Subscribe to RSS Feed

ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்

on August 24th, 2010 by sakthi

சிந்தனைசெய் மனமே ! செய்தால்தீவினை அகன்றிடுமே ! என்னும்ஒரு பாடலை எம்மில் அநேகம்பேர் கேட்டிருப்போம். இப்பாடலின் கருத்துக்கள்  இறையுணர்வையும்,ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்பட்ட பாடலாதலால் இறைநம்பிக்கை  அற்றோர் இதைக் கணக்கிலெடுக்கத் தயங்கக்கூடும். பாடலின் கருத்தையோ,அதுகூறும் சராம்சமான இறையுணர்வையோ தவிர்த்து நான் மேலே குறிப்பிட்ட இரு வரிகளை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள். அவ்வரிகள் சொல்லும் கருத்து மிகவும் எளிமையாக  இருக்கிறது  அல்லவா? சிந்தித்துச் செயலாற்றும் போது அச்செயலின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. சிந்திக்கும் திறன் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் கிடைத்த […]

Continue reading about ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் ...., சொல்லத்தான் நினைக்கிறேன், நண்பனுக்கு ஒரு மடல், பிறமொழித் தழுவல்கள் | 4 Comments, Join in »
Subscribe to RSS Feed

தவறான பதிலைக் காட்டிலும் மெளனம் சிறந்தது

on April 29th, 2010 by sakthi

வாதிடுவது என்பது சிலருக்கு ஒரு போதை வஸ்து போன்றது. உள்ள‌த்தின் கருத்தை தெளிவாக மற்றையோருக்கு புரியவைக்கும் போது, அதனோடு ஒத்துப் போகமுடியாதவர்களோடு ஆக்கபூர்வமாகப் புரியும் தர்க்கம் ஆரோக்கியமானதுவே. ஆனால் ஆரோக்கியமான தர்க்கம் என்னும் எல்லைக்கோட்டைக் கடந்து நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடும் நிலைக்குப் போய்விட்டால் அங்கேதான் தர்க்கம் ஒரு போதைமருந்தாகி விடுகிறது. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்றோ அன்றி எல்லோராலும் எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட முடியும் என்றோ நம்பும் ஒருவரும் இருக்க முடியாது. அப்படியானின் […]

Continue reading about தவறான பதிலைக் காட்டிலும் மெளனம் சிறந்தது »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

எதைத் தேடுகின்றோம் ?

on March 22nd, 2009 by sakthi

சிறுபையன் ஒருவன் ஒருநாள் கடைவீதி வழியாக தன் தாயுடன் நடந்து கொண்டிருக்கும் போது அங்கே உள்ள கடை ஒன்றிலே ஓர் அழகான பொம்மைக்கார் ஒன்றைக் காணுகின்றான்.அந்தப் பிஞ்சு மனதினிலே தன் தாய் அந்தக் காரை தனக்கு வாங்கிக்கொடுப்பாள் எனும் ஓர் நம்பிக்கை ஆழமாகப் பதிந்து விடுகின்றது . அந்தக்காரை வைத்து தான் விளையாடப்போகும் காட்சிகள் அவன் மனதினிலே அழகான கனவுகளாக உருவெடுக்கின்றன.அந்தக்காரை அடைவதும் அதனை வைத்துத் தான் விளையாடுவதுமே அத்தருணத்தில் அவனது லட்சியக்கனவாகி விடுகின்றது. ஒவ்வொரு பிறந்ததினத்தின் […]

Continue reading about எதைத் தேடுகின்றோம் ? »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சுயமாக சிந்திப்பவனே முன்னேறுகிறான்

on March 22nd, 2009 by sakthi

    சிந்திக்கும் திறன் மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஏனைய விலங்கினங்கள் சிந்திக்கும் திறன் பெற்றிருக்கின்றனவா இல்லையா என்பது கேள்விக்குரியவனாகவே இருக்கின்றது.     ஏனேனில் அவர்களின் சிந்திப்பின் பலன்களை செயல்களில் காட்டும் திறன் அவைகளுக்கு குறைவாகவே இருக்கிறது.     இந்தக் கருத்தில் என்னுடன் வேறுபடுபவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இங்கே நான் சொல்ல விழையும் கருத்தின் உள்ளார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்குள்ளது.     இப்படியான சிந்திக்கும் திறன் எத்தனை பேரால் […]

Continue reading about சுயமாக சிந்திப்பவனே முன்னேறுகிறான் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நாகரீகம் என்றால் என்ன ?

on March 19th, 2009 by sakthi

  நாகரீகமாக நடந்து கொள் ! மேலைத்தேசத்து நாகரீகம் ! நாகரீகமான சமுதாயம் !   இவையெல்லாம் எமது அன்றாட வாழ்விலே நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் . இந்த நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தம் எதனை வைத்து எடைபோடப்படுகின்றது ?   இதன் ஆரம்பம் எங்கே ? முடிபு எங்கே ?   நாகரீகம் எனும் போது அவைகளை நாம் பலவாறாகப் பார்க்கின்றோம் . நாகரீகமான பேச்சு , நாகரீகமான உடை,நாகரீகமான பழக்க வழக்கங்கள் என […]

Continue reading about நாகரீகம் என்றால் என்ன ? »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

புரியாமலே புரிந்ததந்த பொழுது

on March 10th, 2009 by sakthi

சுமார் இரண்டரை அல்லது மூன்று வருடங்களிருக்கும்.  அன்று இரவு டியூட்டி முடிந்து காலையில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். காலை 7 மணியிருக்கும், சனிக்கிழமையாதலினால் சாலையில் போக்குவரத்து மிகவும் இலேசாகவே இருந்தது. வீடு செல்லும் வழியில் ஒரு பத்து மைல்கள் அதிவேக சாலையில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். சுமார் மணிக்கு எழுபது மைல் வேகம் அதுகூடிய அனுமதிக்கப்பட்ட வேகம். வீடு செல்ல வேண்டும் என்னும் ஆதங்கத்தில் மிகவும் வேகமாக காரை ஓட்டிச் சென்ற என் பின்னே ஒரு […]

Continue reading about புரியாமலே புரிந்ததந்த பொழுது »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கற்றது கைம்மண்ணளவு

on January 15th, 2009 by sakthi

உண்மையான உலகத்தின் வடிவம் ஏன் உள்ளத்தை வருத்துகிறது ? உண்மை கசக்கும் என்பார்களே அதனால் தானா? புரியவில்லை புலத்தின் கோலங்கள். புலரும் பொழுதுகள்  ஒவ்வொன்றும் புரியவைக்கும் பாடங்கள் உயிரைப் புதிதாய்ப் புனருத்தாரணம் செய்ய வைக்கிறது. நெஞ்சத்தில் தெரிகின்ற உண்மைக்கு வார்த்தையில் வடிவம் கொடுக்கும் போது அது கேட்பவருக்கு கஷாயம் போலக் கசக்கிறதே ! காலமெல்லாம் ஓடி, ஓடி கற்க வேண்டிய கசப்பான உண்மைகளளக் கற்று விட்டேன் என்றொரு ஆறுதலுடன் உட்காரும் போது, உட்கார்ந்த இடத்தில் முட்களளப் புதைத்து வைக்கும் உறவுகளின் உண்மையான வடிவம் உள்ளத்தைப் புண்ணாக்குகிறது. ஓ கற்றது கைம்மண்ணளவு தானோ […]

Continue reading about கற்றது கைம்மண்ணளவு »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சொல்லத் தெரியாத உணர்வுகள்

on January 12th, 2009 by sakthi

  சொல்லத் தெரியாமல் சில உணர்வுகள் உள்ளத்தின் மத்தியில் சில சமயங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும். அது எதனால் ஆரம்பிக்கின்றது என்பது தெரியாமல் உள்ளத்தினுள் புகுந்து விடும். இதேபோன்ற உணர்வுகல் இன்று என் மனதில் திடீரென முன்னனிக்கு வந்தன. விடையளிக்க முடியாத பல வினாக்களை உள்ளத்து முன்றலில் அள்ளி வீசுகின்றன. விடைதேடி குழப்பமென்னும் குட்டையினுள் மூழ்கி, மூழ்கி எழுகின்றது நெஞ்சம்.  ஆனாலும் ஆழத்திலிருந்து ஒரு அசரீரி மன அழுத்தங்களைத் தாங்கிப் பிடிக்கத்தான் செய்கிறது. உலகத்தின் பல நிகழ்வுகளால் நெஞ்சில் […]

Continue reading about சொல்லத் தெரியாத உணர்வுகள் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மன்னிக்க வேண்டுகிறேன்

on January 11th, 2009 by sakthi

  தெரிந்து ஒரு தப்பையோ, அல்லது தெரியயமல் ஒரு தவறையோ புரிந்து விடுகிறோம். அதன் விளைவு பாரதூரமாக இல்லாதவரை ” மன்னிப்பு ” என்று ஒரு சொல்லால் புண்பட்ட மனதைப் பண்படுத்தக்கூடிய ஆற்றல் நம் அனனவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் ஏனோ எல்லோராலும் இதை உளச்சுத்தியோடு பயன்படுத்த முடிவதில்லை. காரணம்            ” மன்னிப்பு ” என்னும் அந்த ஒரு சொல்லை ” நான் ” என்னும் சொல் மறைத்து நிற்கிறது. மன்னிப்புக் கேட்க வேண்டிய மனிதர், மன்னிப்புக் கேட்கவேண்டியவரின் […]

Continue reading about மன்னிக்க வேண்டுகிறேன் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சந்தர்ப்பவாதிகள்

on January 10th, 2009 by sakthi

    சந்தர்ப்பவாதிகள் என்று சிலருக்கு முத்திரை குத்தப்படுகிறது. யார் இந்தச் சந்தர்ப்பவாதிகள். நாம் சந்தர்ப்பவாதிகள் இல்லையா? ஏன் ? எமது செய்கைகளுக்கு மனட்சாட்சியின் மூலம் நியாயம் என்னும் மூலத்தை பூசிக்கொள்வதன் மூலம், சந்தர்ப்பவாதிகள் என்னும் முகமூடியை அகற்றி விடுகிறோமா? இந்தக் கேள்விகள் எந்தன் இதயத்தில் இன்று ஏனோ முன்னனியில் நீச்சலடிக்கின்றன. சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள் தான். அப்படியாயின் நாமனைவரும் சந்தர்ப்பவாதிகளே. எங்கே சந்தர்ப்பவாதிகள் எனப்படுவோர் வேறுபடுத்தப்படுகிறார்கள் ? சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்குவதற்காக […]

Continue reading about சந்தர்ப்பவாதிகள் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் .... | 1 Comment, Join in »