Subscribe to RSS Feed

கண்ணதாசன் நினைவுகளில் …. 1

on March 22nd, 2009 by sakthi

kannadasan3

 

அன்புநெஞ்சங்களே !

 

கவியரசர் சங்ககாலப் பாடல்களில் வந்த கருத்தை எளிமையான தமிழில் மக்கள்

மத்தியில் கொண்டு வந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

 

அவர் இதை ஏதோ தான் பெரிய இலக்கியவாதி அனைவருக்கும் தமிழ் புகட்டுகின்றேன்

என்று அவர் இதைச் செய்யவில்லை. சங்ககாலப் பாட்ல்களை நன்கு ரசித்தார்,

அதினுள்ளே புதைத்து வைக்கப்பட்ட அர்த்தங்களைக் கண்டு வியந்தார், அவரது

ஆர்வமேலீட்டால் தனது பாடல்களில் அவற்றினைப் புககுத்தினார்.

 

 

அப்படியான சில பாடல்களாஇ உதாரணத்தினோடு உங்க\ளுடன் பகிர்ந்து கொள்ள

ஆசைப்படுகிறேன்.

 

 

1) காதல் என்பது அரிவின் வழி வருவது அல்ல, உணர்வின் வழி வருவதே.

தலைவியும், தோழியும் சேர்ந்திருக்கும் போது, தோழி தலைவியிடம் தலைவனைப்

பற்றிப் பழித்துப் பேசுகிறாளாம். பொறுக்குமா தலைவிக்கு ? இதோ பாராடி எமது

காதல் எத்தகையது தெரியுமா? எத்துணை சிறந்து என்று உனக்குப் புரியுமா ?

என்று கேட்டுப் பின்வருமாறு கூறுகிறாள்

 

 

நிலத்தினும் பெரிதே வானினும், உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவு, இன்றே சாரல்

கருக்காற்குறிஞ்சி, பூங்கொண்டு

பெருந்தேன் இழைக்கும், நாடனோடு நட்பே

 

 

இது குறுந்தொகையில் வந்ததொரு பாடல். தோழியைப் பார்த்துத் தலைவி தம்முடைய

காதல் உறவுக்கு நிலத்தையும், நீரையும், வாணையும் உவமையாகக் காட்டுவதாக

அமைகிறது இப்பாடல்.

 

 

விடுவாரா நம் கவியரசர்? கருத்தால் கவரப்பட்ட அவர் இந்தக் கருத்துக்களை

தனது பாடல் ஒன்றில் எவ்வாறு இணைக்கிறார் என்று பாருங்கள்.

 

 

நிலவும் வானும் நிலமும் நீரும்

ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ ?

நீயும் நானும் காணும் உறவு

நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ ?

 

 

எப்படி விளையாடுகிறார் வார்த்தைகளோடு ? எத்தனை எளிமையாக இவ்வுமைகளாஇப்

புகுதியிருக்கிறார் தம் பாடலில்.

 

 

2) மற்றுமோர் உதாரணத்தைப் பார்ப்போம்

 

 

எங்கோ எதுவித உறவுமின்றிப் பிறந்த இருவர் காதல் என்னும் உணர்வு கொண்டு

இழைக்கப்பட்ட இழையினால் இணைக்கப்படுகிறார்கள். தூயமழைநீரானது செம்மண்

மீது விழுகையில் அதன் நிறதைப் பெறுகிறது அல்லவா ? அதைப்போல ஒன்றின் மீது

ஒன்று விழிந்து கலந்த நெஞ்சங்களும் ஒருமையான உணர்வைப் பெறுகின்றதாம்.

 

 

இதை விளக்கும் பாடல் ஒன்று

 

 

யாவும், ஞாயும் யார்ஆ கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

 

 

இந்த அருமையான பாடல் தந்த கருத்துக்களின் சாரமாக எமது கவிதைக் கடல்

கவியரசர் தனது பாடலில் புகுத்திய வரிகளைப் பார்ப்போமா ?

 

 

நீ யாரோ நான் யாரோ தெரியாது – இன்று

நேர்ந்தது என்னவென்று புரியாது

 

 

மீண்டும் அவரது அற்புதக் கல்வையின் சுவையை உணர்கிறீர்களா?

இலக்கியத்துக்குள் புதைந்திருக்கும் இனிமையைத் தோண்டி எளிமையான தமிழ்

எனும் தேன் தடவி எமது செவிகளை குளிரப்பண்ணும் தீறமையை ரசித்தீர்களா ?

 

 

மீண்டும் இன்னும் சுவையான செய்திகளுடன் சந்திக்கிறேன்

 

 

அன்புடன்

சக்தி

 

 

( நன்றி: கண்ணதாசன் கவி இன்பம்)

 

| Posted in கண்ணதாசனின் நினைவுகளில்

Leave a Reply