர்த்திடுவோம்

வாழ்க்கை வாழ்வதற்கே !

அன்புடன்

சக்தி

| Posted in கவிதை

Leave a Reply