Subscribe to RSS Feed

தாய்மண்ணின் வாசம்

on July 25th, 2010 by sakthi

    தாய்மண்ணின் வாசம் – நெஞ்சில் தேனாக ஊறும் தமிழ் தந்த தேசம் எனைத் தாலாட்டும் நேரம்   நினைவுகளைத் தாங்கி – நான் கனவுகளில் ஏங்கி தாய்நாட்டை நீங்கித் தவித்தேன் கவலைகளை வாங்கி   கடல் கடந்து வந்தும் – காலம் கடந்து பல சென்றும் நிழலாக நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் பாசம் இன்றும்   கலந்திட்ட கனவுகளில் – இன்னும் கரைந்திட்ட எண்ணங்கள் கற்றதும் பெற்றதும் எத்தனை ஆயினும் காலத்தால் அழியாத மண்நேசம் […]

Continue reading about தாய்மண்ணின் வாசம் »

Category: கவிதை, தாய்மண் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காற்றோடு கலந்து கடலோடு மிதந்து

on June 30th, 2010 by sakthi

    தாய் மண்ணின் மடிதனிலே தவழ்ந்தந்தப் பொழுதினிலே தமழ்மொழியின் வாசத்திலே தனை மறந்த வேளையிலே   சந்தமெனும் தாழையிலே தமிழ் சொல்லென்னும் பூத்தொடுத்து சிந்துகின்ற தேன் துளி போல் பைந்தமிழில் கவி சமைத்து   நித்தமொரு தாமரையாய் என் நெஞ்சமெனும் தடாகத்தில் பூத்த பல தாமரைகள் புதைத்து வைத்த சிந்தனைகள்   சத்தமின்றிக் கூவி நிற்கும் சித்திரத்துப் பூங்குயில்கள் யுத்தமின்றிப் பொருதி நிற்கும் மிதித்து வந்த அனுபவங்கள்   காததூரம் கடந்து இன்று கதறுகிறேன் தாய்மொழியில் […]

Continue reading about காற்றோடு கலந்து கடலோடு மிதந்து »

Category: கவிதை, தாய்மண் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இம்மையில் இழந்ததை

on May 18th, 2010 by sakthi

என்னைத் தாலாட்டும் இளங்காலைப் பொழுதினிலே எந்தை திருநாட்டின் எண்ணங்கள் அலைமோதும் அந்திப் பொழுதின் சாரத்திலே அன்றுநான் எனை மறந்து அன்றில் போலாடி மகிழ்ந்த வேளை அணையா ஒளியாய்க் கதிர் வீசுதே ! அன்னை மண்ணின் வாசமது அள்ளி நெஞ்சைப் பின்னிக்கொள்ள அழகுத் தமிழின் பெருமைகளெல்லாம் அலையாய் நெஞ்சில் நுரைத்தபடி புகையாய்க் கரைந்த காலமது புனலாய் விரைந்த வாழ்கையது புலத்தை பெயர்ந்த காரணங்கள் புரியா நிகழ்வுகள் புரிந்ததன்றோ விதையாய் விழுகின்ற வேளையிலும் விழவேண்டும் எந்தன் அன்னை மண்ணில் செடியாய் […]

Continue reading about இம்மையில் இழந்ததை »

Category: கவிதை, தாய்மண் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

சரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல்

on December 31st, 2009 by sakthi

 நீ நடக்கும் செம்மண்ணின் நிறத்தின் சரித்திரத்தை அறிந்திருக்க மட்டாய் குழந்தை நீ . . .   தத்தித் தத்தி நீ தவழும் இம்மண்ணில் எத்தனை உயிர்கள் தம் செங்குருதியைக் கொட்டி மண்ணைச் செம்மண்னாக்கினார்கள் அறிய மாட்டாய் ஏனெனில் மழலை நீ   சுவாசிக்கும் காற்றுக்கூட தமக்குச் சொந்தமில்லை என்பதினால் தமது சுவாசத்தை விலையாக கொடுத்துச் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அறிய மாட்டாய் ஏனென்றால் நீ இன்னும் அம்மண்ணில் தவழும் குழந்தை   […]

Continue reading about சரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல் »

Category: தாய்மண் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …

on March 21st, 2009 by sakthi

விளையாட்டல்ல நண்பா விடிவைத்தேடி விழியெல்லாம் நீராக விரைகின்றார் என் தேச மக்கள் !   காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை இறுகப்பற்றி கண்களைச் சுருக்கிக் கருக்கலில் தெரியும் விடியலைக் காண விரைகின்றார் கண்ணான என்னீழத் தமிழரவர் !   போர் கொடுத்த சோதனையும் பெரும் சுனாமி விளைத்த சேதத்தையும் பொறுத்தே நடக்கும் அம்மண்ணின் மைந்தரவர் பொன்னான காலமொன்று காணும் வேளை பொங்கியெழுந்து வரும் நாள் என்றோ ?   புலம் பெயர்ந்தவர் […]

Continue reading about விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி … »

Category: தாய்மண் | No comments yet, be the first »