Subscribe to RSS Feed

காற்றோடு கலந்து கடலோடு மிதந்து

on June 30th, 2010 by sakthi

    தாய் மண்ணின் மடிதனிலே தவழ்ந்தந்தப் பொழுதினிலே தமழ்மொழியின் வாசத்திலே தனை மறந்த வேளையிலே   சந்தமெனும் தாழையிலே தமிழ் சொல்லென்னும் பூத்தொடுத்து சிந்துகின்ற தேன் துளி போல் பைந்தமிழில் கவி சமைத்து   நித்தமொரு தாமரையாய் என் நெஞ்சமெனும் தடாகத்தில் பூத்த பல தாமரைகள் புதைத்து வைத்த சிந்தனைகள்   சத்தமின்றிக் கூவி நிற்கும் சித்திரத்துப் பூங்குயில்கள் யுத்தமின்றிப் பொருதி நிற்கும் மிதித்து வந்த அனுபவங்கள்   காததூரம் கடந்து இன்று கதறுகிறேன் தாய்மொழியில் […]

Continue reading about காற்றோடு கலந்து கடலோடு மிதந்து »

Category: கவிதை, தாய்மண் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உன்னைத் தேடி நான் வருவேன்

on June 30th, 2010 by sakthi

  உன்னைத் தேடி நான் வருவேன் உள்ளம் தனைத் தான் தருவேன் உயிரில் உன்னைக் கலந்திடுவேன் உணர்வினில் கரைந்து மறைந்திடுவேன் தூக்கம் தன்னைத் தொலைத்திடுவேன் நோக்க மின்றி அலைந்திடுவேன் ஏக்கம் கொண்டே காத்திருப்பேன் நீக்கமின்றி நினைவுகளில் நீந்திடுவேன் இதயம் என்னும் மாளிகையில் உன்னை இருத்தி நானும் மகிழ்ந்திருப்பேன் உதயம் தோறும் விழித்ததுமே ஏனோ உந்தன் வதனம் தேடிடுவேன் வையகம் தன்னில் வாழும் வரையில் வஞ்சி உன்னை மறந்திடா வகையினில் நெஞ்சம் முழுவதும் எண்ணம் கொண்டு துஞ்சும் உன் […]

Continue reading about உன்னைத் தேடி நான் வருவேன் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

என்னருகே நீ

on June 29th, 2010 by sakthi

 மனமெல்லாம் நொறுங்கி உடைந்து போன பனித்துகள்களாய் சிதறியபோது உறைந்து கொள்ளும் பாறையாய் உன்னதமான என்னருகே நீ !   அலைந்து திரியும் மேகங்களாய் உள்ளம் சிதைந்தபோது ஏந்திக் கொள்ளும் நீலவானமாய் என்னருகே நீ !   காய்ந்து போன சருகுகளாய் உலர்ந்து போன எண்ணத்துளிகள் உதிரும்போது பஞ்சுமெத்தை போல் தாங்கிக்கொள்ளும் பசும்புல்லாய் என்னருகே நீ !   கலைந்து போகும் வானவில்லாய் விரிந்து போன நினைவலைகள் விலகிக் கொஞ்சம் செல்லும்போது அணைத்து ஒன்று கூட்டிக் கட்டும் அன்புக்கயிறாய் […]

Continue reading about என்னருகே நீ »

Category: கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

உள்ளத்தை எரித்து விடு

on June 24th, 2010 by sakthi

உள்ளத்தை எரித்து விடு – இல்லையேல் உன் நினைவுகளைப் பறித்து விடு எண்ணங்களைக் கொன்று விடு – இல்லையேல் ஏகாந்தத்தை ஒழித்து விடு பருவத்தை மறைத்து விடு – இல்லையேல் பாவையரை ஒளித்து விடு கனவுகளைக் கலைத்து விடு – இல்லையேல் கண்ணுறக்கம் தவிர்த்து விடு

Continue reading about உள்ளத்தை எரித்து விடு »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on June 23rd, 2010 by sakthi

      அன்பு நண்பா !   விளைவுகள் தெரியாமல் வளைவுகள் புரியாமல் இதுதான் பாதையென்றும் அதிலே பயணமென்றும் எத்தனை கண்ணுள்ள குருடர்கள் என் முன்னே இடறினர் அறிவாயா ?   தவறென்னும் வழியினிலே அடம்பிடித்துச் செல்வதும் அங்கொரு குழியினில் ஆழமாய் விழுவதும் ; அப்பப்பா ! இவர்களின் பிடிவாதப் போக்குகள் முடியாத வழக்குகள் தீர்க்காத கணக்குகள்   இன்றொரு கோடிட்டால் அது நாளையெனும் வரைபடத்தில் நீ வரையும் சித்திரம் அது அழகாக அமைவதும் அலங்கோலமாய் […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

விடிந்ததுவோ எந்தன் உலகம் ?

on June 23rd, 2010 by sakthi

    ஆற்றோரம் நான் நடந்தேன் மாற்றோடு சேதி சொன்னேன் நேற்றோடு நிகழ்ந்ததெல்லாம் காற்றோடு பறக்க விட்டேன்   குழல் போன்ற சடையினிலே முல்லை மலர் சூட்டி வந்தவளும் முகில் மூட மறைந்து விடும் வான் நிலவாக தேய்ந்து விட்டாள்   உள்ளமெனும் முன்றலிலே ஆசைத் துளித் துளியாய்ப் பொழிந்த அந்த நாளின் உணர்வுகளாய் ஆகியதோ அக் காதல் மழை   பூந்தோட்டக் காவல்காரன் பூப்பறிக்க முடியாமல் மலரில்லா மாலையோடு மனை சென்ற காலமது   நட்பென்னும் […]

Continue reading about விடிந்ததுவோ எந்தன் உலகம் ? »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

எதிர்த்திடு துன்பத்தை

on June 23rd, 2010 by sakthi

 நினைவுகளாய் ! நினைவுகளாய் ! பேதை உள்ளத்தில் நிறைந்தனவே ! நிறைந்தனவே ! காதல் எண்ணங்கள்   கனவுகளாய் ! கனவுகளாய் ! ஏழை நெஞ்சத்தில் கலைந்தனவே ! கலைந்தனவே ! ஊறிய எண்ணங்கள்   புனைவுகளாய் ! புனைவுகளாய் ! கவிதை வார்ப்புக்கள் புலர்ந்தனவே ! புலர்ந்தனவே ! எஞ்சிய ஏக்கங்கள்   வினவுகிறாள் ! வினவுகிறாள் ! வாழ்க்கையின் அர்த்தங்கள் விளைவுகளாய் ! விளைவுகளாய் ! வேதனை உணர்வுகளே   முனைவுகளாய் ! முனைவுகளாய் […]

Continue reading about எதிர்த்திடு துன்பத்தை »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல் (2)

on June 22nd, 2010 by sakthi

  கண்ணும், கண்ணும் ஒன்றன் மேலொன்று படர்ந்ததினால் வியந்த இதயத்தின் விரிப்புக்குள் மற்றோர் இதயம் முடங்கிக்கொள்ளும் நிகழ்வே காதல். தன்னைத் தானே மறத்தலும், தன்னிலை வெறுத்தலும் காதலின் பொதுத்தன்மை..   உள்ளத்து உணர்வுகளை கள்ளமாய், உள்ளம் கொள்ளை கொண்டவனின் நினைவுகளையோ அன்றி உள்ளம் கொள்லை கொண்டவளின் நினைவுகளையோ வெள்ளமாய் தேக்கி வைத்து, தாகம் தீர்க்க கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகும் ஒரு உன்னதத்தன்மை காதலுக்கே உரித்தானது.   த்தகையதொரு காதல் வேளையதை மனதில் கொள்ளுங்கள், தன் உள்ளம் கொள்ளை […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் (2) »

Category: இலக்கியத்திடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்ணதாசனின் பிறந்தநாளில்

on June 21st, 2010 by sakthi

  ஜூன் 20 திகதி என் உள்ளத்தின் மத்தியில் உணர்வுகளின் சங்கமிப்பில் உயிர்வாழும் கவியர்சர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த்நாள். அப்பொன்னாளில் என் கவிவேந்தனுக்கு அன்னைத் தமிழ் சொல் கூட்டி கவிமாலை சாத்துகிறேன்.   அன்புடன் சக்தி   தவமிதுவே ! தவமிதுவே !     கவியரசே ! நீ பிறந்ததினால் அன்னைத் தமிழ் சிறந்ததுவா ? இல்லை தமிழ் சிறந்ததென்பதால் – தமிழனாய் நீ பிறந்தாயா ?   அமாவாசையாய் மறைந்து விடும் நிலவு . […]

Continue reading about கண்ணதாசனின் பிறந்தநாளில் »

Category: உள்ளத்தின் ஓசை, கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல்

on June 13th, 2010 by sakthi

    இன்று காலை என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழுந்த உயிரெழுத்து குழுமத்தின் அஞ்சல் தொகுப்பின் வாயிலாக பார்த்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.   ஆமாம் லண்டன் சுரங்க ரயில் பாதையில் உள்ள விளம்பரப் பலகை ஒன்றில் குறுந்தொகையும் அதன் ஆங்கில விளக்கமும் காணப்படுகிறது என்ற செய்தியே அது.   மதுரையில் செம்மொழி மாநாடு ஆரம்பமாகப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இச்செய்தி என் காதில் விழுந்தது என்னை ஒருமுறை உலுக்கியது.   குறுந்தொகை […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் »

Category: இலக்கியத்திடல், கட்டுரை | 1 Comment, Join in »