Subscribe to RSS Feed

வறுமை நட்புக்கு உறைகல் , தைரியத்துக்குச் சோதனை

on March 31st, 2010 by sakthi

வறுமை என்னும் சொல் நம் அனைவரையும் அச்சப்படுத்தும் சொல். அந்த நிலைமையை முற்றிலும் அனுபவிக்காத நபர்களுக்கு மிகவும் அச்சத்தை அளிக்கும் சொல். ஆனால் எத்தனையோ உடன்பிறப்புக்கள் இந்தச் சூழலில் பிறந்து இதைவிட்டு வெளியே வரமுடியாமல் அதினுள்ளேயே தத்தளைத்துத் தமது வாழ்நாளை முடித்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ இதுவே எமக்கு ஆண்டவன் விட்ட வழி என்னும் மனப்பான்மையில் அதையே தமது வாழ்க்கை முறையாக்கி அதனுள் ஏனோ, தானோ என்று வாழ்ந்துவிடுகிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ நம்பிக்கையின் ஆதாரத்தில் தம் […]

Continue reading about வறுமை நட்புக்கு உறைகல் , தைரியத்துக்குச் சோதனை »

Category: உள்ளத்தின் ஓசை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இதுதான் உலகமடா !

on March 26th, 2010 by sakthi

 நெஞ்சத்தைக் கொஞ்சமாய் நேசத்தின் பஞ்சமாய் சொந்தத்தின் வஞ்சமாய் சோதிக்கும் பொழுதடா !   தாகத்தில் தவிக்கையில் இரு சொட்டு நீர்த்துளி தந்தவன் இன்று தனியான பொழுதடா !   நேற்றைய உலகினில் காட்டிய பரிவுகள் இன்றைய உலகில் பைத்திய நிகழ்வுகள் !   என் சொந்தம் என்றே நான் வரித்த உறவுகள் என்னிதயத் தோலை உரித்து புகட்டினர் ஞானத்தை   ஒரு கை கொடுத்தது ஒரு கை எடுத்தது எடுத்த கை அடித்தது கொடுத்த கை கன்னத்தில் […]

Continue reading about இதுதான் உலகமடா ! »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஏன் மெளனமாகி விட்டாய் ?

on March 21st, 2010 by sakthi

  ஏன் மெளனமாகிவிட்டாய் ?   வார்த்தைகளின் ஜாலம் மனதில் கோர்த்த எண்ணங்களின் வலியைத் தாங்க முடியவில்லையா ?   சந்தித்த ஏமாற்றங்கள் தந்த சந்தோஷக் கானல் நீரின் தோற்றத்துள் கவிதையின் சந்தங்கள் எப்படியோ காணமல் போயினவா ?   உள்ளத்துள் ஊனமாகிப் போய்விட்ட உண்மைகளின் உறக்கம் உந்தன் அறிவு வானின் நிலவை அமாவாசையாக்கி விட்டதா ?   புலர்ந்து போன பொழுதுகளில் மறைந்து போன வாழ்க்கை எனும் வீணையில் மீட்டப்பட்ட கானத்தின் ராகங்கள் அனைத்தும் முகாரியென்னும் […]

Continue reading about ஏன் மெளனமாகி விட்டாய் ? »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சொல்லத்தான் நினைக்கிறேன்

on March 21st, 2010 by sakthi

  யார் குற்றம் ?   மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் மனித இனத்தில் இன்று, நேற்று உருவானவை அல்ல. மனதனுடைய காலாச்சார மாற்றத்தினூடாக விளைந்தவையே மதங்களும் அவைசார்ந்த நற்சிந்தனைகளும்.   இன்று எமது தாய்நாடுகளில் மதங்களைப் பிரதிநிதிப்படுத்துகிறோம்ம் என்று கூறிக்கொண்டு தவறான செய்கைகளில் ஈடுபடும் சில மனிதர்களினால் மதங்களை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யும் நிகழ்வுகள் தலைதூக்கியுள்ளன.   ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் இருபாலருமே மனிதர்கள் தாம். அவர்களின் மன உணர்ச்சிகள் சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு உற்பட்டவையே. […]

Continue reading about சொல்லத்தான் நினைக்கிறேன் »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மெளனத்தின் வலியாய் !

on March 20th, 2010 by sakthi

என் அன்பு நண்பன்/சகோதரன் சிறீரங்கனின் ஆருயிர் மனைவி மீரா எம் மனங்களில் ஆறாத்துயரை அளித்து ஆண்டவனுடன் ஜக்கியமாகிவிட்ட போது, என் வாழ்க்கையில் அவர் என்மீது காட்டிய பரிவும் பாசமும் ஒன்றையன்று முந்த உணர்வலைகளின் வெள்ளம் கவிதையாய் வடிந்த போது மெளனத்தின் வலியாய் இதயத்தின் மொழியாய் துயரத்தின் சுழியாய் – எம் கண்ணீரின் வழியாய் அன்னையின் கருவாகி உலகத்தில் உருவாகி நட்பின் புரிவாகி – இன்று மனதின் திரியானாய் அன்றையநாளின் அவலத்தில் அன்போடு என் துன்பத்தில் ஆறுதலைத் தந்த […]

Continue reading about மெளனத்தின் வலியாய் ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சுற்றத்தின் அழகு சூழ இருக்கும்

on March 20th, 2010 by sakthi

  ஒரு மனிதனின் சொந்தம், உறவு அவனது சுற்றம் என்று கருதப்படுகிறது. மனிதர்களாக நாம் பிறக்கும் போது எமது சுற்றத்தை நாம் தெரிவு செய்வதில்லை. எமக்கும் மேலே உள்ள ஒரு சக்தியால் எமது சுற்றம் நிர்ணயிக்கப்படுகிறது.   அந்தச் சுற்றங்கள் வகுத்த எல்லைக் கோட்டினுள் நாம் எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். இதுதான் உனது வாழ்க்கை முறை என்று எமது கலாச்சார வரம்புக்கள் அந்தச் சுற்றங்களினால் போதிக்கப்படுகின்றன. எமது பாரம்பரிய வழக்கங்கள் அந்தச் சுற்றியுள்ள சொந்தங்களின் செயற்பாடுகளினால் […]

Continue reading about சுற்றத்தின் அழகு சூழ இருக்கும் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மனிதாபிமானத்தை மிஞ்சிய ஆன்மீகம் இல்லை

on March 20th, 2010 by sakthi

நமக்குள்ளே இருக்கும் தெய்வத்தை நாம் கண்டு கொள்ளாவிட்டால் ஆலயத்தில் இருக்கும் தெய்வத்தை எப்படி அடையாளம் காணப்போகிறோம் ? இந்தக் கேள்வியின் அடியிலே உறைந்து கிடக்கும் உண்மைகளை நாம் உரசிப்பார்க்கத் தயங்கக்கூடாது. நான் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஆன்மீகவாதி என்று கூறிக்கொண்டு, தெய்வத்தின் பெயரால் பெருநாட்களிலெல்லாம் விரதங்களைப் பேணிக்கொண்டு, சக மனிதனின் உணர்வுகளை மதிக்கத் தெரியாமல் வாழுவோர் பலர் இருக்கிறார்கள். ஆன்மீகம் என்றால் என்ன? அன்மாக்களின் புனிதத்தை அறிந்து கொள்வது. அகந்தைகளைக் களைந்து கொள்வது. நான், எனக்கு […]

Continue reading about மனிதாபிமானத்தை மிஞ்சிய ஆன்மீகம் இல்லை »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கண்டாலே ஓடுகின்றார்

on March 6th, 2010 by sakthi

புரியாமல் பேசுகின்றார் – ஏனோ புதிராக வாழுகின்றார் உணராமல் உளறுகின்றார் – வீணே உதவாமல் உழலுகின்றார் தெரியாமல் சாடுகின்றார் – அவரே தெரிந்து விட்டால் மூடுகின்றார் வழியெல்லாம் மாறுகின்றார் – பின்னர் விதியென்று புலம்புகின்றார் தேறாமல் வாழுகின்றார் – பாவம் தேடாமல் தேடுகின்றார் பாராமல் மொழிகின்றார் – தானாய் பரிதவித்து வாடுகின்றார் கீறாமல் கீறுகின்றார் – இதயத்தை கிள்ளி விளையாடுகின்றார் கண்டதைச் சொல்லுவதால் – என்னை கண்டாலே ஓடுகின்றார் அன்புடன் சக்தி சக்திதாசன்

Continue reading about கண்டாலே ஓடுகின்றார் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இதுவும் ஒரு ஓலம் தான் !

on March 3rd, 2010 by sakthi

ஒன்றா இரண்டா மனதில் உளையும் உணர்வுகள்? வாழ்க்கையின் திருப்பங்கள், எதிர்பாரா வளைவுகள் எத்தனை, எத்தனை அத்தனையும் ஒரு சிறு இதயம் தாங்கிக் கொண்டு நாளுக்கு ஒரு இலட்சம் முறை துடிக்கிறதாமே! அதன் ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு அர்த்தம் இருந்தால் எத்தனை பாகங்கள் உள்ளடங்கிய புத்தகப் பதிவுகளாயிருந்திருக்கும்? வருட ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிவதற்குள் மூன்றி உயிர்களைக் காலன் காவு கொண்டு விட்டான். அவ்வுயிர்கள் மூன்றும் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நிலைகளுக்குள்ளாகிய உயிர்கள். 22வயது […]

Continue reading about இதுவும் ஒரு ஓலம் தான் ! »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நெஞ்சத்தைப் புண்ணாக்கிய உதயத்துத் தாரகை

on March 1st, 2010 by sakthi

உள்ளத்தின் உள்ளே ஒரு உதயத்துத் தாரகை – கண்ணே உன்மத்தம் கொள்ள வைக்குதடி உன்வசமாகிய என்மனம் என்னுடன் யுத்தம் புரியுதடி – கண்ணே உன்னைத் தேடியலையுதடி பல்வகைக் கனிகளின் ரசத்தைக் கலந்ததொரு பானம் போல – கண்ணே பச்சைக்கிளி யுந்தன் எண்ணம் என்னை மயக்குதடி புல்வெளி மீது உச்சி வெய்யிலில் உருள்வது போல – கண்ணே புதுப்புது உணர்ச்சிகள் ஊறுதடி மஞ்சள் மாலைப் பொழுதினில் வீசிடும் தென்றலைப் போல – கண்ணே மெல்லியதாயொரு இனிய சுகம் உடலைத் […]

Continue reading about நெஞ்சத்தைப் புண்ணாக்கிய உதயத்துத் தாரகை »

Category: கவிதை | No comments yet, be the first »