Subscribe to RSS Feed

காலங்களில் அவன் வசந்தம்

on April 23rd, 2009 by sakthi

kannadasan2

காலங்களில் அவன் வசந்தம்
கவிகளிலே அவன் மகாகவி
பாடல்களில் அவன் பைரவி
படிக்காமலே உயர்ந்த மேதாவி

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆயிரம் நிலவுகள் காண்பதுண்டு
ஆயினும் அவன் போல் காணோம்
அவனின் பித்தாய் நாம் ஆனோம்

இரண்டுமனம் கேட்ட கவிஞன்
இதயத்தின் நினைவுகள் வாடாமலும்
இழந்திட்ட மகிழ்ச்சியை நினைக்காமலும்
இருந்திட மருந்தொன்று தேடியவன்

அதோ அந்தப் பறவை போல
அடிமை வாழ்வை உடைத்தெறிந்து
அனைத்து மக்களும் ஆழியின் அலை போல
ஆனந்தம் பொங்க வாழ்ந்திடச் சொன்னவன்

போனால் போகட்டும் விட்டு விடு
போகட்டும் கவலைகளை மறந்துவிடு
இருப்பது எதுவும் உனதில்லை என
இதயத்தை அமைதியில் ஆழ்த்திவிடு

இந்துவாகப் பிறந்தேனே மண்ணில்
இந்துவாக வாழ்ந்தேனா என்று நான்
இதயத்தைல் கேள்வி எழுப்பியபோது
இன்னிசைக் கவிஞன் தந்தான் பதில்

மண்ணில் நீ பிறந்தாயே மூடா
மனிதானாக வாழ்ந்தாயா எண்ணிப்பார்
மனிதனாக வாழ்ந்திருந்தால் நீ நிச்சயம்
மகத்துவத்தைப் பெற்றிருப்பாய் என்றான்

என்னிதய ஞானக்குருவே,
என் கவிதைகளின்  மூலமே
உன் பிறந்தாநளில் என்னை
உண்மையான மனிதனாக மீண்டும்
உயிர்ப்பிக்கும் செயலதுவே நானுனக்கு
உண்மையில் செய்யும் காணிக்கையாகும்

என் சிரந்தாழ்த்தி உன் ஆசி வேண்டுகிறேன்
கவியரசே ! கண்ணதாசா !

| Posted in கண்ணதாசனின் நினைவுகளில்

Leave a Reply