Subscribe to RSS Feed

ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்

on August 24th, 2010 by sakthi

சிந்தனைசெய் மனமே ! செய்தால்தீவினை அகன்றிடுமே ! என்னும்ஒரு பாடலை எம்மில் அநேகம்பேர் கேட்டிருப்போம். இப்பாடலின் கருத்துக்கள்  இறையுணர்வையும்,ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்பட்ட பாடலாதலால் இறைநம்பிக்கை  அற்றோர் இதைக் கணக்கிலெடுக்கத் தயங்கக்கூடும். பாடலின் கருத்தையோ,அதுகூறும் சராம்சமான இறையுணர்வையோ தவிர்த்து நான் மேலே குறிப்பிட்ட இரு வரிகளை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள். அவ்வரிகள் சொல்லும் கருத்து மிகவும் எளிமையாக  இருக்கிறது  அல்லவா? சிந்தித்துச் செயலாற்றும் போது அச்செயலின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. சிந்திக்கும் திறன் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் கிடைத்த […]

Continue reading about ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் ...., சொல்லத்தான் நினைக்கிறேன், நண்பனுக்கு ஒரு மடல், பிறமொழித் தழுவல்கள் | 4 Comments, Join in »
Subscribe to RSS Feed

மறுபடி . . . . மனிதர்கள் . . . மத்தியில் . . .

on August 7th, 2010 by sakthi

அந்தி மாலைக் கருக்கலிலே சிந்தும் மஞ்சள் வெய்யிலிலே சொந்தம் தேடும் அன்றில் ஒன்று நெஞ்சம் பொங்க ஆடுதம்மா முற்றம் தன்னில் துள்ளி ஓடும் சுற்றம் சூழ்ந்த பொழுதினிலே மாற்றம் கொண்ட மனதுடன் மயங்கித் தானும் பாயுதம்மா பிந்தித் தனது தேவைக்காக முந்தித் தேடிய காய்களை சிந்திக் கிளறிய தரையினுள்ளே தந்திரமாகவே புதைக்குதம்மா இயற்கையின் அழகிய சிருஸ்டியை இதய மகிழ்வுடன் பார்த்திருந்தேன் மறுபடி என்னை வஞ்சக உலகில் மனிதர்கள் மத்தியில் நிறுத்திய நிஜமே ! சக்தி சக்திதாசன்

Continue reading about மறுபடி . . . . மனிதர்கள் . . . மத்தியில் . . . »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவிதையாக்கித் தாராயோ !

on August 7th, 2010 by sakthi

பூவின் மீது வந்தமர்ந்து தேனருந்தும் வண்டினமே ! தேனருந்தும் வேளையிலே நீயுணரும் உணர்வுகளை கவிதையாக்கித் தாராயோ ! வசந்தகாலச் சோலயிலே இளங்காலை வேளையிலே ஆலமரத்துக் கிளைகளிலே அமர்ந்து பாடும் குயிலினமே கூவும் அந்த ஓசைகளை செந்தமிழின் வரிகளாலே கவிதையாக்கித் தாராயோ ! மாலைவேளைப் பொழுதினிலே மலரீந்த செடிகளை மிருதுவாக வருடிச் செல்லும் மெல்லினிய தென்றல் காற்றே பச்சிலையின் பசுமை தன்னைப் பைந்தமிழின் வரிகளாலே கவிதையாக்கித் தாராயோ ! உழைத்துக் களைத்த அந்தப் பகலென்னும் இனிய மங்கை உடல்மூடிக் […]

Continue reading about கவிதையாக்கித் தாராயோ ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவியரசருக்கு காணிக்கை

on August 7th, 2010 by sakthi

ஏதோ உன் நினைவுகள் என்னெஞ்சைத் துளைக்கின்றன எத்தனை வகை பாடல்கள் எமக்கு அள்ளித் தந்தாய் உன்னைச் சுற்றி ஓடும் என் நினைவுகள் என்னைச் சுற்றிப் பின்னும் கவிதை வரிகள் விண்ணை சுற்றிப் பறக்கும் கற்பனை மண்ணில் இறக்கும் நிஜத்தின் பாரங்கள் சிறுகூடல் பட்டி இன்று தலைநிமிர்ந்து சத்தமாய்ச் சொல்லுவதும் கவிஞனே முத்தையா என்னும் உன் பெயர் தானே மொத்தமாய் உள்ளங்களைச் சிறையெடுத்தாயே ! தமிழெந்தன் நெஞ்சில் தானாக ஊறும் தவழ்ந்தோடும் உன் நினைவுகள் தானே தருகின்றன கவிதை […]

Continue reading about கவியரசருக்கு காணிக்கை »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவிபாடிக் கதைசொல்ல

on August 7th, 2010 by sakthi

கவிபாடிக் கதைசொல்ல கண்மூடித் துயில் மறந்து விண்ணேகும் நினைவலைகள் விழியோடு உறவாட மையழகு புருவம் சேர்த்து வேல்விழியாள் இதழ்சிந்தும் தேன் துளிகள் சுவைகூட்டி தான் தருவாள் மடிதாங்கி யாழெடுத்து இசை கூட்டி நீயிசைத்த தமிழ்க் கானம் பூவசைந்த போதுதித்த தென்றலதன் மென்மையான அணைப்பதனை ஏனெனக்கு உணர்வித்தன கூறாயோ ஏந்திழையே ! தானாக வந்ததிந்த தமிழூற்று என்நெஞ்சில் கனியுமந்தக் காதல் கூட காற்றோடு கலக்குமிங்கே தேனாற்றில் நீராடும் இன்பம் தீந்தமிழைப் பேசும் வண்ணம் சேர்ந்தென்னை மயக்குதம்மா தமிழென்னை உருக்குதம்மா […]

Continue reading about கவிபாடிக் கதைசொல்ல »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உண்மை வேதம் காண்பீர்

on August 7th, 2010 by sakthi

தண்ணீர்க் குடத்தை இடுப்பில் தாங்கி தாயின் சுமையில் தான் பாதி வாங்கி தீயின் முன்னே நாளும் கருகி வதங்கி தான் வளர்ந்தாள் அந்தச் சிறுமி ஊரின் பார்வை அம்பாய்த் தைக்க உள்ளம் முழுதும் ஏக்கம் வாட்ட உண்மை ஆசைகள் வெம்பி வாட உருகி வாழ்ந்தாள் கன்னிப்பெண்ணாய் குடும்பச் சுமையை தணிக்கத் தன்னை குடிக்குள் விழுந்தவனின் பின்னே குலத்தின் விளக்காய் தொடர்ந்தாள் பெண்ணே குவலயத்தில் அவள் பெயர் மனைவி போதை தணிக்கும் காமப்பொருளாய் பொழுதும் இரவும் காய்ந்தே சருகாய் […]

Continue reading about உண்மை வேதம் காண்பீர் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனே ! ஆருயிர் நண்பனே !

on August 3rd, 2010 by sakthi

உறவுகளே நேற்று 03.08 அன்று எனது ஆருயிர் நண்பன் ரவிக்கு பிறந்தநாள். ஈழத்தில் நான் இளம் வயதில் துள்ளித் திரிந்த நாள் கூடி எனக்குத் தோள்ள் கொடுத்த உற்ற நண்பன். நட்பு என்னும் உண்மையான பாசம் உதிரத்தின் உறவைக்கூட மிஞ்சக்கூடியது என்பதை எனக்கு உணர்த்திய அற்புத, அபரித நட்புக்கு உரியவன். எனது “”நண்பனுக்கு ஒரு மடல்”” என்னும் கவிதைகளில் பெரும்பான்மையானவை அவனுடன் சம்பாஷிப்பதைப் போன்ற ஒரு நினைவினிலே தான் வரையப்படுகின்றன. இதோ அவனது பிறந்த நாளின் போது […]

Continue reading about நண்பனே ! ஆருயிர் நண்பனே ! »

Category: உள்ளத்தின் ஓசை, கவிதை | No comments yet, be the first »