Subscribe to RSS Feed

ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும்

on August 24th, 2010 by sakthi

சிந்தனைசெய் மனமே ! செய்தால்தீவினை அகன்றிடுமே ! என்னும்ஒரு பாடலை எம்மில் அநேகம்பேர் கேட்டிருப்போம். இப்பாடலின் கருத்துக்கள்  இறையுணர்வையும்,ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்பட்ட பாடலாதலால் இறைநம்பிக்கை  அற்றோர் இதைக் கணக்கிலெடுக்கத் தயங்கக்கூடும். பாடலின் கருத்தையோ,அதுகூறும் சராம்சமான இறையுணர்வையோ தவிர்த்து நான் மேலே குறிப்பிட்ட இரு வரிகளை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள். அவ்வரிகள் சொல்லும் கருத்து மிகவும் எளிமையாக  இருக்கிறது  அல்லவா? சிந்தித்துச் செயலாற்றும் போது அச்செயலின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. சிந்திக்கும் திறன் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் கிடைத்த […]

Continue reading about ஒரு கணச் சிந்தனையும் ஒரு மணி நேரப் பேச்சும் »

Category: உன்னை ஒன்று கேட்பேன் ...., சொல்லத்தான் நினைக்கிறேன், நண்பனுக்கு ஒரு மடல், பிறமொழித் தழுவல்கள் | 4 Comments, Join in »
Subscribe to RSS Feed

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

on July 16th, 2010 by sakthi

    என்ன இந்தத் தலைப்பு ?   சிந்தனை பலமாக இருக்கிறது இல்லையா ? பயப்படாதீர்கள் ஏதோ காரசாரமான விடயத்தை அலசுவதற்கான தலைப்பல்ல இது. அப்படி அலசக்கூடிய அளவிற்கு அறிவுத்திறன் உள்ளவன் அல்ல நான்.   பின்னே ஏனிந்த தலைப்பு ? இங்கிலாந்திலே ஒரு கூட்டரசாங்கம் அ,மைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் முடிவுக்கு வருகின்றன.   பல அரசியல் அதிர்வுகளைத் தமது அரசியல் சாசனங்களாக கூட்டரசாங்கம் அமைந்த போது அதில் பங்கு கொண்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியும், […]

Continue reading about எல்லோரும் இந்நாட்டு மன்னர் »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மாறுதலைத் தேடிடும் தேர்தல்

on May 2nd, 2010 by sakthi

    “வந்திட்டங்காய்யா ! வந்திட்டாங்க !” வடிவேலின் முத்திரை வார்த்தைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன. என்ன? இவன் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று உங்கள் புருவம் சுருங்குவது புரிகிறது.   இங்கிலாந்துப் பாரளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களைத்தான் குறிப்பிடுகிறேன். மே மாதம் 6ம் திகதி இங்கிலாந்தின் அடுத்த நான்கு வருட ஆட்சி யார் கையில் போகப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் நிகழப் போகிறது..   பிரச்சாரங்களோ படுவேகமாக நிகழ்கிறது. என்ன வழமையான தேர்தல் பிரசாரம் போலத்தானே […]

Continue reading about மாறுதலைத் தேடிடும் தேர்தல் »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இயற்கையின் சீற்றமும் விஞ்ஞான வேட்கையும்

on April 21st, 2010 by sakthi

    2010ம் ஆண்டின் முற்பகுதியில், விஞ்ஞான யுகத்தின் உச்சியில் மரணத்தை மரணிக்க முயலும் விஞ்ஞானிகளின் மத்தியில் இயற்கையின் சிற்றம் மேற்குலகை ஒரு ஆட்டு ஆட்டுவித்திருக்கிறது.   உலகத்தின் பரப்பளவை குறுக்கி, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பதை மிகவும் இலகுவாக்கியிருக்கிறது விஞ்ஞானம் ஆகாய மார்க்கமாக. ஆனால் அந்தப் பயணத்தின் நீளத்தை அதிகரித்து தனது ஆற்றலை இன்று உலகுக்கு நிரூபித்திருக்கிறது இயற்கை.   இயற்கைவளத்தை உபயோகித்து மனிதவளத்தை மேம்படுத்த விஞ்ஞானம் ஆரம்பத்தில் துணை போனது . ஆனால் […]

Continue reading about இயற்கையின் சீற்றமும் விஞ்ஞான வேட்கையும் »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

ஒவ்வொரு தனிமனிதர்களும் பொதுவான பொறுப்புடையவர்களே

on April 2nd, 2010 by sakthi

  நான், எனது, என்னுடையது என்னும் ஒரு குறுகிய வட்டத்தினுள் மனிதன் வாழ்ந்து முடிந்து விடுவது சாத்தியமா?   சாத்தியம் என்று வாதிடுவதற்கு பலர் இருப்பார்கள். அவர்களது கருத்துக்களிலே நியாயம் கூட இருக்கலாம். ஆனால் உலகில் மனிதப்பிறவி எடுத்த அனைவருக்கும் பொதுவான பொருப்புக்கள் உண்டு என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.   ஆனால் இந்தப் பொதுவான பொறுப்பைப் புறக்கணித்து விட்டு தாந்தோன்றித்தனமான முறையில் தான் மட்டு வாழ்ந்து விட்டுப் போபவர்கள் உண்டு என்பதுவும் மறுக்கப்பட முடியாத உண்மை.   […]

Continue reading about ஒவ்வொரு தனிமனிதர்களும் பொதுவான பொறுப்புடையவர்களே »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

சொல்லத்தான் நினைக்கிறேன்

on March 21st, 2010 by sakthi

  யார் குற்றம் ?   மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் மனித இனத்தில் இன்று, நேற்று உருவானவை அல்ல. மனதனுடைய காலாச்சார மாற்றத்தினூடாக விளைந்தவையே மதங்களும் அவைசார்ந்த நற்சிந்தனைகளும்.   இன்று எமது தாய்நாடுகளில் மதங்களைப் பிரதிநிதிப்படுத்துகிறோம்ம் என்று கூறிக்கொண்டு தவறான செய்கைகளில் ஈடுபடும் சில மனிதர்களினால் மதங்களை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யும் நிகழ்வுகள் தலைதூக்கியுள்ளன.   ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் இருபாலருமே மனிதர்கள் தாம். அவர்களின் மன உணர்ச்சிகள் சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு உற்பட்டவையே. […]

Continue reading about சொல்லத்தான் நினைக்கிறேன் »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தொலைந்துபோன இளமையும் தொடரும் தேடலும்

on March 14th, 2009 by sakthi

அவசரம் அவசரமாக வெளியே கிளம்பத்தயாராகிக் கொண்டிருந்த நண்பனிடம் “எங்கே அவசரமாகப் போகிறாய்?” என்று கேட்டேன் . ” ஈழத்தில் நான் படித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ண்டு விழாவிற்கு” உற்சாகமாகப் பதிலளித்தான் நண்பன். எனது வயதையத்த ஒருபகுதிச் சமுதாயம் தங்களது இதயங்களில் ஒளிந்து கிடக்கும் இனிமையான இளமைக்கால நினைவுகளைத் தூசுதட்டி பார்க்கும் வலில் தொலைந்து போன இளமையை வெகு மும்மரமாகத் தேடிக் கொண்டிருப்பது இப்போது இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த இளமைக்கால […]

Continue reading about தொலைந்துபோன இளமையும் தொடரும் தேடலும் »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கடிதம் எழுதும் கலை மறைகிறதா ?

on March 14th, 2009 by sakthi

தற்போதைய இந்த அவசர சமூகத்திலே எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு . கடித மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் அந்தச் சிறப்பான பழக்கம் எம்மிடையே மிக வேகமாக மறைந்து வருகிறது என்பதுதான் .   இன்றைய விஞ்ஞான உலகிலே தொலைபேசித் தொடர்புகள் மிக இலகுவாக நாட்டுக்கு நாடு ஏற்பட்டு , குறைந்த செலவில் தொலைபேசித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வசதிகள் வந்த பின்பு , கடிதத் தொடர்பு என்பது ஒரு நேரச் செலவுமிக்க பின் தங்கிய […]

Continue reading about கடிதம் எழுதும் கலை மறைகிறதா ? »

Category: சொல்லத்தான் நினைக்கிறேன் | No comments yet, be the first »