on May 30th, 2010 by sakthi
நியாயத்தின் நிழலில் உண்மைகள் தூங்குகின்றனவோ ? பொய்மையின் வாசத்தில் சத்தியங்கள் தமை மறந்து கண்களை மூடி விட்டனவோ ? மனம் போன போக்கில் திசையற்று சென்று கொண்டே வெற்றியின் பாதையில் செல்வதாக கனவு காணும் மானிடனே . . . அகந்தை எனும் காரிருள் மனிதம் என்னும் பகலை முற்றாக மூடி உன் வாழ்வை இரவாய் மாற்றி வைத்திருக்கும் உண்மைதனை ஏன் தானோ நீ அறியாமல் வாழ்கின்றாய் கண்ணில் காணும் மாயைகளை நிஜம் என்று நம்பி நீயும் […]
Continue reading about பாதைதனை மாற்ற முடியுமா ? »
Category:
கவிதை |
2 Comments, Join in »
on May 28th, 2010 by sakthi
அன்பு நண்பா ! உன் உள்ளத்தினடியில் புதைந்திருக்கும் உணர்ச்சிக் கொதிப்புகளின் வெப்பத்தை நானறிவேன் நெஞ்சப் புத்தகத்தின் அத்தியாயங்களில் வரையப்பட்டிருக்கும் வேதனைச் சித்திரங்கள் ஒவ்வொன்றினதும் கோடுகள் ஆழமாய்க் கீறிய வடுக்களின் சோகத்தை நானறிவேன் போகட்டும் விட்டுவிடு ஆவதைப் பார்த்து விடு என இலகுவாய் அறிவுரைகள் சொல்லிவிட்டு கடமை முடிந்ததென கண்மூடித் தூங்கிவிடும் நண்பனல்ல நான் வாழ்க்கை என்னும் இவ்விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு புறமும் ஒவ்வொருவர் தமக்கே வெற்றியென தாம் போட்ட விதிகளின்படி தனித்தனியாய் விளையாடுகின்றார் நண்பா ! தமக்கே […]
Continue reading about நண்பனுக்கொரு மடல் »
Category:
கவிதை, நண்பனுக்கு ஒரு மடல் |
No comments yet, be the first »
on May 28th, 2010 by sakthi
சல சலவென்று ஓடும் நதியினுள் சட்டென்று கால்களை நனைக்கும் போது சில்லிட்டு எழுந்திடும் குளிர் உணர்வுகளைப் போல உன் எண்ணங்கள் என் நெஞ்சினைக் கவ்விக் கொள்ளும் போதெல்லாம் ஜில்லென்று ஓர் சுவாலை இதயத்தை குளிர்மையால் கொளுத்தி விடுகின்றதே ! இதமான தூக்கம் இறுகப் பற்றிக்கொள்ளும் போது மெல்லிய இறகொன்றினால் முன்நெற்றியை வருடிக் கொடுக்கும் சுகமான மெல்லிய கணங்கள் போல கனவினில் உன்னுருவம் என் மன ஊஞ்சலில் ஆடும் போது உள்ளத்தினுள் உருவகிக்கும் உன்னதமான கணங்கள் என்னைத் தாலாட்டும் […]
Continue reading about போதுமோ பொன்னான உணர்வு ? »
Category:
கவிதை |
No comments yet, be the first »
on May 28th, 2010 by sakthi
மலரும் மலர்கள் எல்லம் உதிர்ந்திடும் ஓர்நாள் மனதிலிவ்வுண்மை அறிந்தும் மலரினழகதனில் மயங்க மறுப்பதுண்டோ உலகில் ? தளிர்க்கும் இலைகள் எல்லாம் சருகாய் மாறிடும் அறிவோம் பச்சைமரத்தினழகை நோக்க மறுக்கும் விழிகளுண்டோ ? புலரும் பொழுதெல்லாம் திரும்ப இருளைக் கவ்விக்கொள்ளும் இருந்தும் பகலின் பரபரப்பில் தமை முழுக்கா மனிதருண்டோ தரணியில் கூறும் ? எழுந்திடும் ஆதவன் பின்பொழுதில் விழுந்திடும் உண்மை உணர்வோம் சுரந்திடும் ஒளிக்கதிர்களில் சுகம் காணா மானிடர் உண்டோ எண்ணிடுவீர் பெளர்ணமியாய் மலர்ந்து மகிழ்வித்து அமாவாசையாய் இருள்வதும் […]
Continue reading about மனதிலொரு உண்மை கொள்வீர் »
Category:
கவிதை |
No comments yet, be the first »
on May 21st, 2010 by sakthi
கூட்டரசாங்கம் என்பது எமது பின்புல நாடுகளைப் பொறுத்தவரை ஒரு புதிய சம்பவம் அல்ல. ஆனால் இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 6ம் திகதி நடைபெர்று முடிந்த தேர்தல் முடிவுகள், இங்கிலாந்து நாட்டு மக்களைப் பொறுத்தவரை ஒரு புதுவகையான அரசியல் மாற்றத்துக்கு அவர்களை உள்ளாக்கியிருக்கின்றது. ஜனநாயகத்தின் உயிர்மூச்சு சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதிலேயே தங்கியுள்ளது. இங்கிலாந்திலே கடந்த பதின்மூன்று வருடங்களாக தொடர்ந்து ஆட்சியிலிருந்த லேபர் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.. 18 வருட காலமாக வனவாசத்தை அனுபவித்தது போல எதிர்க்கட்சி […]
Continue reading about புதியதோர் அரசியல் அத்தியாயம் ஆரம்பம் »
Category:
Uncategorized |
No comments yet, be the first »
on May 21st, 2010 by sakthi
காதல் என்றொரு கானம் காதில் மெதுவாய்க் கேட்கும் நெஞ்சம் என்றொரு கதவு ஓசையின்றித் திறக்கும் பசி என்றோர் உணர்வு பஞ்சாய்ப் பறந்தே போகும் தூக்கம் என்றொரு நிகழ்வு கனவாய் மாறி வதைக்கும் நேற்றை என்றொரு காலம் நினைவிலிருந்து விலகும் நாளை என்பதும் கூட நிழலாய் மாறித் தேயும் பந்தம் பாசம் எல்லாம் ஏனோ பாரம் போன்றே தோன்றும் பார்வை பேசும் மொழிகள் பலவாய்க் கதைகள் கூறும் உலகில் பெண்கள் எல்லாம் உருவமில்லாப் […]
Continue reading about காதல் கற்பிக்கும் உண்மை »
Category:
கவிதை |
No comments yet, be the first »
on May 18th, 2010 by sakthi
என்னைத் தாலாட்டும் இளங்காலைப் பொழுதினிலே எந்தை திருநாட்டின் எண்ணங்கள் அலைமோதும் அந்திப் பொழுதின் சாரத்திலே அன்றுநான் எனை மறந்து அன்றில் போலாடி மகிழ்ந்த வேளை அணையா ஒளியாய்க் கதிர் வீசுதே ! அன்னை மண்ணின் வாசமது அள்ளி நெஞ்சைப் பின்னிக்கொள்ள அழகுத் தமிழின் பெருமைகளெல்லாம் அலையாய் நெஞ்சில் நுரைத்தபடி புகையாய்க் கரைந்த காலமது புனலாய் விரைந்த வாழ்கையது புலத்தை பெயர்ந்த காரணங்கள் புரியா நிகழ்வுகள் புரிந்ததன்றோ விதையாய் விழுகின்ற வேளையிலும் விழவேண்டும் எந்தன் அன்னை மண்ணில் செடியாய் […]
Continue reading about இம்மையில் இழந்ததை »
Category:
கவிதை, தாய்மண் |
No comments yet, be the first »
on May 8th, 2010 by sakthi
பசுமை நிறைந்த காலையிலே பாடி நிற்கும் பறவைகளும் பச்சைப்புல் கம்பளமும் இயற்கையன்னை ஈந்த வசந்தகாலச் சான்றதனை வாழ்த்தி நிற்கும் வேளையன்றோ ! தேடி ஓடும் செல்வங்கள் மாடிவீட்டு அலங்காரம் மயக்குகின்ற வெளியாடை சூழ்ந்து நிற்கும் நண்பர் குழாம் கோடி கோடி புகழாரம் கொடுத்திடுமோ மகிழ்வதனை கொஞ்சம் நெஞ்சம் எண்ணட்டுமே ப்கட்டான பட்டாடை பல லட்சம் சொத்துரிமை சமுதாயச் செல்வாக்கு இவையனைத்தும் பார்ப்பதில்லை இலவசமாய் உடலணைக்கும் இனிய அந்த பூங்காற்று அன்னையின் கருவிலிருந்து அகிலத்தின் […]
Continue reading about பதைக்கின்ற நெஞ்சம் »
Category:
Uncategorized |
No comments yet, be the first »
on May 6th, 2010 by sakthi
இன்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெறுகிறது. கண்ம்முன்னே கண்ட சில காட்சிகளும், காதில் விழுந்த செய்திகளும் மனதில் கிளப்பிய சிந்தனைத்துளிகளை திரட்டியபோது விளைந்தவை இங்கே பொழியப்படுகின்றன. ஒரு மனிதனின் வாக்குரிமை என்பது அவனுக்கு சமுதாயத்தினால் அளிக்கப்பட்ட ஒரு கெளரவம். மன்னர்களினால் அரசாளப்பட்ட மக்கள் தம்மை வழிநடத்தத் தேவையான நிர்வாகத்திறமையும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளை முன்னெடுப்பவர்களையும் தாமே தேர்ந்தெடுக்கும் உரினமையை வெகு இலகுவாக வென்றெடுக்கவில்லை. சந்தர்ப்பவசத்தினால் அரச பரம்பரையில் பிறந்த காரணத்திற்காக மட்டும் நாட்டை அரசாளும் உரிமையைத் […]
Continue reading about வாக்களிக்க வாரீயளா ? »
Category:
Uncategorized |
No comments yet, be the first »