Subscribe to RSS Feed

கண்டாலே ஓடுகின்றார்

on March 6th, 2010 by sakthi

புரியாமல் பேசுகின்றார் – ஏனோ
புதிராக வாழுகின்றார்
உணராமல் உளறுகின்றார் – வீணே
உதவாமல் உழலுகின்றார்

தெரியாமல் சாடுகின்றார் – அவரே
தெரிந்து விட்டால் மூடுகின்றார்
வழியெல்லாம் மாறுகின்றார் – பின்னர்
விதியென்று புலம்புகின்றார்

தேறாமல் வாழுகின்றார் – பாவம்
தேடாமல் தேடுகின்றார்
பாராமல் மொழிகின்றார் – தானாய்
பரிதவித்து வாடுகின்றார்

கீறாமல் கீறுகின்றார் – இதயத்தை
கிள்ளி விளையாடுகின்றார்
கண்டதைச் சொல்லுவதால் – என்னை
கண்டாலே ஓடுகின்றார்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

| Posted in கவிதை

Leave a Reply