Subscribe to RSS Feed

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)

on February 19th, 2016 by sakthi

சக்தி சக்திதாசன் daily mail graph. அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள். இங்கிலாந்து அரசியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு வாரம் இந்தவாரம். இதோ உங்கள் முன்னால் மற்றொரு மடலுடன் நான். 1957ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தின் ஆறுநாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்தது. அந்நாடுகள் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பேர்க், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவாகும். அந்நாளில் இக்கூட்டு முன்னணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானதொரு பொது வியாபாரக் கூட்டுறவை […]

Continue reading about இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184) »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

வழியில்லாப் பறவையன்றோ

on February 18th, 2016 by sakthi

பச்சை மரப் புதருக்குள்ளே பாடி மறையும் சிறு குருவி இளங்காலைப் பொழுது முதல் அந்தி சாயும் நேரம் வரை எதைத் தேடி ஓடுகின்றாய் ? இரை நாடி பறக்கின்றாய் சிறகுண்டு பறக்கின்றாய் நீ காற்றினிலே தவழ்கின்றாய் அடுத்தொரைக் கெடுத்து வாழும் அவலமிக்க அகிலம் போலே அன்பை மறந்த உலகம் தானோ உன்னுலகம் சொல்லிடுவாய் தானுண்டு, தமக்குண்டு என வாழும் தன்னலமிக்கவர்கள் உண்டோ சொல் மொழியிருந்தால் விளக்கிடுவாய் நீயோ வழியில்லாப் பறவையன்றோ சக்தி சக்திதாசன்

Continue reading about வழியில்லாப் பறவையன்றோ »

Category: Uncategorized | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

காலமிட்ட ஆணையிது

on February 12th, 2016 by sakthi

சிந்தனையில் தேனூறும் பொன்னான வேளையிது எந்தனையின் இதயமதில் ராகமிடும் புதுத் தாளமிது தித்திக்கும் மாலைநேரம் திகட்டுகின்ற கானங்கள் தேடுகின்ற பொழுதெல்லாம் தேன்சிந்தும் கணங்கள் ஏதேதோ ஞாபகங்கள் எங்கெங்கோ நினைவலைகள் எத்தனையோ பயணங்கள் அத்தனையும் ஆனந்தமே ! மறைகின்ற வேளையிலும் மயக்குகின்ற ஆதவனும் பிறக்கின்ற பொழுதினிலே சுரக்கின்ற பால் நிலாவும் என்னுள்ளே உறங்குமொரு கவிஞனை தட்டியெழுப்பி கவிதையொன்றை ஆக்கிட காலமிட்ட ஆணையிது சக்தி சக்திதாசன்

Continue reading about காலமிட்ட ஆணையிது »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on February 12th, 2016 by sakthi

அன்பு நண்பா ? நலமா ? என்றே நான் கேட்கும் நேரம் நலமே ! என்றே நீ கூற வேண்டும் மடலுக்கு மடல் மாதங்கள் பலவாயின வாழ்வென்னும் படகின் தளராத பயணம் பாதையில் மட்டும் பல்வேறு மாற்றங்கள் நீயென்றும் நானென்றும் நாமன்று வாழ்ந்த அற்புதக் காலங்கள் கலைந்து விட்ட மேகங்களாய் . . . . மறைந்து விட்ட மாயங்கள் ! வேஷங்களை மாற்றினோம் மேடை மட்டும் ஒன்றுதான் நாடகத்தின் கதாசிரியனோ கண்ணுக்கெட்டா தொலைவினில் காட்சிகள் மாறுவதையும் […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இங்கிலாந்திருந்து ஒரு மடல்

on February 12th, 2016 by sakthi

அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள் . கடந்த வருடம் அதாவது 2015 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக் காலநிலை மிகவும் மாறுபட்டு 5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய நேரத்தில் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எங்கே விட்டுப் போன குளிரைத் தப்ப வொட்டு விடுமோமோ எனும் ஏக்கத்தில் காலதேவதை இந்த வாரம் கொஞ்சம் தன் குளிரின் கடூரத்தைக் காட்டத் தொடங்கி விட்டாள். கணணியின் முன்னால் இருந்து கொண்டு பனிபடர்ந்த சாரளத்தினூடாகக் கலங்கலாகத் தெரியும் வெளியுலகை நோட்டம் […]

Continue reading about இங்கிலாந்திருந்து ஒரு மடல் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்

on April 21st, 2015 by sakthi

இனியதொரு காலையில் இன்பமுறு வேளையில் இதயமெனும் சுனையில் ஊற்றெடுக்கும் ராகமிது இயற்கையீந்த வரமாம் இனிமையான அகிலமதில் தந்தை விதைத்த விதையில் தாயின் கருவில் செடியாய் முகிழ்த்து நாமும் வளர்ந்து முழுமரமாய் விரிந்தோம் முத்தமிழின் சுவையறிந்து மூழ்கி அதில் முத்தெடுத்து அழகியதொரு மாலையாய் ஆக்கியிங்கு மகிழ்ந்திருந்தோம் அன்னைத்தமிழின் செழிப்பினிலே அழிந்தது அனைத்துத் துயரும் இல்லையென்ற சொல்லெதற்கு இயற்கையெனும் இல்லமதில் இருப்பதெல்லாம் அமைதியெனில் இல்லை ஒரு துன்பமென்பேன் தவழுகின்ற தென்றலோடு தத்திச் செல்லும் மேகம் கண்டு கூவும் அந்தக் குயிலின் […]

Continue reading about இனித்திடட்டும் உள்ளம் எல்லாம் »

Category: Uncategorized | 2 Comments, Join in »
Subscribe to RSS Feed

உனக்கு எனது நன்றிகள்

on March 30th, 2015 by sakthi

நீ விழியால் பேசிய கணங்கள் எல்லாம் நான் என்னை முழுதாய் இழந்த பொழுதுகள் உன் அங்க அசைவுகள் என்னோடு ரகசிமாய் பகிர்ந்த கதைகள் புரிந்த போது எமக்கிடையே விரிந்தது இடைவெளி உனக்கு அவைகள் எல்லாம் ஏதோ வாலிப விளையாட்டுகளாய் விந்தைகள் புரிந்திருக்கலாம் வாலிபன் என்னைக் கவிஞனாக்கிய புண்ணிய வேளைகளைப் புரிந்த போது புலம் பெயர்ந்த ஒரு புண்ணான வேளையது கண்களால் நீ பேசிய கதைகளின் மூலம் புரிந்த போது உனது உண்மையான வேடமும் புரிந்தது இழக்கவில்லை நான் […]

Continue reading about உனக்கு எனது நன்றிகள் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

மனதோடுதான் நான் பேசுவேன் . . .

on March 30th, 2015 by sakthi

வாழ்க்கை எனும் இந்த வலையினுள் விழுந்த நாமனைவரும் அவ்வலையிலிருந்து வெளியேறும் ஓர் இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறோம் . ஆயினும் நாம் அவ்வலையினுள் விழுந்ததிலிருந்து அதிலிருந்து வெளியேறும் நாள் வரை நாம் எமக்கு என பல பாத்திரங்களை வகுத்து அவற்றை உலகமேடையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். . நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நாடகம் அரங்கேறியபடிதான் இருக்கிறது ஆனால் நாம் மனமிசைந்து நடித்தால் அவ்வலிக்குள் நாம் கழிக்கும் காலங்கள் மிகவும் மகிழ்வாக முடியக்கூடியதாக இருக்கும். சிக்கல்கள் இல்லா வாழ்க்கை மனிதருக்கு […]

Continue reading about மனதோடுதான் நான் பேசுவேன் . . . »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

தேடுகின்ற பதில் எங்கே ?

on April 1st, 2014 by sakthi

அந்தநாளின் ஞாபகங்கள் ஆழமாக அடிமனதில் ஆனந்த அனுபவங்கள் அந்தரங்க சிலிர்ப்புகள் உனக்குள்ளும் எனக்குள்ளும் உறைந்திருக்கும் உணர்வுகள் உடல் தளர்ந்து போயினும் உலுக்குகின்ற சில கணங்கள் என் பார்வையின் வினாக்களுக்கு உன் பார்வையில் விடைகளோ ? விளக்கமில்லா உறவது அப்போ விவேகமில்லா வயதெமக்கு கல்லிலே வரைவதெல்லாம் காலமெலாம் சிற்பமாய் வாழ்வதுண்டு கண்ணிலே வரைவதெல்லாம் ஏனோ கண்ணீராய்க் கரைவதுண்டு காளையந்த வயதினிலே காதலென்னும் கோரிக்கை களைத்துப் போன முதுமையிலோ கேட்பதுந்தன் நட்புத் தானே தோழியடி நீ எனக்கு இன்று தோற்காத […]

Continue reading about தேடுகின்ற பதில் எங்கே ? »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

கம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1)

on March 27th, 2014 by sakthi

கம்பனுடைய அழகிய கவிதையின் வனப்பே காட்சிகளை விபரிக்கும் அந்த ழகிய வர்ணணை நடைகளே ! கட்டுக்கதையென்பார் சிலர், இதிகசமென்பார் மற்றும் சிலர் எது எப்படி இருப்பினும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பல உதாரணக்களை உகுத்துக் காட்டும் ஒரு அற்புதப் படைப்பே இராமாயணம். அதுவும் கம்பனது கவிதைச் செறிவும் தமிழ் மொழியழகும் அப்படைப்பினை அப்படியே உறிஞ்சிக்குடிக்கும் அளவிற்கு எம்மை உணர்வினுக்குள் உட்புகுத்தி விடுகிறது. இதோ கம்பனது கவிக்கானகத்தினுள் நான் நுழைந்த வேளை அதோ யாரது அங்கே மெல்லெனென நடந்து […]

Continue reading about கம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1) »

Category: Uncategorized | No comments yet, be the first »