Subscribe to RSS Feed

இயற்கையின் சீற்றமும் விஞ்ஞான வேட்கையும்

on April 21st, 2010 by sakthi

 

Smoke and ash billows from a volcano in Eyjafjallajokull, Iceland

 

2010ம் ஆண்டின் முற்பகுதியில், விஞ்ஞான யுகத்தின் உச்சியில் மரணத்தை மரணிக்க முயலும் விஞ்ஞானிகளின் மத்தியில் இயற்கையின் சிற்றம் மேற்குலகை ஒரு ஆட்டு ஆட்டுவித்திருக்கிறது.

 

உலகத்தின் பரப்பளவை குறுக்கி, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பதை மிகவும் இலகுவாக்கியிருக்கிறது விஞ்ஞானம் ஆகாய மார்க்கமாக. ஆனால் அந்தப் பயணத்தின் நீளத்தை அதிகரித்து தனது ஆற்றலை இன்று உலகுக்கு நிரூபித்திருக்கிறது இயற்கை.

 

இயற்கைவளத்தை உபயோகித்து மனிதவளத்தை மேம்படுத்த விஞ்ஞானம் ஆரம்பத்தில் துணை போனது . ஆனால் இன்றோ அந்த விஞ்ஞானத்தின் து\ணை கொண்டே பேராசைக்காரர்கள் இயற்கைவளத்தை அழித்து தம் சொந்த இலாபத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

பரந்தளவில் உலகளாவிய வியாபாரம் என்னும் போர்வையில் மனித வாழ்விற்கு ஆதாரமாய் யுகங்களாய் மிளிர்ந்த இயற்கையை அழித்து மனிதவாழ்வின் வாழ்க்கை வட்டத்தை நிர்மூலமாக்கும் செயல்கள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை அடைவதை மட்டும் இலக்காக கொள்ளாமல் தேவைக்கதிமாக அநியாயமான முறையில் தனது இருப்புக்களைப் பெருக்கிக் கொள்ளும் செயல்களில் அனாயசமாக ஈடுபடுவது இப்போது அன்றாட நிகழ்வாகி விட்டது.

 

விஞ்ஞானத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்னும் மூடத்தன்மான நம்பிக்கை உமையான விஞானியின் மனதில் கிடையாது. விஞ்ஞானத்தை தம்து சுயலாபங்களுக்காக உபயோகித்துக் கொKவோர்களே இத்தகைய நம்பிக்கையை மனதில் அழுத்திப்பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

 

தான் சீர்றம் கொண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிகவும் தெளிவான உதாரண்த்துடன் இயற்கை அன்னை எடுத்துக் காட்டி விட்டாள்.

 

கடந்த வாரம் ஏப்பிரல் மாதம் 15ம் திகதி ஜஸ்லாந்திலுள்ள எரிமலையின் குமுறலே இயற்கை அன்னையின் சீற்றத்தை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியது.

 

1821ம் ஆண்டுக்குப் பின்னர் இம்மலை வெடித்துச் சிதறியது இப்போதுதான் என்கிறார்கள் இத்துறையின் நிபுணர்கள்.

 

இம்மலையின் அடிவாரத்தில் ஏறத்தாழ சுமார் 700 பேர் வரை வசித்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் இயற்கை அன்னையின் வளத்தை நம்பி வாழும் விவசாயிகளும், பண்ணையாளர்களுமே.

 

இம்மலை இப்படிச் சீற்றம் கொள்ளும் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லையாம். இவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்ட நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே.

 

கையில் அகப்பட்டதை எல்லாம் சுருட்டிக் கொMடு ஓடியிருக்கிறார்கள் இவர்கள். பாதுகாப்பான தொலைவிலுள்ள தங்குமிடத்திலிருந்து கொண்டு இம்மலையின் சீற்றத்தை அவதானித்த இவர்களுக்கு அக்கொதிப்பின் காரணத்தால் உருகி வெள்ளமாக ஓடி வந்த பனிமழை தாம் வசித்த அகுதிகளை அடித்துச் செல்வதை கண்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

 

இவ்வெரிமலைக் கொந்தளிப்பினால் எழுந்த கருமுகிலுடன் கலந்த சாம்பல் மேகம் சுமார் 20,000 அடிகள் வரை மேலெழுந்துள்ளது.

 

காற்றினால் ஜாஸ்லாந்திலிருந்து மேற்கு ஜரோப்பாப் பகுதி நோக்கி இக்கருமுற் கூட்டம் அடித்துச் செல்லப்பட்டு மேற்கு இஅரோப்பிய நாடுகைன் விமான பறப்பு எல்லைகளினுள் புகுந்து கொண்டது.

 

அல்லகல்லோலத்துக்கக் கேட்கவும் வேண்டுமா ? பெரும்பான்மையான மேற்கு ஜரோப்பிய நாடுகள் தமது விமானங்களினதும், பயணிகளினதும் பாதுகாப்பை முன்னிட்டு தமது விமான சேவைகளை முற்றாக நிறுத்தின..

 

கைகட்டப்பட்டு எதுவுமே செய்ய முடியாமல் விஞ்ஞானத்தில் கரைகண்டதாக தம்மைத்தாமே போற்றிக்கொள்ளும் இந்நாடுகள் முற்றும் முழுவதும் இயற்கையின் செயலில் தங்கியிருக்கவேண்டிய தேவையேற்பட்டது

 

.சுமார் ஆறுநாட்கள் செய்வதறியாது இயற்கையின் கைதிகளாஅய் நின்றிருந்த இந்நாடுகள் இப்போதுதான் இக்கருமுகில்களை எதிர்கொள்வதினால் விமானங்கள் எவ்வித பாதிப்புக்களுக்கும் உள்ளாஅக மாட்டா என்னும் உத்தரவாதத்தை விமானத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

 

விஞ்ஞானத்தின் வேட்கையின் வேகத்தை இயர்கை அன்னையின் சீற்றம் தடுத்து விட்டது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இயற்கைய சீரழித்து தமது வாழ்க்கை வளங்கலைப் பெருக்கிக் கொள்ளும் அநியாய வாழ்க்கமுரைகளைக் கட்டுப்படுத்தி தமது வளத்தின் செழிப்போடு, இயற்கைவளச் செழிப்புக்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

 

சக்தி சக்திதாசன்

22.04.2010

| Posted in சொல்லத்தான் நினைக்கிறேன்

Leave a Reply