Subscribe to RSS Feed

காகிதப்பூ வாசங்களே !

on February 18th, 2016 by sakthi

பயணங்கள் முடிவதில்லை பாதையும் தெரிவதில்லை பாடத்தின் முடிவில் ஒரு பத்தியும் புரியவில்லை நேரத்தின் நீளத்தில் புதைந்திருக்கும் கோலங்கள் மீதமில்லா வகையினிலே செலவாகிடும் காலங்கள் நிச்சயத்தின் முடிவினிலே நிசப்தமான நியாயங்கள் நெஞ்சத்தின் முன்றலில் சதிராடிடும் சாத்திரங்கள் விளக்கமில்லா விடயங்கள் வெளிச்சத்தின் கருமைகள் மூடியில்லா பெட்டியினுள் மோதிநிற்கும் நினைவலைகள் காரியத்தின் வெற்றியிலே காரணங்கள் அம்பலமே வீரியத்தின் ஓரத்திலே விவேகங்கள் பூஜ்ஜியமே நாணயத்தின் ஒருபக்கம் ஞாபகத்தின் அடித்தளமே கானல்நீரானதுவே நேரில் கண் பார்த்த உண்மைகள் சோதனைக்கு ஒரு தளமும் வேதனைக்கு மறு […]

Continue reading about காகிதப்பூ வாசங்களே ! »

Category: கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

அஹிம்சை தேடி எண்ணங்கள் அலையும்

on February 17th, 2016 by sakthi

சித்தத்திலே தமிழ் ஊறும் – என் சிந்தையிலே தேனூறும் செந்தமிழின் வனப்பினிலே செம்மொழியின் மணம் கமழும் கவியாக்கும் கவிஞனல்ல –யான் கற்றறிந்த அறிஞனல்ல நெஞ்சிலெழும் மொழிக் காதலால் சுரந்திடுமிந்த சொற்கூட்டல் கவியரசன் பா கேட்டால் – நான் கானகத்தில் தொலைந்திடுவேன் மரபொன்றும் அறிந்திலேன் மன உணர்வினை வடித்திடுவேன் தமிழ் மணக்கும் மண்ணில் உதித்தேன் – நான் தமிழன்னை மடியில் தவழ்ந்தேன் தன்னை அன்று மறந்ததினால் தாயகம் விட்டுப் புலம் பெயர்ந்தேன் உள்ளத்திலே தோன்றுவதைத் தமிழாய் – நான் […]

Continue reading about அஹிம்சை தேடி எண்ணங்கள் அலையும் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஏப்பிரல் ஒன்று !

on April 1st, 2015 by sakthi

ஏப்பிரல் ஒன்று ! காலையில் விழித்ததும் முகக் கண்ணாடியில் முழு உருவத்தையும் பார்த்தேன் சிரித்தது என்னைப் பார்த்து . . . . ஓ ! இன்று முட்டாள்கள் தினமல்லவா ? அதுதான் எனைப்பார்த்து என் உருவம் இன்றெனது நாள் என்று பாராட்டுகிறதோ ? சிந்தனைச் சக்கரங்கள் விரைவாகச் சுற்றியும் ஏனோ திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் ! சிக்கிக் கொண்டு விட்டது நினவுச் சகதிக்குள் . . . . தெளிவு எனும் பலம் கொண்டு […]

Continue reading about ஏப்பிரல் ஒன்று ! »

Category: கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

பாரில் காத்திடு எந்தன் விழுதே !

on March 27th, 2014 by sakthi

துள்ளுமொரு காலைப் பொழுதில் அள்ளுமொரு இயற்கைக் காட்சி சொல்லுமொரு இனிய செய்தி வெல்லுமொரு மனதைப் பொழுது வீசும் தன் கதிர்களினால் புவியில் பூசும் ஒளியை ஆதவன் அழகாய் பேசும் அந்தப் பறவையின் மொழிகள் காசும் தாரா இத்தகை இன்பத்தினை கொஞ்சும் முகில்கள் வானத்தினை கெஞ்சும் விழிகள் ஒருகணம் நோக்கிட விஞ்சும் மகிழ்வது ந்ஞ்சை நிறைத்திட தஞ்சம் என்றே இயற்கையில் புகுந்திட என்றும் வாழ்ந்திடும் இயற்கையை மதித்திடா கொன்றும் வென்றும் மிதித்திடும் மனிதர் அன்றும் இன்றும் தம்நிலை மறந்திட்டே […]

Continue reading about பாரில் காத்திடு எந்தன் விழுதே ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம்

on June 9th, 2013 by sakthi

என்னென்ன வண்ணங்கள் எந்தெந்த மலர்களில் உண்டோ அவ்வண்ணம் மாந்தரும் அவனியில் அந்தந்த குணங்களில் மிளிர்வர் எங்கெங்கு தேனென்று தேடி அங்கங்கு சுவைத்திடும் தேனி போல் என்னென்ன இன்பங்கள் என்றே அங்கேல்லாம் அலைந்திடுவர் இகத்தினில் எவ்வகைத் துயரங்கள் உண்டோ அவ்வழி தன்னில் நுழையாதோர் உண்டோ எத்தகை அனுபவங்கள் அடைந்தாலும் அத்தனையும் அறிவினில் உறைத்திடுவரோ ? எத்தரும் சுத்தரும் இணைந்ததே உலகம் அத்தனை வகைகளின் உறைவிடம் இதுவே புத்தரும், சித்தரும் துளிர்த்ததும் இங்கே புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம் சக்தி சக்திதாசன்

Continue reading about புலர்த்திடும் நிஜங்களைத் தேடுவோம் »

Category: Uncategorized, கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை

on April 11th, 2013 by sakthi

நெஞ்சினில் ஆசையை வளர்த்து நேசத்தின் ஆழத்தில் புதைந்து நிஜத்தின் நீளத்தை மறந்த நங்கையே இதைக் கேளாய் உள்ளத்தைக் கொடுத்து மறு உள்ளத்தை வாங்கிடும் உறவே உண்மைக் காதல் உணர்ந்திடுவாய் உலகின் நிகழ்வுகளை அறிந்திடுவாய் இளமையின் வேகத்தின் சுழற்சியில் இளைஞர்கள் செப்பிடும் மொழிகளில் இதயத்தை இழந்திட்ட பின்னால் இழப்பின் மிஞ்சுவது வலியே ! ஒட்டிப் பிறந்த உறவுகளும உன்னை ஒப்பிலாப் பெண்ணாக்கிய தாயவளும் ஒப்பற்ற மகிழ்வினை டைந்திடும் வகையில் ஒருத்தியாய் உயர்ந்திட உழைத்திடுவாய் அழியாக் காதல் உன்னது என்றால் […]

Continue reading about நிறைகுடமென நிலைத்திடும் உன் வாழ்க்கை »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்

on April 6th, 2013 by sakthi

வானகத்தின் மேனியிலே நட்சத்திரங்கள்வீற்றிருக்கும் வண்ண விளக்குகளாய்கானகத்தின் மரத்திலெல்லாம் ஆடி நிற்கும்காற்றிலந்த பச்சை இளந்தளிர்கள்தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள்தொலைவில் போகும் ஊர்கோலங்கள்பட்டுவிடச் சிலிர்க்கும் இளந் தென்றல்பட்டுடலை மெல்ல வருடிச் செல்லும்சொட்டுகின்ற பனித்துகள்கள் ஒளியில்சொக்கி மிளிரும் ஒளிர் பொன் துகளாய்மீடும் அந்த பறவைகள் கானங்களைமிதக்க வைக்குமெமை வான் வெளியில்பூட்டி வைத்த கற்பனைத் தேர் தானாகபூட்டுடைத்து பவனி வரும் வானுலகில்ஏட்டிலொரு கவி படைக்க எனக்கிங்கேஎழில்மிகு பசுந்தரை விரிந்தது கம்பளமாய்செம்மொழி தொடுத்தொரு கவிமாலை பின்னசெந்தமிழ்த்தேன் நெஞ்சில் சுரந்தே இனித்ததுசெந்துரம் ஜொலித்திருக்க என் தமிழன்னைசெழிப்புடனே […]

Continue reading about தொட்டுவிடத் துடிக்கும் வெண் மேகங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வாழ்க்கை வாழ்வதற்கே !

on April 4th, 2013 by sakthi

காலைக் கதிரவன் தன் கதிர்களை பூமியின்மேனியின் மீது தவழ விடுகிறான் தோழனே ! விடிந்து விட்டதுஎழுந்திடுவாய் ! ஏற்றமிகு செயல்கள் பல ஏர்போல் பீடுநடை கொண்ட உனக்காகக் காத்துக் கிடக்கின்றன ! இதயத்தின் ஆழத்தில் உறங்கும் இணையில்லா இலட்சியங்கள் அரும்பாகவே பாவம் கருகிவிடும் அரும்புகள் பல உன் உழைப்புக்காக ஆவலாய்க் காத்து நிற்கிறார்கள் ஏன் தோழா? இன்னும் தயக்கம் ? உன் அனுபவப் பாசறையில் ஆயிரமாய் கருத்துகள் கொட்டிக் கிடக்கின்றனவே ! இன்னும் ஏனடா தயக்கம் ? […]

Continue reading about வாழ்க்கை வாழ்வதற்கே ! »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள்

on March 22nd, 2013 by sakthi

செல்ல முடியாத பயணங்கள் சொல்ல முடியாத கருத்துகள் அள்ள முடியாத செல்வங்கள் – இவையே தள்ள முடியாத ஞாபகங்கள் வெல்ல முடியாத யுத்தங்கள் மெல்ல முடியாத உண்மைகள் கொல்ல முடியாத தருணக்கள் – இவையே கிள்ள வைக்கின்ற உணர்வுகள் துள்ள வைத்திடும் ஆசைகள் தெள்ளத் தெளிவான அறிவலைகள் கள்ளத் தனமான செய்கைகள் – இவையே முள்ளைப் போல உறுத்துபவை குள்ளத் தனமான தந்திரங்கள் பிள்ளைத் தனமான சூட்சுமங்கள் வெள்ளைத் தனமற்ற பார்வைகள் – இவையே என்னை யறிந்து […]

Continue reading about என்னை யறிந்து கொள்ள ஆயுதங்கள் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

on March 7th, 2013 by sakthi

சிந்தனை செய்யுங்கள் தோழர்களே சித்தத்தில் உண்மையைக் காணுங்கள் மாதர் தம் பெருமைகளை உணர்ந்து மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள் சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து சாத்திரங்கள் பலவும் ஓதியவள் காதலியாய் கண்களிலே புகுந்து எமை கைபிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள் எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை ஏற்றி நாமும் போற்ருவதற்கு ஒருநாள் அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும் அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான் கொழுந்து விட்டெறியும் கவிதைகளால் கொளுத்தினான் பெண்ணடிமைக் […]

Continue reading about வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய ! »

Category: கவிதை | No comments yet, be the first »