Subscribe to RSS Feed

நண்பனுக்கொரு மடல்

on March 20th, 2009 by sakthi

அன்பு நண்பா !

 

பொருளாதாரச் சந்தையில்
பூகம்பம் அடிக்குதடா
பொங்கிடும் அதிர்வலைகள்
புது அகிலம் வரையுதடா

 

பேராசை
பெருகியதால் உலகில்
பெரும் பணமுதலைகள்
பலசேதம் புரிந்து விட்டார்

 

கால காலமாய் உழைத்தவர்கள்
காணவில்லை ஒரு லாபம்
கணநேர விளையாட்டில்
கலைத்துவிட்டார் அவர் வாழ்வை

 

பணம் கொண்டோர் பலர் என்றும்
மனம் கொண்டு வாழ்ந்ததில்லை
பணமின்றித் தவிப்போரின்
பரிதாபம் அறிவதில்லை

 

அள்ள அள்ளக் குறையாது என்றே
அள்ளுமட்டும் அள்ளி எடுத்து
அனைத்தையும் சிதைத்து விட்டார்
பணவுலக மேதைகள் என்போர்

 

ஒரு சோற்றுப் பருக்கைக்காய்
ஓடிக்கொண்டிருக்கும்
என்னருமைத் தோழனோ
ஓட்டத்தின் வேகத்தை
ஓய்ச்சலின்றிக் கூட்டி விட்டான்

 

நண்பா !

 

கண்ணிரும் காயவில்லை – அவர்
காய்ந்த வாயிறு நிறையவில்லை
மறுபக்கம்
சேர்த்து வைத்த பணத்தின் மதிப்பு
குறைந்ததென்று கூப்பாடு
குவலயத்தில் இதுதான் நிலை

 

பணவீக்கம், பொருளாதாரச் சந்தை
வங்கிகளின் நெருக்கடி நிலை
அழகழகாய் வார்த்தைகள்
அடுக்கிக் கொண்டே போகிறார்
பாவம் எந்தன் ஏழைத்தோழனின்
அழுகை மட்டும் ஓயவில்லை

 

மறுநேர உணவு
வரும் வழியும் தெரியாமல்
வாழ்க்கை போடும் சூட்சுமத்தின்
வகையன்றும் புரியாமல்
அல்லாடும் சாஅன்ய மனிதனுக்கு
அறிவுநிறை புத்திஜீவிகளின்
அழகான் விளக்கங்கள்
விருந்துதனை விளைத்திடுமோ ?

 

சிந்திக்கும் போது ஏனோ நண்பா
சிந்தை கொதிக்கிறது…..

 

காலங்கள் தான் கடந்துததுவே ஒழிய
ஏழை மக்கள் வாழ்வினிலே
எதுவிதமான உயர்ச்சியில்லை

 

ஆயிரம் மேடைகள்…. நண்பா
அலங்காரப் பேச்சுகள்
ஆயினும் என்ன ?
அடிமட்டத் தொழிலாளி
அடிமட்டத்திலிருந்து
அங்குலமேனும் நகரவில்லை

 

புரிகிறது நண்பா !
புன்னகைக்கிறாய் ……
ஆமாம் நாம் ஆறறிவு படைத்த
மனிதர்கள்… இல்லை … இல்லை
மிருகங்கள் ?????

 

அன்புடன்
சக்தி

| Posted in நண்பனுக்கு ஒரு மடல்

Leave a Reply