Subscribe to RSS Feed

முட்டாள்கள் தினமாமே !

on March 31st, 2009 by sakthi

முட்டாள்கள் தினமாமே ! முன்னூறு மலர்கள் என் மூளையில் மலருமோ ? முட்டாளின் மூளையிலே மலரும் என்கிறார்களே ! எத்தனை முறை எத்தனை மனிதர்களால் முட்டாள் என்று மணிமகுடம் சூட்டப்பட்டேன் ……. அத்தனை முறைகளும் என்னுள் என்னை அறிய விதைக்கப்பட்ட விதைகள் அவை என நான் அப்போது அறியவில்லை… இப்போது புரிகிறது …… வதனத்தில் சுருக்கம் உதிர்ந்து போன முடிகளின் ஓரத்தில் சிரிக்கும் நரைமுடிகள் வயது என்னும் ஏணியின் நடுப்பகுதியை நானும் வந்தடைந்து விட்டேன் என வாழ்க்கை […]

Continue reading about முட்டாள்கள் தினமாமே ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உதவும் உள்ளத்தின் குமுறல்

on March 31st, 2009 by sakthi

மழைத்துளியாகி நான் பலமாகப் பெய்தேன் விழுந்ததென்னவோ தரிசான நிலத்தில் தான் அரைத்த சந்தனமாக வீசினேன் நறுமணத்தை , மணம் எனும் உணர்ச்சியற்றோர் கூட்டத்தின் முன்னே மெழுகுதிரியாக பரப்பினேன் ஒளி ஜயகோ! குருடர்கள் உலகமல்லவோ அது கம்பளியானேன் போர்த்தட்டும் என்று கொளுத்தும் வெய்யில் காலமல்லவோ ? சுயநலமெனும் பெயர் கொண்ட உலகில் தியாகத்தின் விலையறியா மாந்தர் சாம்ராஜ்ஜியத்தில் இனியும் நான் முட்டாள்களின் மன்னன் என முடி சூட்டிக் கொள்ளப் போவதில்லை.

Continue reading about உதவும் உள்ளத்தின் குமுறல் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஏழையின் தேசிய கீதம்

on March 31st, 2009 by sakthi

  அழகானதொரு தேசியகீதமதைக் கொண்டதே எங்கள் அருமை நாடு அழுகையையே தேசியகீதமாய்க் கொண்டதே எம்நாட்டின் ஏழை உழைப்பாளி வீடு தினம் ஒருவேளை உணவுக்காய் அலைவதே அத்தோழன் படும் பாடு கருணையற்ற உள்ளங்கள் ஆயிரமாய் கொட்டி தம் பாவம் நீக்க  செய்யும் பூஜை ஒரு கேடு சமமற்ற சமுதாயத்தில் சிறு சமத்துவமேனும் காண தோழரே நாமின்று போடுவோம் புதுக் கோடு வறுமைக்கோலம் காணும் ஏழை உள்ளங்களின் விடிவு நோக்கிய பாதைகளைத் தேடு வகுப்புவாதம் பேசும் மூளையற்ற வீணர்கள் கூட்டம் […]

Continue reading about ஏழையின் தேசிய கீதம் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உண்மைச் செல்வம்

on March 31st, 2009 by sakthi

இளஞ்சூரியனின் ஒளியலையில் உறவாடி இதமாக இழைந்தோடும் காலைத் தென்றலே ! காரிருள் விலக்கி # விடியலைக் கொண்டு வரும் சூரியனோடு காலமெல்லாம் உறவாடக் காத்து நிற்கும் புஸ்பங்களே ! புல்லின் நுனியெங்கிலும் , இலையின் ஓரங்களிலும் துளியாக புதிதாய்ப் புனைந்த வெள்ளியைப் போல் ஒளிரும் பனித்துளியே ! கால் பதிக்கும் இடமெங்கும் வடிவம் காட்டி நிற்கும் இயற்கை கம்பளியாம் பசுமை பூத்த புற்தரையே ! மாலையின் மங்கிய ஒளியில் வெண்ணிலவோடு காதலாடி மயங்கி நிற்கும் இரவின் ராணியாம் […]

Continue reading about உண்மைச் செல்வம் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சித்திரமே என்னை சிதைக்காதே

on March 31st, 2009 by sakthi

கன்னி நீ என்னை இன்று ஏன் தானோ கரைய வைத்தாய் பெண்ணே உன் புன்னகையால் தினம் என்னை வறுத்தெடுத்தாய் மேகத்தினுள் மறையும் நிலவைப் போல் முகம் காட்டி மறைத்திட்டாய் கடைசிவரை கைக்கெட்டா வெண்ணிலவை அம்மா கண்ணாடியில் சிறைப் பிடிப்பாள் தேடிப்பார்த்தேன் கண்ணாடி காணுமிடமெங்கும் தேன்மொழியே நீ இல்லை உறங்கும் போதெல்லாம் இன்னுயிரே கனவினிலே ஏனென்னைச் சீண்டுகின்றாய் ? காதலே வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்றிருந்த நான் எப்படி ? உன்வசம் கைதாகினேன் பெரும் திருடி பகற் கொள்ளைக்காரி […]

Continue reading about சித்திரமே என்னை சிதைக்காதே »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்

on March 31st, 2009 by sakthi

 பித்தன்தான் பிழையான உலகில் சரியாக வாழ முயலும் நானொரு பித்தன் தான் சித்தத்திலே ஊறிய தூறல்களை ஒவ்வொன்றாக அள்ள முயலும் நானொரு பித்தன் தான் பத்தியெறியும் பாசத்தீயின் மத்தியிலே உறவு எனும் பஞ்சைத் தேடும் நானொரு பித்தன் தான் கத்தியோடு யுத்தமிடும் கூட்டத்தின் முன்னே புத்தி விளக்கேற்ற முயலும் நானொரு பித்தன் தான் சத்தியத்திற்கு பூட்டுப் போட்ட சமுதாயச் சந்தையில்  உண்மை எனும் சாவி தேடும் நானொரு பித்தன் தான் நித்தியமானது உலகினிலே வஞ்சகமற்ற அன்பு என […]

Continue reading about பித்தர்களுக்குள் பிச்சைக்காரன் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தழும்பு வலிக்கிறது

on March 29th, 2009 by sakthi

மனமெனும் ஆழியினுள் பார்வையெனும் தூண்டிலிட்டு இதயத்தைக் கொள்ளையிட்ட இனியவளே உன்னைத்தான் ….. வாலிபத்தின் எல்லையிலே வலது காலை வைத்தபோது நீ விரித்த வலையினிலே நான் விழுந்த வேளையிலே காதலென்னும் பாடலுக்கு கனவுகளை இசையாக்கி நினைவென்னும் ஓடத்திலே படகொன்றில் மிதக்க விட்டேன் உணர்ச்சிகளை வேடிக்கையாக்கி நீ தைத்த முட்களினால் காகிதப் படகதுவும் கவிழ்ந்தங்கு மறைந்ததம்மா இதயமென்னும் வீணையிலே உணர்வுகளைக் கூட்டி முதன் முதலாய் அவனிசைத்த முகாரி ராகம் அது காலஎன்னும் களிம்பு தடவி காயம் தன்னை மாற்றினாலும் கடந்து […]

Continue reading about தழும்பு வலிக்கிறது »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

உறக்கம் வேண்டாம் விழித்திடுவீர்

on March 29th, 2009 by sakthi

உறக்கம் உமக்குப் போதும் உண்மை விழிக்கும் நேரம் உன்னைத் தேடுது எதிர்காலம் உறுதியோடு எழுந்து வாரும் கொள்கைகள் என்பன உள்ளத்தினுள்ளே மறைந்தால் கனவு என்றே கரைந்துவிடும் காரியம் யிரம் ஆற்ற வேண்டும் கன்னியர், காளைய உழைத்திட உறுதி கொண்டிட வேண்டும் புதிதாய் ஒரு சமுதாயம் புவியில் இனிமேல் புலர்ந்தாலன்றி புலராது வாழ்வில் சமநீதி புரிந்திடும் எம் இளம் சந்ததி உழைப்பவர் சிந்திடும் உதிரத்தின் பலத்தினில் தாம் பெருக்கிட்ட செல்வத்தை பகிர்ந்திடும் உள்ளம் இழந்ததன் காரணம் பாரினில் எங்கும் […]

Continue reading about உறக்கம் வேண்டாம் விழித்திடுவீர் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கவிதையாக்கித் தாரீரோ !

on March 29th, 2009 by sakthi

பூவின் மீது வந்தமர்ந்து தேனருந்தும் வண்டினமே ! தேனருந்தும் வேளையிலே நீயுணரும் உணர்வுகளை கவிதையாக்கித் தாராயோ ! வசந்தகாலச் சோலயிலே இளங்காலை வேளையிலே ஆலமரத்துக் கிளைகளிலே அமர்ந்து பாடும் குயிலினமே கூவும் அந்த ஓசைகளை செந்தமிழின் வரிகளாலே கவிதையாக்கித் தாராயோ ! மாலைவேளைப் பொழுதினிலே மலரீந்த செடிகளை மிருதுவாக வருடிச் செல்லும் மெல்லினிய தென்றல் காற்றே பச்சிலையின் பசுமை தன்னைப் பைந்தமிழின் வரிகளாலே கவிதையாக்கித் தாராயோ ! உழைத்துக் களைத்த அந்தப் பகலென்னும் இனிய மங்கை உடல்மூடிக் […]

Continue reading about கவிதையாக்கித் தாரீரோ ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஜனநாயகக் கடமை

on March 29th, 2009 by sakthi

மலர்வனத்தில் பூப்பது போல் பல வர்ணக் கொடிகளெல்லாம் காற்றினிலே பறக்குதமா ! நினைவு தெரிந்த நாள் முதாலாய் நிறைந்து விடும் வயிறென்ற வாய்மொழியை ஏற்றுக் கொண்டு வாக்குகுகளின் வழியாக கோட்டைக் கதவுகளைத் திறந்த ஒரு கையின் சொந்தக்காரன் தலைமுறைகள் பல இங்கே வந்து போனதம்மா வாக்குக் கேட்க வாந்தோர்கள் வரும் வாகனங்களின் வகைகள் மாறியதேயழிய என்றும் எம் வாழ்க்கையது மாறவில்லை தேர்தல் வருகுது ! தேர்தல் வருகுது ! குடுகுடுப்பைக்காரன் கையில் கிடுகிடுக்கும் உடுக்கை போல , […]

Continue reading about ஜனநாயகக் கடமை »

Category: கவிதை | No comments yet, be the first »