Subscribe to RSS Feed

காதலென்னும் தத்துவம்

on April 24th, 2010 by sakthi

indian_woman_3

 

ஆற்றுடன் கலந்திடும்

நீர்வீழ்ச்சி

ஆழியுடன் கலந்திடும்

ஆறு

இன்ப உணர்வுகளுடன் கலந்திடும்

சொர்க்கத்தின் பூங்காற்று

இவையனைத்தும் தனியாக இல்லை

இதுதான் இயற்கை விதியென்றால்

பெண்ணே !

உன்னோடு நான் ஏன்

கலந்திடக்கூடாது ?

 

பார் பெண்ணே !

மலையுச்சிகள் வானைத்தொட்டு

சொர்க்கத்தை முத்தமிடுவதும்

கடலலைகள் ஒன்றஒயொன்று

கட்டிப்ப்புரள்வதும்

ஆதவனின் ஒளிக்கதிர்கள்

பூமியை அணைத்து முத்தமிடுவதும்

வெண்ணிலவின் ஒளி சமுத்திரத்தை

ஆரத்தழுவிக் கொள்வதும்

என்ன பயனை விளைத்திடும்

உன் முத்தம் என் மீது

பதியாவிட்டால்

 

அன்புடன்

சக்தி

 

(ஷெல்லியின் காதலின் தத்துவம்” (Love`s philosophy) என்னும் கவிதையைத் தழுவியது)

 

| Posted in பிறமொழித் தழுவல்கள்

Leave a Reply