Subscribe to RSS Feed

வாழ்க்கைப் பயணம்

on March 15th, 2009 by sakthi

எமது வாழ்க்கையை எமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டிருப்பதாக ஓர் எண்ணத்தினில் நாம் இந்த உலகில் உழன்று கொண்டிருக்கின்றோம். நாமெல்லாருமே சிறுவயது முதல் எமது எதிர்காலத்தைப் பற்றி ஓர் திட்டத்தை சிறிய அளவிலாவது தயாரித்து வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

 

எமது வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகின்றோம் , எமது மனைவி அல்லது கணவன் எப்படி இருக்க வேண்டும் , இல்லற வாழ்வினிலே கணவன் அல்லது மனைவியுடன் எப்படி பழக வேண்டும் என்பது பற்றி ஓர் அனுமானம் கொண்டிருப்போம். இவை எமது அகப்புற சூழ்நிலைகளினால் உருவாகும்.

 

அதாவது எமது தாய் தந்தையருக்கிடையில் இருக்கும் உறவுமுறை , அன்றி நாம் அடிக்கடி பழகும் நெருங்கிய உறவினர் மத்தியில் நிலவும் உறவுமுறை ஆகியவற்றின் தாக்கங்களினால் எமது மனத்தினில் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும்.

 

எம்மில் எத்தனை பேர் நாம் நினைத்தபடியே எமது வாழ்க்கையை அமைக்கின்றோம் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் சொற்பமானவர்களே எனக் கூறலாம். இதன் காரணம் எமது வாழ்க்கை எமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதுவே உண்மையாகும். எமது சூழ்நிலை , எமது மனப்பான்மை , எம்மைச் சுற்றியுள்ளவர்களின் உறவுமுறையின் தாக்கம் எமது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து விடுகின்றது என்பது உண்மை.

 

இதை ஏற்றுக்கொள்ள எம்மில் பலர் மறுத்தாலும் இது ஓர் யதார்த்தமான உண்மை நிலையாகும். இந்த நிலையில் எவ்வாறு நாம் அமைதி அடைவோம் ?  ஆற்றுவெள்ளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஒருவன் அதைக்கடப்பது என்பது அவனைப்பொறுத்தேயுள்ளது. வெள்ளம் ஓடும் திசைக்கு எதிராக கடக்க முற்பட்டால் அவனது பயணம் கடினமாகின்றது.

 

அதேசமயம் அவன் அந்த ஆற்றை வெள்ளத்தின் திசையினேலேயே சென்று கடக்க முற்பட்டால் மிகவும் இலகுவாக கடந்து விட முடியும்.

 

சேர எண்ணிய இடத்தைவிட சிலஅடி கடந்து மறுகரையை அடைந்தாலும் பயணம் இலகுவாகின்றது. இதைப்போலவே சிலசமயங்களில் வாழ்வில் நடைபெரும் எதிர்பாராத சம்பவங்களை எதிர்ப்பதைக்காட்டிலும் அதன் பாதையில் சென்று இலக்கை அடைவது சிரமத்தை குறைக்கும்.

 

எமது கையில் ஒன்றும் இல்லை ஆனால் ஆண்டவன் போட்ட விதி எனும் பாதையில்நாம் வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யும் போது நம்பிக்கை என்னும் பெற்றொலை உபயோகித்தால் பயணம் இலகுவாகின்றது.

 

என்மனதினில் விழுந்த இந்தச்சிதறலை பகிர்ந்துகொள்ள உதவிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

| Posted in சத்தமுமில்லை யுத்தமுமில்லை

Leave a Reply