Subscribe to RSS Feed

படித்”தேன்” . . . . சுவைத்”தேன்”

on February 18th, 2016 by sakthi

இன்று காலை எனது “வாட்ஸ் அப்” செய்திக் கோர்வையில் ஒரு படத்துடன் கூடிய கவிதை வரிகள் வந்து விழுந்தது. மிகவும் எளிமையாக ஆனால் தன்னுள் மறைந்துப் புதைத்திருக்கும் பொருட்செறிவு ஆழமானதாக இருக்கும் வகையில் அமைந்திருந்த அந்த கவிதை வரிகள் என்நெஞ்சத்தில் அழகாய்ப் பதிந்து விட்டது. நண்பர் இராஜா தியாகராஜன் அவர்களின் சிந்தையில் உதித்த ஒரு கவிதை. அது என்னெஞ்சில் ஏற்படுத்திய தாக்கம் அழகானது, இனிமையானது, ஆழமாய்ச் சிந்திக்க வைத்தது. அது கவிதையோ அன்றி வரிகளோ எதுவாயினும் என்னைப் […]

Continue reading about படித்”தேன்” . . . . சுவைத்”தேன்” »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

தொடங்க எடுக்கும் முடிவே சாதனையின் ஆரம்பம்

on April 5th, 2010 by sakthi

    ஆரம்பமும் முடிவும் , முடிவும் ஆரம்பமும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கிறது. சாதனை என்றால் என்ன ? அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்ததோ அன்றி ஆக்கிமிடிஸ் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்ததோ மட்டும் தான் சாதனையா?   ஒரு மனிதன் தன் வாழ்வை “மனிதனாக” வாழ்ந்து முடிப்பதும் சாதனையே ! வாழ்க்கை என்பது சிக்கல்கள் பல நிறைந்த புதிர் போன்றது. ஒவ்வொரு சிக்கல்களாக அவிழ்த்துக் கொண்டு போகும்போது புதிய சிக்கல்கள், புதிய […]

Continue reading about தொடங்க எடுக்கும் முடிவே சாதனையின் ஆரம்பம் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சுற்றத்தின் அழகு சூழ இருக்கும்

on March 20th, 2010 by sakthi

  ஒரு மனிதனின் சொந்தம், உறவு அவனது சுற்றம் என்று கருதப்படுகிறது. மனிதர்களாக நாம் பிறக்கும் போது எமது சுற்றத்தை நாம் தெரிவு செய்வதில்லை. எமக்கும் மேலே உள்ள ஒரு சக்தியால் எமது சுற்றம் நிர்ணயிக்கப்படுகிறது.   அந்தச் சுற்றங்கள் வகுத்த எல்லைக் கோட்டினுள் நாம் எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். இதுதான் உனது வாழ்க்கை முறை என்று எமது கலாச்சார வரம்புக்கள் அந்தச் சுற்றங்களினால் போதிக்கப்படுகின்றன. எமது பாரம்பரிய வழக்கங்கள் அந்தச் சுற்றியுள்ள சொந்தங்களின் செயற்பாடுகளினால் […]

Continue reading about சுற்றத்தின் அழகு சூழ இருக்கும் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மனிதாபிமானத்தை மிஞ்சிய ஆன்மீகம் இல்லை

on March 20th, 2010 by sakthi

நமக்குள்ளே இருக்கும் தெய்வத்தை நாம் கண்டு கொள்ளாவிட்டால் ஆலயத்தில் இருக்கும் தெய்வத்தை எப்படி அடையாளம் காணப்போகிறோம் ? இந்தக் கேள்வியின் அடியிலே உறைந்து கிடக்கும் உண்மைகளை நாம் உரசிப்பார்க்கத் தயங்கக்கூடாது. நான் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஆன்மீகவாதி என்று கூறிக்கொண்டு, தெய்வத்தின் பெயரால் பெருநாட்களிலெல்லாம் விரதங்களைப் பேணிக்கொண்டு, சக மனிதனின் உணர்வுகளை மதிக்கத் தெரியாமல் வாழுவோர் பலர் இருக்கிறார்கள். ஆன்மீகம் என்றால் என்ன? அன்மாக்களின் புனிதத்தை அறிந்து கொள்வது. அகந்தைகளைக் களைந்து கொள்வது. நான், எனக்கு […]

Continue reading about மனிதாபிமானத்தை மிஞ்சிய ஆன்மீகம் இல்லை »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

குறைகளைச் சுட்டிக் காட்டுபவனே உண்மையான நண்பன்

on January 1st, 2010 by sakthi

  அதோ அவன் தான் எனது உற்ற நண்பன் என்று பெருமையாக நாம் சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் நண்பர்கள் என்பதற்கு எம் மனதில் உண்மையான அர்த்தத்தை எம்மில் எத்த்னை பேர் புரிந்து கொண்டுள்ளோம் என்று எண்ணிப்பார்த்தால் விடை மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.   இந்த உற்ற நண்பன் என்பதன் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொள்வதற்கு பல காலங்கள் எடுத்தது என்பதுவே உண்மையாகும்.   நண்பன் என்றால் நாம் கஷ்டப்படும் போது உதபுபவன், நாம் கொண்டிருக்கும் அனைத்துக் […]

Continue reading about குறைகளைச் சுட்டிக் காட்டுபவனே உண்மையான நண்பன் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வார்த்தைகளைக் கவனித்தால் வாழ்வு சிறக்கும்

on December 31st, 2009 by sakthi

எமது நாக்கிற்கு நரம்பு கிடையாது ஆகவே அது எத்தகைய வடிவிலும் வளையக்கூடியது. எதையும் வரம்பின்றிப் பேசி விடும் வல்லமை கொண்டது.   உணர்ச்சிகள் உள்ளத்தில் எகிறிக்குதிக்கும் போது உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் அலைபாயும். அவ்வேளையில் எமது நாக்கை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகிறது.   எமது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் பொதுவாக இரண்டு முக்கிய விளைவுகளைக் கொடுக்கக் கூடிய வல்லமை கொண்டது. எமது வார்த்தைகளைச் செவிமடுப்பவரை மகிழ்ச்சிப்படுத்தவோ அன்றி மனம்வருத்தவோ செய்யும் ஆற்றலே அவை.   ஆனால் அவற்றை […]

Continue reading about வார்த்தைகளைக் கவனித்தால் வாழ்வு சிறக்கும் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஒரு யுகத்தின் தோல்விகளை ஒரு நொடி வெற்றி சமப்படுத்தும்

on December 29th, 2009 by sakthi

 வெற்றியும், தோல்வியும் மனித வாழ்க்கையில் சகஜம் . வெற்றியைக் கண்டு மகிழும் அதே மனம் தோல்வியைக் கண்டு துவளாமல் இருப்பதே அடுத்த வெற்றியின் அடிக்கல்.   மனிதர்களுடைய வாழ்க்கையின் வெற்றியின் அளவுகோல் அவர்களது மனமே . ஒவ்வொருவருடைய மனமுமே அவர்களது வெற்றியை நிர்ணயிக்கிறது. தமது வாழ்வின் வெர்றியை மற்றவர்களின் பார்வையைக் கொண்டு அளக்க முற்படுபவர்கள் வெற்றி காண்பது அரிது.   எனது உற்ற நண்பர் ஒருவர் தான் விரும்பிய வெளிநாட்டுக்குச் செல்வதற்காகப் பல முயற்சிகள் எடுத்தார். ஏறக்குறைய […]

Continue reading about ஒரு யுகத்தின் தோல்விகளை ஒரு நொடி வெற்றி சமப்படுத்தும் »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | No comments yet, be the first »