Subscribe to RSS Feed

என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள்

on March 22nd, 2013 by sakthi

செல்ல முடியாத பயணங்கள்
சொல்ல முடியாத கருத்துகள்
அள்ள முடியாத செல்வங்கள் – இவையே
தள்ள முடியாத ஞாபகங்கள்

வெல்ல முடியாத யுத்தங்கள்
மெல்ல முடியாத உண்மைகள்
கொல்ல முடியாத தருணக்கள் – இவையே
கிள்ள வைக்கின்ற உணர்வுகள்

துள்ள வைத்திடும் ஆசைகள்
தெள்ளத் தெளிவான அறிவலைகள்
கள்ளத் தனமான செய்கைகள் – இவையே
முள்ளைப் போல உறுத்துபவை

குள்ளத் தனமான தந்திரங்கள்
பிள்ளைத் தனமான சூட்சுமங்கள்
வெள்ளைத் தனமற்ற பார்வைகள் – இவையே
என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள்

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

Leave a Reply