Subscribe to RSS Feed

உழைப்பவனே ! உனக்கொரு வாழ்த்து

on April 30th, 2009 by sakthi

அன்புத் தோழனே ! வருடங்கள் தானாய் ஓடுது கோஷங்கள் வானைப் பிளக்குது உழைப்பது நீதான் – ஆனால் உயர்வது நீயா ? வறுமையே உந்தன் வாழ்க்கையின் தாரக மந்திரமாய் நீயும் வானுயர மாளிகைகளைக் கட்டிக் கொண்டே …….. குளிரூட்டிய அறையினுள் சுழலும் நாற்காலியில் உனக்காக சாசனம் எழுதுகிறார்கள் உன்னுடைய முதலாளிகள் நடுத்தரம், மேல்தரம் கீழ்த்த்ரம் என்றே வர்க்கங்கள்…. கேட்க காதுகளுக்கு இனிமையாய் மேடைகளிலே பேசும் தலைவர்கள்.. ஆனால்…. கைவண்டி இழுத்த கைகளில் கறுப்பு மையைப் பூசி வாக்களித்து […]

Continue reading about உழைப்பவனே ! உனக்கொரு வாழ்த்து »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

எந்த மே ! கொஞ்சம் சொல்லும்

on April 30th, 2009 by sakthi

எந்த மே ! கொஞ்சம் சொல்லும் நெஞ்சம் ஏழ்மையில் உறவாடுமே வியர்வை நெற்றியில் வழிந்தோடுமே கைகள் தீரமாய் வளைந்தாடுமே உலகம் அவருழைப்பால் மகிழ்ந்தாடுமே காலம் அவர்களைப் பந்தாடுமே அரசியல் அவர்களால் அரங்கேறுமே உலகம் முழுவதும் அலைபாயுமே உறுதியில் அவரினம் கல்லாகுமே பரம்பரை முழுவதும் போராட்டமே பசிக்களை அவர்களின் வாழ்வோட்டமே சொத்துக்கள் அவர்களின் முகவாட்டமே – அவர் காண்பது வாழ்வினில் சோகமூட்டமே அகிலம் அவருழைப்பால் செழிப்பாகுமே இல்லாமை அவர்களின் இருப்பாகுமே மேதினம் என்பது வெறும் கூப்பாடாமே எத்தினம் அவர் […]

Continue reading about எந்த மே ! கொஞ்சம் சொல்லும் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வட்டத்தின் வடிவங்கள்

on April 30th, 2009 by sakthi

சித்திரைத் திங்களில் முத்திரை பதித்தொரு நித்திரை மறந்திடும் இத்தரை தந்த உறவிது புத்தகம் படித்தொரு மெத்தகு இலக்கியம் வித்தக வழியினில் சொத்தெனக் கொண்டே இச்சம் கொள் தமிழ் மிச்சம் இன்றி என் கச்சம் பிடிக்கும் ஒரு அச்சம் கொள்வகை சுற்றிய உலகினில் பற்றிய ஆசைகள் வற்றிய பின்பு எமைத் தொற்றிடும் ஞானங்கள் இத்தனை காலமும் எத்தனை மனதினை கொட்டின சொற்களால் கொத்திய நாவிது பட்டதும் வாழ்க்கையில் சுட்டதும் அறிந்திடும் விட்டதும் புரிந்திடும் வட்டத்தின் வடிவங்கள்

Continue reading about வட்டத்தின் வடிவங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

அன்பு ஊற்று

on April 30th, 2009 by sakthi

உள்ளமெங்கும் ஆனந்த வெள்ளம் பள்ளம் தேடிப் பாயும் எண்ணம் என்னுள் விளையும் அறியா உணர்வுகள் என்னை எனக்கே காட்டும் அழகு முன்னம் ஒருநாள் தொலைத்த கணங்கள் இன்றைய வானில் முழுநிலவாய் உலகம் எதோ உருள்வது உருள்வதுதான் உள்ளே எங்கள் உதாவக் கொள்கைகள் மறையும் பொழுதுகள் எடுத்திடும் உயிர்கள் விடியும் பொழுதுடன் சிரிக்கும் மழலைகளாய் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழையாம் எம்மினம் காணப்போவது ஒரு கண்ணான காலையை இழப்புக்களின் வலியைத் தாங்கி இருப்புக்களை காத்திருந்து திறப்புக்களை கொண்டே நாமும் […]

Continue reading about அன்பு ஊற்று »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மனிதனாய் வாழத்தான் ஆசை

on April 26th, 2009 by sakthi

நேசத்தின் வாசத்தில் நெருக்கத்தின் கூடலில் மிருகமாய் அல்ல மனிதனாய் வாழத்தான் ஆசை நெஞ்சுக்கு நீதியை மறைத்துக் கொண்டே நாளைய உலகத்தின் நலன்களை உதறிவாழும் உருப்படாக் கூட்டத்தில் ஒருவனாய் அல்ல மனிதனாய் வாழத்தான் ஆசை அழுகின்ற முகங்களில் ஆறுபோல் ஓடுகின்ற கண்ணிரைத் துடைத்து வறுமை இல்லா பூமியில் வாழுகின்றோம் என்று பாடிக்கொண்டே எனக்கும் மனிதனாய் வாழத்தான் ஆசை உள்ளத்தில் நர்த்தனமாடும் உருவமில்லா உணர்ச்சிகளை மாலையாக்கி சூடிக்கொண்டு உண்மைக்குப் புறம்பாக வாழும் உன்மத்தரில் ஒருவராய் அல்ல மனிதனாய் வாழ்த்தான் ஆசை […]

Continue reading about மனிதனாய் வாழத்தான் ஆசை »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மெளனமாய் அழுகின்றேன்

on April 26th, 2009 by sakthi

அன்பின் நண்பனே ! மெளனமாய் அழுகின்றேன் மனதுக்குள் துடிக்கின்றேன் முனகல்கள் வாய்வரை வந்து முடிந்து போகின்றன …. காரணம் கேட்காதே தோழா காரியங்கள் தான் எந்தன் காரணங்களுக்கு ஏனோ மூடியிட்டு முழுதாக அடைத்து விடுகின்றன வேதனைகளின் விளிம்பிலே உறவுகளின் விசும்பல் சத்தம் கேட்காத பொழுதில்லை ஆனாலும் கேள்விகள் மரணித்து விட்டன பணம் இருக்கும் மனிதரெல்லாம் பலகாததூரம் சென்று பலகதை பேசி அங்கே வாழ்க்கை படகோட்டும் காலம் நேற்றைய உழைப்பில் இன்றைய உணவுக்கே பாவம் அல்லாடிக் கொண்டிருந்தோர் தான் […]

Continue reading about மெளனமாய் அழுகின்றேன் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சுகமும் சுமையும்

on April 26th, 2009 by sakthi

என்னுள்ளே பிறந்து என்னுள்ளே தவழ்ந்து என்னுள்ளே புதைந்து என்னோடு மறைந்து போகின்ற உண்மைகளே ! உங்களுக்கு யார் கொடுத்தார் ஆயுள் தண்டனை ? அடைப்பட்டுக் கிடந்து துடிக்கின்றீர்களே …. சுதந்திரமாய் வெளியே நீங்கள் வந்தால் துவண்டு விடும் பல உள்ளங்கள் என்னும் பயம் கொண்டுதானோ நீங்கள் என்னுள்ளே உறங்குறீர்கள் ? சுகமாக இருந்த உங்கள் பாரம் ஏனோ இப்போ சுமையாகத் தெரிகிறதே !

Continue reading about சுகமும் சுமையும் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவியரசரின் கால்களில்

on April 23rd, 2009 by sakthi

  எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியர்சரின் பிறந்தநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.   ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.   காசைவிட எது பெரிது?   “தாசியுள வீட்டிலே தவறாத குலமகள் தான்போய்க் குடியி ருந்தால் தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா சம்சாரி என்றறியுமா? நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும் நீசரென் றேயழைப் பார்; நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும் நெருங்குமுன அறிய வேண்டும்! காசு பெரிதல்லநல் நண்பர்பெரி […]

Continue reading about கவியரசரின் கால்களில் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காலங்களில் அவன் வசந்தம்

on April 23rd, 2009 by sakthi

காலங்களில் அவன் வசந்தம் கவிகளிலே அவன் மகாகவி பாடல்களில் அவன் பைரவி படிக்காமலே உயர்ந்த மேதாவி ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆயிரம் நிலவுகள் காண்பதுண்டு ஆயினும் அவன் போல் காணோம் அவனின் பித்தாய் நாம் ஆனோம் இரண்டுமனம் கேட்ட கவிஞன் இதயத்தின் நினைவுகள் வாடாமலும் இழந்திட்ட மகிழ்ச்சியை நினைக்காமலும் இருந்திட மருந்தொன்று தேடியவன் அதோ அந்தப் பறவை போல அடிமை வாழ்வை உடைத்தெறிந்து அனைத்து மக்களும் ஆழியின் அலை போல ஆனந்தம் பொங்க வாழ்ந்திடச் சொன்னவன் போனால் […]

Continue reading about காலங்களில் அவன் வசந்தம் »

Category: கண்ணதாசனின் நினைவுகளில் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் …… (6)

on April 20th, 2009 by sakthi

 அழகான பெண்கள் பரிமாறும் அமிழ்தினும் இனிய விருந்து ….   நெஞ்சத்திலே தோன்றிய நினைவலைகளை ராகத்தோடு மீட்டி எமை மயக்கித் இசையாக்கித் தரும் இசக்கல்ஞனைப் போல, மகுடி ஊதி நாகத்தை மயக்க்கும் மகுடி போல, இலக்கியம் என்னும் தந்திரோபாயத்தால் எமை மயக்கி ஆட்கொள்ளும் இந்தக் கவிப்பெருந்தகையின் படிபுக்களுக்குள் முழ்கி எழுவது எமது அதிர்ஷ்டமே !   கம்பன் தன்னுடைய கற்பனையில் பல காட்சிகளை வரித்துக் கொள்கிறான். காட்ச்சியை வரித்தவன் தான் கவியாகையால் அதைக் கவிதையாக்கி எம்மிதயச்சோலையில் அடிக்கும் […]

Continue reading about கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் …… (6) »

Category: இலக்கியத்திடல் | 2 Comments, Join in »