Subscribe to RSS Feed

மன்னிக்க வேண்டுகிறேன்

on January 11th, 2009 by sakthi

0060-0502-1819-31211

 

தெரிந்து ஒரு தப்பையோ, அல்லது தெரியயமல் ஒரு தவறையோ புரிந்து விடுகிறோம். அதன் விளைவு பாரதூரமாக இல்லாதவரை ” மன்னிப்பு ” என்று ஒரு சொல்லால் புண்பட்ட மனதைப் பண்படுத்தக்கூடிய ஆற்றல் நம் அனனவரிடத்திலும் இருக்கிறது.

ஆனால் ஏனோ எல்லோராலும் இதை உளச்சுத்தியோடு பயன்படுத்த முடிவதில்லை. காரணம்            ” மன்னிப்பு ” என்னும் அந்த ஒரு சொல்லை ” நான் ” என்னும் சொல் மறைத்து நிற்கிறது. மன்னிப்புக் கேட்க வேண்டிய மனிதர், மன்னிப்புக் கேட்கவேண்டியவரின் உள்ளத்தில் எந்த அந்தஸ்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதிலேயே பெரும்பாலும் அவரது முடிவு தங்கியிருக்கும்.

தவறு அன்றித் தப்பு தம்பக்கம் இருந்தால் அது இழைக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்பதில் எந்தவிதமான கெளரவக் குறைச்சலும் இல்லை என்பதை நம்மில் பெரும்பான்மையோர் உணரத் தவறி விடுகிறோம். ஒருவர் மீது ஆத்திர உணர்ச்சியினால் பாய்வதில் உள்ள அவசரம், தான் கொண்டிருந்தது தவறான அபிப்பிராயம் என்று தெரிந்ததும் அவரிடம் மன்னிப்புக் கேட்பதில் இருப்பதில்லை.

எமது செயல்களுக்கு ஏதாவது ஒரு காரணம் என்னும் சாயத்தைப் பூசி எமது மனட்சாட்சிக்கு மறைத்துவிடும் வல்லமை பெற்றவர்களாகப் பலர் காணப்படுகிறோம்.

” மன்னிப்பை ” மனதாரப் புரிந்து கொண்டு அது கொடுக்கும் மானசீக அமைதியை அனுபவிக்கப் பழகிவிட்டால் அதைப்பிரயோகிப்பது இலகுவாகி விடும்.

அன்புடன்                                                                                                                                                                                                         சக்தி

| Posted in உன்னை ஒன்று கேட்பேன் ....

Leave a Reply