Subscribe to RSS Feed

மனதோடுதான் நான் பேசுவேன்

on February 29th, 2016 by sakthi

மனதோடுதான் நான் பேசுவேன் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் மனதோடு பேச விழைகிறேன் தாயின் வயிற்றில் கருவாய் முகிழ்த்து பத்து மாதங்களில் புவியில் ஜனனிக்கிறோம். அந்த ஜனனத்தின் முடிவு மட்டும் தெரியாமல் வாழ்கிறோம். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏதோ எம் வாழ்வு என்றுமே நிலைத்திருக்கும் ஒரு நம்பிக்கையில் வாழ்வது போல வாழத் தலைப்பட்டு விடுகிறோம். இதுதான் சராசரி மனிதனின் வாழ்க்கை, இவ்வாழ்க்கையில் எம்முள் பல தேடல்கள் எழுந்தாலும் அவற்றின் யதார்த்தங்களை பல சமயங்களில் மூடிவைத்து வாழ முயற்சிக்கிறோம். […]

Continue reading about மனதோடுதான் நான் பேசுவேன் »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறுந்தொகை எனும் புதையல்

on June 13th, 2010 by sakthi

    இன்று காலை என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழுந்த உயிரெழுத்து குழுமத்தின் அஞ்சல் தொகுப்பின் வாயிலாக பார்த்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.   ஆமாம் லண்டன் சுரங்க ரயில் பாதையில் உள்ள விளம்பரப் பலகை ஒன்றில் குறுந்தொகையும் அதன் ஆங்கில விளக்கமும் காணப்படுகிறது என்ற செய்தியே அது.   மதுரையில் செம்மொழி மாநாடு ஆரம்பமாகப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இச்செய்தி என் காதில் விழுந்தது என்னை ஒருமுறை உலுக்கியது.   குறுந்தொகை […]

Continue reading about குறுந்தொகை எனும் புதையல் »

Category: இலக்கியத்திடல், கட்டுரை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

போகோனியா டைகர் ( Bogonia Tiger)

on June 13th, 2010 by sakthi

என்ன இது புதுவிதமான தலையங்கம் ? எதைப் பற்றிய அலசலாகவிருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை.   ஆமாம் இது புதுவிதமான தைலய்ங்கம் தான் ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனதினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வடிப்பு இது எனலாம்.   சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரியஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அறையினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தேன். […]

Continue reading about போகோனியா டைகர் ( Bogonia Tiger) »

Category: உள்ளத்தின் ஓசை, கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இதுவும் ஒரு ஓலம் தான் !

on March 3rd, 2010 by sakthi

ஒன்றா இரண்டா மனதில் உளையும் உணர்வுகள்? வாழ்க்கையின் திருப்பங்கள், எதிர்பாரா வளைவுகள் எத்தனை, எத்தனை அத்தனையும் ஒரு சிறு இதயம் தாங்கிக் கொண்டு நாளுக்கு ஒரு இலட்சம் முறை துடிக்கிறதாமே! அதன் ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு அர்த்தம் இருந்தால் எத்தனை பாகங்கள் உள்ளடங்கிய புத்தகப் பதிவுகளாயிருந்திருக்கும்? வருட ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் முடிவதற்குள் மூன்றி உயிர்களைக் காலன் காவு கொண்டு விட்டான். அவ்வுயிர்கள் மூன்றும் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நிலைகளுக்குள்ளாகிய உயிர்கள். 22வயது […]

Continue reading about இதுவும் ஒரு ஓலம் தான் ! »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நடந்து வந்த பாதையிலே . . .

on December 28th, 2009 by sakthi

 மாதங்கள் ஒவ்வொன்றாய் பண்ணிரண்டும் ஓடி வருடத்தின் முடிவென்னும் மைல் கல்லில் நிற்கின்றோம். நடந்து வந்த பாதையிலே நாம் கடந்து வந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்கின்ற பொன்னான வேளையிது.   வருடத்தின் ஆரம்பத்திலே சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அந்த புரட்சிக்கு அமெரிக்க மக்கள் வித்திட்டார்கள். ஆம் ஒரு கறுப்பு இனத்தவரை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி ஒரு சாதனையை சரித்திரத்தின் ஏட்டினிலே தமதாக்கிக் கொண்டார்கள் அமேரிக்க மக்கள்.   வருவாரா? வரமாட்டாரா? என்ற பல வாத, பிரதிவாதங்களுக்கு மத்தியில் […]

Continue reading about நடந்து வந்த பாதையிலே . . . »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தாயின் கோபம்… பிரதமரோ பாவம்… பத்திரிகைக்கு லாபம்…!

on November 22nd, 2009 by sakthi

ஆப்கானிஸ்தானில் சிக்குண்ட பிரித்தானிய இராணுவத்தின் நிலை, புதைசேற்றினுள் அகப்பட்டதைப் போல ஒரு நிலைதான். 9/11 அமெரிக்க நிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத்தின் ஆரம்பம், ஆப்கானிஸ்தான் என்னும் முடிவில் எழுந்த அமெரிக்க, பிரித்தானிய ஆப்கானிஸ்தான் மீதான இராணுவ முற்றுகை இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களுக்கும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் என்னும் சிலந்தி வலையினில் அகப்பட்ட ரஷ்ய ராணுவம், அந்த இராணுவ ஆக்கிரமிப்பு தமது நாட்டில் தலைவர்களுக்குக் கிடைத்த அரசியல் விழுக்காட்டின் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. இன்று […]

Continue reading about தாயின் கோபம்… பிரதமரோ பாவம்… பத்திரிகைக்கு லாபம்…! »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மங்கியதோர் நிலவினிலே

on March 7th, 2009 by sakthi

“மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்” . அழ்கான, கருத்தாழமிக்க ஒரு பாடல். பெண்ணின் மீது கொண்ட காதலினால் ஆண் ஒருவனின் கற்பனைச்சிறகு விரிந்ததினால் உதித்த ஒரு பாடல். மார்ச் 8ம் திகதி. சர்வதேச மகளிர் தினம். 2009ம் ஆண்டிலே பெண்கள் மீதான ஆண்களின் பார்வை, சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது? பெண்களின் திறமைகள், அத்திறமைகளுக்கு ஏற்றவாரு அங்கீகரிக்கப்ப்டுகிறதா? பெண்களுக்கு சமுதாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்தஸ்து அவர்களின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றதா ? பல கேள்விகள் எமது நெஞ்சத்து முன்றலில் சதிராடுகின்றன. […]

Continue reading about மங்கியதோர் நிலவினிலே »

Category: கட்டுரை | No comments yet, be the first »