Subscribe to RSS Feed

உண்மை ஒன்று சொல்வேன் …..

on November 22nd, 2009 by sakthi

  வாழ்க்கையெலாம் வசந்தம் தேடி வந்ததெல்லாம் நினைவில் சூடி வார்த்தைகளால் கவிதை பாடி வந்து நின்றேன் தமிழை நாடி நேற்றின் நிகழ்வுகள் கனவாக இன்றைய நிகழ்வுகள் நனவாக நாளைய நிகழ்வுகள் எதுவாகும் நிச்சயம் அறிந்தவர் எவர் கூறு உதிரத்து உறவுகள் காற்றாக உள்ளத்து உறவுகள் மூச்சாக உலகத்தின் நடப்புகள் தெளிவாக உண்மையில் ஞானம் இதுவாக அமைதியின் இருப்பிடம் அறிந்திட அன்பின் வழியே நடந்திட ஆசைகள் அனைத்தும் துறந்திட அறிந்திட்ட அனைத்தையும் பகன்றிட எண்ணத்தின் வழியே சுரந்திடும் சிந்தையின் […]

Continue reading about உண்மை ஒன்று சொல்வேன் ….. »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தாயின் கோபம்… பிரதமரோ பாவம்… பத்திரிகைக்கு லாபம்…!

on November 22nd, 2009 by sakthi

ஆப்கானிஸ்தானில் சிக்குண்ட பிரித்தானிய இராணுவத்தின் நிலை, புதைசேற்றினுள் அகப்பட்டதைப் போல ஒரு நிலைதான். 9/11 அமெரிக்க நிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத்தின் ஆரம்பம், ஆப்கானிஸ்தான் என்னும் முடிவில் எழுந்த அமெரிக்க, பிரித்தானிய ஆப்கானிஸ்தான் மீதான இராணுவ முற்றுகை இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களுக்கும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் என்னும் சிலந்தி வலையினில் அகப்பட்ட ரஷ்ய ராணுவம், அந்த இராணுவ ஆக்கிரமிப்பு தமது நாட்டில் தலைவர்களுக்குக் கிடைத்த அரசியல் விழுக்காட்டின் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. இன்று […]

Continue reading about தாயின் கோபம்… பிரதமரோ பாவம்… பத்திரிகைக்கு லாபம்…! »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

விழிமூடித் தூங்கிட

on November 22nd, 2009 by sakthi

  விழிமூடித் தூங்கையிலும் வழிந்தோடும் நினைவுகள் சுழியோடும் பொழுதுகள் சுமையாகும் கனவுகள்   இருக்கின்ற வேளையெல்லாம் இருக்கும் எப்போதும் என்றே இருந்திட்ட நினைவு தன்னால் இழந்திட்ட வேளைகள் கொஞ்சமோ ?   வலித்திட்ட தடங்களுக்கு மருந்திட்ட உந்தன் எண்ணம் பசித்திட்ட நெஞ்சுக்கு விருந்திட்ட வண்ணங்கள்   கைப்பிடித்த நாள் முதலாய் கலந்திட்ட உணர்வுகள் கலைந்திட்ட கூட்டிலும் புதைந்திட்ட பொன் முட்டைகள்   வகுத்திட்ட வாழ்க்கையில் சிலநேரம் பாதைகள் பிரிந்திடும் – பின்னாலே இணைந்திடும் வேளைகள் கொடுத்திடும் ஆனந்தம் […]

Continue reading about விழிமூடித் தூங்கிட »

Category: கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

விரிகின்ற தாமரையோ

on November 22nd, 2009 by sakthi

நித்தமொரு மாலையிலே முத்தமிடும் வேளையிலே சத்தமின்றித் தென்றலது யுத்தமொன்று புரியுதன்றோ மலரொன்றின் ஏக்கத்திலே புலர்கின்ற மாலையிலே துலர்கின்ற இன்பத்தினை உணர்கின்ற தாக்கமது இயற்கையின் கானத்தில் கேட்கின்ற ராகத்தில் பிறக்கின்ற சாரத்தில் சுரக்கின்ற நாதமழை நினக்கின்ற வேளையிலே நனைக்கின்ற நினவுமழை கனக்கின்ற சுமைகளெல்லாம் மறக்கின்ற கோலமது சிதறுமந்த எண்ணத்துளிகள் சேர்ஃது ஒரு குட்டையாகி மலர்கின்ற கவிதையது அதிலே விரிகின்ற தாமரையோ அன்புடன் சக்தி

Continue reading about விரிகின்ற தாமரையோ »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நெஞ்சினில் கேள்வி ! நெருஞ்சி முள்ளாய்

on November 22nd, 2009 by sakthi

நெஞ்சத்தில் ஒரு கேள்வி நெருஞ்சி முள்ளாய் நெருடுது . . . . வஞ்சத்தில் விளைந்த நானிலம் தன்னில் கொஞ்சமாய்க் கூட ஆனந்தம் இன்றித் தஞ்சத்தின் மூலம் தவிக்கின்ற மக்கள் கிஞ்சித்தும் சிந்திக்க மறுத்திடும் கூட்டம் ஆம்……. நெருஞ்சி முள்ளாய் நெருடுது பஞ்சத்தின் கோரம் பசிதனின் ஆத்திரம் பார்த்திடாக் கூட்டம் மஞ்சத்தில் அயர்ந்து பல்சுவை சுவைத்திடும் அரியணைதனில் அமர்ந்திங்கு அறிவுடன் பலகதை பகர்ந்திடும் வேஷம் கொஞ்சமும் பொறுக்குதில்லை நெஞ்சத்தில் கேள்வி நெருஞ்சி முள்ளாய் நெருடுது உண்மை . […]

Continue reading about நெஞ்சினில் கேள்வி ! நெருஞ்சி முள்ளாய் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது ….

on November 22nd, 2009 by sakthi

காதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது கட்டுண்ட நினைவுகள் சிக்குண்டு தவித்தன சிந்தனையின் துளிகளெல்லாம் தேனாகிச் சுவைத்தன பிரிந்து சென்ற பொழுதெல்லாம் வேம்பாகிக் கசந்தன நின்னோடு இணைந்து நின்ற நிமிடங்கள் துளிகளாக கண்ணே நீ மறைந்த கணங்கள் மணிகளாகிக் கனத்தன கண்களின் வழியூடு மெதுவாய் இதயத்தில் புகுந்தவள் உன்னெஞ்ச மெத்தையில் துயில்பவனென அறிந்ததும் விண்ணோடும் முகில்களில் தானோடி மகிழ்ந்தவன் காதலென்னும் உணர்வுகளின் நவரசத் தன்மைகள் காலமெல்லாம் ருசித்திட காணவேண்டும் உண்மைக்காதல் கரும்பாகிக் இனித்திடும் கனலாகித் தகித்திடும் பலபொழுது கசந்திடும் […]

Continue reading about காதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது …. »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நமக்கு நாமே நண்பர்களாகிக் கொண்டால். . . . .

on November 22nd, 2009 by sakthi

என்ன சும்மா இரு என்றால் இந்த மனது கேட்கிறதா ? இல்லையே மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சத்தமில்லாமல் தன்னோடு தானே ஒரு யுத்ததை ஆரம்பித்து விடுகிறது. சிந்தனை என்னும் வட்டத்தின் விட்டம் விரிந்து கொண்டே போகிறது ஆனால் அதன் ஓட்டம் ஒரு வட்டமாக அந்த விட்டத்தின் பாதையிலேயே அமைந்து விடுகிறது. “தனிமையிலே இனிமை காண முடியுமா?” என்று அந்த உயர் கவிஞன் பாடல் எழுதினான். அந்தப் பாடலின் அர்த்தம் தான் என்ன ? தனிமை என்பது […]

Continue reading about நமக்கு நாமே நண்பர்களாகிக் கொண்டால். . . . . »

Category: சத்தமுமில்லை யுத்தமுமில்லை | No comments yet, be the first »