Subscribe to RSS Feed

கற்றது கைம்மண்ணளவு

on January 15th, 2009 by sakthi

உண்மையான உலகத்தின் வடிவம் ஏன் உள்ளத்தை வருத்துகிறது ? உண்மை கசக்கும் என்பார்களே அதனால் தானா? புரியவில்லை புலத்தின் கோலங்கள். புலரும் பொழுதுகள்  ஒவ்வொன்றும் புரியவைக்கும் பாடங்கள் உயிரைப் புதிதாய்ப் புனருத்தாரணம் செய்ய வைக்கிறது. நெஞ்சத்தில் தெரிகின்ற உண்மைக்கு வார்த்தையில் வடிவம் கொடுக்கும் போது அது கேட்பவருக்கு கஷாயம் போலக் கசக்கிறதே ! காலமெல்லாம் ஓடி, ஓடி கற்க வேண்டிய கசப்பான உண்மைகளளக் கற்று விட்டேன் என்றொரு ஆறுதலுடன் உட்காரும் போது, உட்கார்ந்த இடத்தில் முட்களளப் புதைத்து வைக்கும் உறவுகளின் உண்மையான வடிவம் உள்ளத்தைப் புண்ணாக்குகிறது. ஓ கற்றது கைம்மண்ணளவு தானோ […]

Continue reading about கற்றது கைம்மண்ணளவு »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சொல்லத் தெரியாத உணர்வுகள்

on January 12th, 2009 by sakthi

  சொல்லத் தெரியாமல் சில உணர்வுகள் உள்ளத்தின் மத்தியில் சில சமயங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும். அது எதனால் ஆரம்பிக்கின்றது என்பது தெரியாமல் உள்ளத்தினுள் புகுந்து விடும். இதேபோன்ற உணர்வுகல் இன்று என் மனதில் திடீரென முன்னனிக்கு வந்தன. விடையளிக்க முடியாத பல வினாக்களை உள்ளத்து முன்றலில் அள்ளி வீசுகின்றன. விடைதேடி குழப்பமென்னும் குட்டையினுள் மூழ்கி, மூழ்கி எழுகின்றது நெஞ்சம்.  ஆனாலும் ஆழத்திலிருந்து ஒரு அசரீரி மன அழுத்தங்களைத் தாங்கிப் பிடிக்கத்தான் செய்கிறது. உலகத்தின் பல நிகழ்வுகளால் நெஞ்சில் […]

Continue reading about சொல்லத் தெரியாத உணர்வுகள் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சிந்தனைமொட்டு மலர்ந்த வேளை !

on January 11th, 2009 by sakthi

சிந்தனைமொட்டு மலர்ந்த வேளை சிந்தனைப் பூக்களைச் சேர்த்துக் கட்டிய சந்தன மாலையன்று சாத்திட இன்று எந்தனை மனத்தினில் இருந்து ஒரு செந்தீப்பொறியன்று பிறந்ததுவே ! சித்தத்தின் விளைச்சல் அனைத்துமிங்கு மொத்தத்தில் சிதையில் அடங்குமுண்மை ரத்தத்தின் துடிப்பில் புரிந்த செயல்கள் யுத்தத்தில் இறந்த வேளையன்றே நிஜம் பந்தத்தின் பிணைப்பில் பதிந்த தடங்கள் சொந்தத்தின் சுமைகள் ஆழ்த்திய நேரங்கள் விந்தொன்றின் நீச்சல் கொடுத்த வாழ்வில் பந்தொன்றின் வீச்சாய் உருளும் மனமும் தோற்றத்தின் வேஷங்கள் காலத்தின் கண்ணாடி மாற்றத்தின் விளைவுகள் வயதுகள் […]

Continue reading about சிந்தனைமொட்டு மலர்ந்த வேளை ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மன்னிக்க வேண்டுகிறேன்

on January 11th, 2009 by sakthi

  தெரிந்து ஒரு தப்பையோ, அல்லது தெரியயமல் ஒரு தவறையோ புரிந்து விடுகிறோம். அதன் விளைவு பாரதூரமாக இல்லாதவரை ” மன்னிப்பு ” என்று ஒரு சொல்லால் புண்பட்ட மனதைப் பண்படுத்தக்கூடிய ஆற்றல் நம் அனனவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் ஏனோ எல்லோராலும் இதை உளச்சுத்தியோடு பயன்படுத்த முடிவதில்லை. காரணம்            ” மன்னிப்பு ” என்னும் அந்த ஒரு சொல்லை ” நான் ” என்னும் சொல் மறைத்து நிற்கிறது. மன்னிப்புக் கேட்க வேண்டிய மனிதர், மன்னிப்புக் கேட்கவேண்டியவரின் […]

Continue reading about மன்னிக்க வேண்டுகிறேன் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சந்தர்ப்பவாதிகள்

on January 10th, 2009 by sakthi

    சந்தர்ப்பவாதிகள் என்று சிலருக்கு முத்திரை குத்தப்படுகிறது. யார் இந்தச் சந்தர்ப்பவாதிகள். நாம் சந்தர்ப்பவாதிகள் இல்லையா? ஏன் ? எமது செய்கைகளுக்கு மனட்சாட்சியின் மூலம் நியாயம் என்னும் மூலத்தை பூசிக்கொள்வதன் மூலம், சந்தர்ப்பவாதிகள் என்னும் முகமூடியை அகற்றி விடுகிறோமா? இந்தக் கேள்விகள் எந்தன் இதயத்தில் இன்று ஏனோ முன்னனியில் நீச்சலடிக்கின்றன. சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள் தான். அப்படியாயின் நாமனைவரும் சந்தர்ப்பவாதிகளே. எங்கே சந்தர்ப்பவாதிகள் எனப்படுவோர் வேறுபடுத்தப்படுகிறார்கள் ? சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்குவதற்காக […]

Continue reading about சந்தர்ப்பவாதிகள் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

உணார்ந்து விட்ட்டோஒம் போதுமடா !

on January 10th, 2009 by sakthi

  அன்பு நண்பா !  காற்றிலேறிப் பறப்பதுபோல் காலமதுவும் பறந்ததுவே நேற்று நடந்த நிகழ்வுகள் போல் நேசம் நெஞ்சில் புரள்கிறது   பாசம் என்னும் சொல்லுக்கு பாரில் இன்று அர்த்தம் என்ன தேடித் தேடிக் களைத்து இன்று தோற்றுவிட்டேன் நண்பனே !   அன்னை, தந்தை உறவுகளை இழந்த பின்பு அனாதைதான் இருக்கும் மிச்ச உறவுகளின் இதயங்களும் கருமைதான்   நானும் நீயும் கண்ட உலகம் நம்முடனே மறைந்ததடா நட்பு தரும் நிம்மதி நாலு சொந்தம் தருவதில்லை […]

Continue reading about உணார்ந்து விட்ட்டோஒம் போதுமடா ! »

Category: நண்பனுக்கு ஒரு மடல் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காதலும் …. சாதலும் ….. வழக்கமோ ?

on January 10th, 2009 by sakthi

  ஏந்திழையாளே ! ஏந்திழையாளே !ல் என்னிலை அறியாயோ ? புன்னகை பூத்த உன் பூவதனத்தை சித்தத்தின் முற்றத்தில் நான் முத்திரையாய் பதித்ததை அறியாயோ ? சித்திரை நிலவுந்தன் அழகை நித்திரையின்றி நான் நினைந்தேனே பத்தரை மாற்றுத் தங்கம் போல பத்திரமாக நான் காத்தேனே உத்தரவாதம் தருவாய் நீயென சேத்திரம் போல் உன்னகம் காத்தேனே சாத்திரம் தானுந்தன் வார்த்தைகளென இத்தரை ஈதினில் வாழ்ந்தேனே பூங்குயில் குரலென உன்னிசை கேட்டகம் நானும் மலர்ந்தேனெ மாந்தோப்புக் கிளியின் மழலை போல் […]

Continue reading about காதலும் …. சாதலும் ….. வழக்கமோ ? »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கடந்ததும் கற்றதும்

on January 10th, 2009 by sakthi

கடந்து வந்த பாதையில் நான் கற்றுவிட்ட பாடங்கள் ஆயிரம். ஒவ்வ்வொன்றும் ஒரு விதம், ஒன்றையொன்று மிஞ்சும் வகை. அரசியல் என்னும் சதுரங்கத்தில் ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்த ஆட்டங்கள் ஆயிரம். பிரதமர் என்னும் சாரதி ஆசனத்தில் வந்தமர்ந்த இங்கிலாந்துப் பிரதமர் தனது நாட்டை எந்தத் திசையை நோக்கி நகர்த்தியுள்ளார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சிபீடத்தில் அ மர்ந்திருக்கிறது இங்கிலாந்தின் தொழிற்கட்சி. இயற்கையாக இக்கட்ச்சி இடதுசாரி சோஷலிஷக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவர்களின் பத்து வருட காலத்தில் […]

Continue reading about கடந்ததும் கற்றதும் »

Category: சத்தமுமில்லை யுத்தமுமில்லை | 3 Comments, Join in »
Subscribe to RSS Feed

தோழனின் தோள்களில் மட்டுமா?

on January 9th, 2009 by sakthi

தோழனின் தோள்களில் மட்டுமா?                                     சக்தி சக்திதாசன் தோழனே ! உன் தோள்களில்…. மட்டுமா சுமை? இதயத்தின் மையத்தில் இறைந்திட்ட துயரத்தின் சுமை தாங்காமலோ… இதயத் துடிப்பு கொஞ்சம் தடம் மாறிப்போனது ? உனைக் கேட்டா பெற்றார் உனதருமை பெற்றார்? நீ கேட்டா பிறந்தாய் ? வரம் கேட்டா விந்தாய் தாயின் கருவில் […]

Continue reading about தோழனின் தோள்களில் மட்டுமா? »

Category: Uncategorized, கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

இன்னும் கொஞ்சம் நேரம் தான்

on January 9th, 2009 by sakthi

  அந்த வாரம் இரவு டியூட்டி எனக்கு ஆபிஸில் செய்யும் வேலைக்கு சம்பளப்பண்த்தோடு போனஸ் கொடுப்பது போல் என்னுட்ய சக ஊழியர்கள் எனக்குக் கொடுத்ததோ கடும் ஜலதோஷத்துடன், காய்ச்சலையும் கொடுக்கும் வைரஸைத்தான்.   கட்டிலில் பயங்கர இருமலுடன் படுத்துக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியில் செய்திக்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.   ஈழத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் “பனையால் விழுந்தவனை மாடு ஏறி உழக்கியதாம் ” என்று. அதைப்போல காய்ச்சல் என்று கட்டிலில் கிடந்தவனுக்கு காதுகளில் விழுந்ததோ பயங்கரமான பொருளாதார்ச் செய்திகள்.   ” […]

Continue reading about இன்னும் கொஞ்சம் நேரம் தான் »

Category: Uncategorized | No comments yet, be the first »