Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on July 28th, 2010 by sakthi
அன்பு நண்பா,

பாசத்தின் உச்சியில்
பழகிய நாட்களின்
நேசத்தின் வாசத்தை
நேற்று நான் கண்டேன்

அன்று நாம் தாய்மண்ணில்
ஆடித்திரிந்த நாட்களில்
அன்பன்றி வேறெதுவும்
அனுபவித்திராத வேளைகள்

உன் நெஞ்சில் நம் நட்பின்
உண்மையான ஆழத்தினை
உன்னுடைய நினைவுகளால்
உணர்த்தினாய் நண்பனே !

காலங்கள் தான் கடந்தன
அகவைகள் தான் உருண்டன
ஆயினும் நண்பா நம் நெஞ்சத்தில்
நட்பு மட்டும் தேயவில்லை

இருந்ததைப் பகிர்வதும்
இல்லாதவற்றை மறப்பதும்
எப்போதும் சிரிப்பதும்
எம்முடைய ஆயுதங்கள்

தேவைகளுக்காய் வாழாமல்
வாழ்வதற்கு தேவைகளை
போதுமென்ற மனம் கொண்டு
வாழ்ந்திருந்த நாட்களது

உன்னுடைய சொந்தங்களை
என்னிடம் அனுப்பி வைத்து
உண்மையான நட்பிற்கு
உதாரணங்கள் காட்டி நின்றாய்

அது போதும் நண்பா !
ஆயுளுக்கும் அது போதும்
காணாத போதும் வாழ்வில் நம்
கண்களுக்குள் நிறைந்திருப்போம்

அடுத்தொரு மடலில்.. . . மீண்டும்

சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

One Response to “நண்பனுக்கொரு மடல்”

  1. VIJI
    November 4th, 2010 at 10:32 pm

    அன்பின் சக்தி, இனிய காலை வணக்கம். இந்த நண்பனுக்கொரு மடல் இப்பொழுது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்து படித்தேன்.கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் நட்பின் ஆழத்தை அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். அருமை. vazhththukkal

Leave a Reply