Subscribe to RSS Feed

கண்ணதாசன் நினைவுகளில் … 2

on March 22nd, 2009 by sakthi

kannadasan2

அன்பு நெஞ்சங்களே !

இதோ மீண்டும் ஒரு கண்ணதாசன் பாடலுடன்.

பாக்கியலட்சுமி என்னும் படம். இதிலே குணச்சித்திர நடிகை செளகார்ஜானகி
அவர்கள் பாடுவதாக ஒரு காட்சி. அவருக்கு விதவைக்கோலம். கானக்குயில்
பிசுசீலாவின் தேனினும் இனிய குரல் கவியரசரின் அற்புத வரிகளுக்கு
உயிரூட்டுகிறது.

நான் கண்னை மூடி ரசித்துக் கேட்கும் ஒரு பாடல்

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்
     கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
     காரணம் ஏன் தோழி ?

தோழி வீ\ணை வாசிக்கிறாள் அவளருகே அவள் கணவன் அமர்ந்து பாடலை ரசிக்கிறான்.
பாவம் இவள் விதவையல்லவா தனது மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தையாக
வடித்து விட்டாள் எங்கே தவறாகப் போய்விடுமோ என்று அஞ்சி தோழியிடம்
வினவுகிறாள்.

இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள்
      என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
      காண்பது ஏன் தோழி ?

ஒரு இளம் விதவைக்கு இன்பம் எங்கே வரும் கனவில்தானே, ஆனால் அவள் நிஜத்தில்
எதிரில் கான்பது எல்லையற்ற துன்பம் தானே. இதனில் தத்துவம்
கூறுகின்றாராம்.  இன்பம் சிலநாள், துன்பம் சிலநாள் என்று. யார் அந்தத்
தத்துவவாதி ? எங்கே அவரைக் கூட்டிவா நான் கேட்கிறேன் எங்கெ எனது
சிலநாட்களின் இன்பம் என்று.

அழகாக கவியரசர் எத்த்னை துல்லியமாக வார்த்தைகளுடன் விளையாடுகிறார்
பாருங்கள்.

மணமுடித்தவர் போல் அருகினிலே அவர்
    வடிவு கண்டேன் தோழி
மங்கையின் கையில் குங்குமம் தந்தார்
    மாலையிட்டார் தோழி.

பால்ய வயதில் விவாகம் முடித்தவள?. கல்யாணம் என்பதுவே கனவில் தானே
அவளுக்குத் தெரிகிறது. கண்வன் இத்தனை வருடங்களின் பின்னர் எப்படி
இருப்பான்? ஒரு வடிவத்தைக் கற்பனை செய்து கண்டு கொள்கிறாள். எது அவளுக்கு
வாழ்வில் அதை அவன் கொடுப்பதாகக் காணுகிறாளாம்.

வழிமறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
    சாய்ந்துவிட்டேன் தோழி – அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே
    மறந்து விட்டார் தோழி –
        மறந்து விட்டார் தோழி

ஆமாம் அவள் விதைவையல்லவா? ஒரு நிமிடம் தன் நிலை மறந்து கனவினில் வந்தவன்
நெஞ்சில் சாய்ந்து விட்டாளாம். மறக்க மாட்டேன் என்று உறுதியளித்தவன்
கண்களைத் திறந்தவுடனேயே மறைந்து போனான், ஆமாம் மறந்துதான் போனான்.

விதவையின் ஏக்கத்தை அருமையான் வரிகளின் மூலம் எமக்கு உணர்த்துகிறார்
இந்தக் காலத்தால் அழியாத கவியரசர்.

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
     கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
     பிரிந்தது ஏன் தோழி?

வந்தவர் கணவர் என்று தானே சொன்னார். கண்வர் என்றால் கல்யாணத்தின் மூலம்
பிணைக்கும் ஆயுள்கால உறவல்லவா? ஜயகோ ! எப்படி கண்ணைத் திறந்ததும் கனவு
முடிந்ததும் பிரிந்து சென்றார்? தெரியவில்லையே நீயாவது கூறமாட்டாயா தோழி?
ஏக்கத்தின் பிரதிபலிப்பு அந்த இளமங்கையின் நெஞ்சத்தில் எகிறிப்பாய்கிறது.

ஆமாம் இத்தகைய உணர்வுகளை எமது இதயங்களில் பாடல்வரிகள் மூலம் உராய
விடுவதற்கு கவியரசைத் தவிர வேறுயாரால் முடியும்?

இளமையெல்லாம் வெறும் கனவுமயம்
    இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
   மயங்குது எதிர்காலம் –
      மயங்குது எதிர்காலம்

ஆமா இளமையிலே விதைவைக்காலம் பூண்டுவிட்ட அந்த வண்ணமயிலின் இளமைக்கால
இன்பங்கள் கனவுலகில் தானே, அந்தக் கனவுலகக் காலங்களிலேயே கழிந்து விட்டது
அவளது வாழ்க்கையில் சிலகாலம்.

அவளுக்கு என்னதான் எதிர்காலம்? விதைவையாகி விட்ட அவளுக்கு மறுவாழ்வு
கொடுக்க யாராவது முன்வருவார்களா? அவளது வீணையில் இன்பராகத்தை இசைக்கக்
காலம் யாராவது ஒரு கலைஞனைத் தருமா? உஆருக்குத் தெரியும் முடிவு? இந்தக்
கேள்விகளாஅல் மயங்குவதைத் தவிர அந்த பாவப்பட்ட இளம்பெண்ணால் வேறு
என்னதான் செய்துவிடமுடியும்?

அன்பு நெஞ்சங்களே ! இந்த இனிமையான் கானம் எப்போது எனக்கு சோகத்துடன்
கூடிய ஒரு அமைதியைத் தரும். நீங்கள் கேட்டிருந்தால், இனி கேட்டால்
ரசித்திருப்பீர்கள், ரசிப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.

அன்புடன்
சக்தி

 

| Posted in கண்ணதாசனின் நினைவுகளில்

Leave a Reply