on December 31st, 2009 by sakthi
யான் பாடும் தாலாட்டு தமிழை நெஞ்சோடு யாசித்து சுவாசிக்கும் ஓராட்டு பூவாசம் பொங்கும் என் தாய் தந்த மொழியின் பூந்தென்றல் போன்றதொரு இனிமையின் ஆராதிப்பு இன்பமிகு இசையோடு கவி பல ஆக்கிட வழி காட்டிடும் இனியதாம் எந்தன் தமிழ்மொழி தமிழ் மண்ணில் தவழ்ந்து உருண்டிடும் போது தானாக மேனியில் ஓட்டிய மொழியின் வாசமிது என் பாட்டு நீ கேட்டு விழி தூய்த்து ஓர் கணம் உனை மறக்கும் வேளை நான் எனை இழப்பேன் அன்புடன் சக்தி
Continue reading about யான் பாடும் தாலாட்டு
»
Category:
கவிதை
|
No comments yet, be the first »
on December 31st, 2009 by sakthi
நீ நடக்கும் செம்மண்ணின் நிறத்தின் சரித்திரத்தை அறிந்திருக்க மட்டாய் குழந்தை நீ . . . தத்தித் தத்தி நீ தவழும் இம்மண்ணில் எத்தனை உயிர்கள் தம் செங்குருதியைக் கொட்டி மண்ணைச் செம்மண்னாக்கினார்கள் அறிய மாட்டாய் ஏனெனில் மழலை நீ சுவாசிக்கும் காற்றுக்கூட தமக்குச் சொந்தமில்லை என்பதினால் தமது சுவாசத்தை விலையாக கொடுத்துச் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அறிய மாட்டாய் ஏனென்றால் நீ இன்னும் அம்மண்ணில் தவழும் குழந்தை […]
Continue reading about சரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல்
»
Category:
தாய்மண்
|
No comments yet, be the first »
on December 31st, 2009 by sakthi
நில்லாமல் செல்லும் நிலவே நீ சொல்லாமல் சொல்லும் கதைதான் என்ன ? அன்றாடம் அலைகிறாய் வானத்தின் மீது செல்லாத இடம் நோக்கி நில்லாமல் சென்றாலும் அல்லாடும் உணர்வுகளுக்கு உன்னால் அணை போட முடிகிறதா ? இருள் வேண்டும் என்கிறாய் நிலவே . . . அது உந்தன் எழில் காட்டத்தானே ? யாரத்தேடி நீ பாதித் திங்கள் பாதியாகிப் போகிறாய் ? பின்னர் யார் வரவால் மீதித் திங்கள் பூரணமாகிறாய் ? […]
Continue reading about நில்லாமல் செல்லும் நிலவே !
»
Category:
கவிதை
|
No comments yet, be the first »
on December 31st, 2009 by sakthi
புத்தாண்டே விரைந்து வருக நல்வாழ்வு கொண்டு தருக நலம் காணும் வழிகள் சொல்க நிலம் எங்கும் மகிழ்ச்சி பொங்க வயல்கள் தோறும் விளைச்சல் பெருக உழைக்கும் மக்கள் வாழ்க்கை செழிக்க காலமெல்லாம் கண்ணீர் பெருக வாழ்ந்த மக்கள் புன்னகை கொள்ள இருப்பவர் இதயம் அன்புத்தாமரையாய் விரிய இல்லாதோர் இல்லம் இன்பமாய் ஒளிர அரசின் கரங்கள் செங்கோல் ஓச்ச அனைவர்க்கும் சமனாய் வாழ்க்கை புலர அனைவரும் இன்று ஓர் வழி நின்று அனைத்து […]
Continue reading about புத்தாண்டே வருக !
»
Category:
கவிதை
|
No comments yet, be the first »
on December 31st, 2009 by sakthi
கம்பன் என்னும் கவிராயன் தன் கவித்திறமையினால் ஆகிய காவியப்படலம் அவனைக் கவிச்சக்கரவர்த்தி என்று உயர்த்திப் போற்றியது. ஒரு செயலை அவன் விளக்கும் விதம், அதற்காக அவன் உபயோகிக்கும் ஒப்பீட்டு முறை அவனது ஆற்றலின் அளவை நோக்கி எம்மை வியக்க வைக்கிறது.. தான் வாழ்ந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தான் விளக்க வந்த காவியத்தின் பாத்திரங்களை விளக்கும் அவனது ஒப்பற்ற ஆற்றல் ஒப்பீடு இல்லாதது. கம்பனின் படைப்புக்களில் அனைத்தையும் விஞ்சி நிற்பது கம்ப இராமாயணம். துரதிருஷ்டவசமாக […]
Continue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8)
»
Category:
இலக்கியத்திடல்
|
1 Comment, Join in »
on December 31st, 2009 by sakthi
எமது நாக்கிற்கு நரம்பு கிடையாது ஆகவே அது எத்தகைய வடிவிலும் வளையக்கூடியது. எதையும் வரம்பின்றிப் பேசி விடும் வல்லமை கொண்டது. உணர்ச்சிகள் உள்ளத்தில் எகிறிக்குதிக்கும் போது உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் அலைபாயும். அவ்வேளையில் எமது நாக்கை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகிறது. எமது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் பொதுவாக இரண்டு முக்கிய விளைவுகளைக் கொடுக்கக் கூடிய வல்லமை கொண்டது. எமது வார்த்தைகளைச் செவிமடுப்பவரை மகிழ்ச்சிப்படுத்தவோ அன்றி மனம்வருத்தவோ செய்யும் ஆற்றலே அவை. ஆனால் அவற்றை […]
Continue reading about வார்த்தைகளைக் கவனித்தால் வாழ்வு சிறக்கும்
»
Category:
சொல்லச் சொல்ல இனிக்குதடா
|
No comments yet, be the first »
on December 29th, 2009 by sakthi
உழைத்து உழைத்து உந்தன் கரங்கள் சிவந்து போயின எந்தன் தோழா ! நினைத்து நினைத்து துவண்டு போயிற்று உந்தன் நெஞ்சம் எந்தன் தோழா ! முளைத்து முளைத்து தளைக்க நீ முயற்சிக்கும் போதெல்லாம் அழித்து விடுகின்றார் எந்தன் தோழா ! ஒளிந்து ஒளிந்து உந்தன் வேர்வையில் தங்கள் வாழ்வினை நடத்துகிறார் எந்தன் தோழா ! பொழிந்து பொழிந்து மேடை தோறும் பேசுகிறார் கழிந்து போயின காலமெலாம் எந்தன் தோழா ! மலிந்து மலிந்து நீயும் வாடாமல் இனிமேல் […]
Continue reading about ஏக்கம் கொண்டேன் எந்தன் தோழா
»
Category:
கவிதை
|
No comments yet, be the first »
on December 29th, 2009 by sakthi
சின்னக் கருவிழியாள் சித்திரப் பூம்பாவையவள் முத்திரைப் புன்னகையால் நித்திரையைப் பறித்து விட்டாள் கயல்விழித் தேன்மொழியாள் கணையொன்று தொடுத்ததினால் கனவுகள் இன்றெனக்கு கலர் கலராய் தோன்றுதம்மா கருங்கூந்தல் அலைபாய காரிகையின் செவ்விதழ்கள் மலர்ந்துதித்த பொன்சிரிப்பு மனதை விட்டு அகலவில்லை தேன்பாயும் குயில் போல தேமதுரத் தமிழ் ஒலிக்க தோகையவள் மொழிமழையில் தோய்ந்து நான் காய்ந்து விட்டேன் கண்பார்வை பட்டதுமே என் காட்சி நிறைந்து அங்கு பெண்ணே உன்னை தூரிகையால் வண்ணமாய் தீட்டிக் கொண்டேன் அன்புடன் சக்தி
Continue reading about பெண்ணே உன்னை !
»
Category:
கவிதை
|
No comments yet, be the first »