Subscribe to RSS Feed

ஒலியில்லாத ஓலங்கள் !

on January 1st, 2010 by sakthi

 அன்னையின் தாலாட்டும் தந்தையின் சீராட்டும் கண்ணீரின் வடிவத்தில் காலமென்னும் புத்தகத்தில்   ஒரு நேரச் சோற்றுக்கு ஒரு வழியும் அறியாமல் வாழ்க்கையின் வரம்பினில் வடிந்து விட்ட நேரங்கள்   உழைப்பு ஒன்றே மூச்சாக உணர்வுகளின் இருளினிலே உருண்டோடிடும் உயிர்கள் நாம் உணர்ந்திடுவோர் யாருண்டு   அடுக்கடுக்காய் வருடங்கள் அவசரமாய் வந்து போகும் அடுத்தநேரம் உணவு மட்டும் கிடைக்குமிடம் அறிந்திடா நிலை   வெறுமையான கலங்கள் மோதும் ஒலியின் மத்தியிலே நமது ஓலங்களின் ஒலிகள் மட்டும் கேட்பது சாத்தியமா […]

Continue reading about ஒலியில்லாத ஓலங்கள் ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சித்தரின் சித்தத்திலே ! . . . (3)

on January 1st, 2010 by sakthi

  நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் “அழுகணிச் சித்தரின்” பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.   இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது.   இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்களிலே ஒளிரும் அனுபவ ஞானம் அளப்பரியது.   கண்ணம்மா என்னும் ஒரு பெண்ணிடம் தனது மனக்கருத்துக்களை ஒப்பிப்பது போன்ற பாணியிலேயே இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.   என் கண்ணம்மா – உன் அடி […]

Continue reading about சித்தரின் சித்தத்திலே ! . . . (3) »

Category: இலக்கியத்திடல் | 3 Comments, Join in »
Subscribe to RSS Feed

குறைகளைச் சுட்டிக் காட்டுபவனே உண்மையான நண்பன்

on January 1st, 2010 by sakthi

  அதோ அவன் தான் எனது உற்ற நண்பன் என்று பெருமையாக நாம் சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் நண்பர்கள் என்பதற்கு எம் மனதில் உண்மையான அர்த்தத்தை எம்மில் எத்த்னை பேர் புரிந்து கொண்டுள்ளோம் என்று எண்ணிப்பார்த்தால் விடை மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.   இந்த உற்ற நண்பன் என்பதன் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொள்வதற்கு பல காலங்கள் எடுத்தது என்பதுவே உண்மையாகும்.   நண்பன் என்றால் நாம் கஷ்டப்படும் போது உதபுபவன், நாம் கொண்டிருக்கும் அனைத்துக் […]

Continue reading about குறைகளைச் சுட்டிக் காட்டுபவனே உண்மையான நண்பன் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கடவுள் செய்த குற்றமடி

on January 1st, 2010 by sakthi

  எண்ண அலைகளில் மின்னும் உணர்வுகளில் வண்ணக் கனவுகளை மெல்லத் தவழ விட்டு உன்னை மறைத்து வைத்துக் கடவுள் செய்த குற்றமடி   மண்ணைத் தழுவுமுந்தன் மணியான கருவிழிகள் என்னைத் தீண்டி விட்டு தன்னுள் புதைந்து கொண்ட தந்திரத்தை உனக்களித்து தவிக்க விட்ட அந்தக் கடவுள் செய்த குற்றமடி   வெண்கலத்தில் மணிகள் உருண்டோடும் ஒலிகளைப் போல் கிண்கிணி நதமாய் பொன் சிரிப்பை உதித்து என் மனதைச் சிதைத்த பெண்ணுருவை கணத்தில் மறைத்து சாகசம் புரிந்து விட்ட […]

Continue reading about கடவுள் செய்த குற்றமடி »

Category: கவிதை | No comments yet, be the first »