Subscribe to RSS Feed

மனதோடுதான் நான் பேசுவேன்

on February 29th, 2016 by sakthi

மனதோடுதான் நான் பேசுவேன் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் மனதோடு பேச விழைகிறேன் தாயின் வயிற்றில் கருவாய் முகிழ்த்து பத்து மாதங்களில் புவியில் ஜனனிக்கிறோம். அந்த ஜனனத்தின் முடிவு மட்டும் தெரியாமல் வாழ்கிறோம். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏதோ எம் வாழ்வு என்றுமே நிலைத்திருக்கும் ஒரு நம்பிக்கையில் வாழ்வது போல வாழத் தலைப்பட்டு விடுகிறோம். இதுதான் சராசரி மனிதனின் வாழ்க்கை, இவ்வாழ்க்கையில் எம்முள் பல தேடல்கள் எழுந்தாலும் அவற்றின் யதார்த்தங்களை பல சமயங்களில் மூடிவைத்து வாழ முயற்சிக்கிறோம். […]

Continue reading about மனதோடுதான் நான் பேசுவேன் »

Category: கட்டுரை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)

on February 19th, 2016 by sakthi

சக்தி சக்திதாசன் daily mail graph. அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள். இங்கிலாந்து அரசியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு வாரம் இந்தவாரம். இதோ உங்கள் முன்னால் மற்றொரு மடலுடன் நான். 1957ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தின் ஆறுநாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்தது. அந்நாடுகள் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பேர்க், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவாகும். அந்நாளில் இக்கூட்டு முன்னணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானதொரு பொது வியாபாரக் கூட்டுறவை […]

Continue reading about இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184) »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காகிதப்பூ வாசங்களே !

on February 18th, 2016 by sakthi

பயணங்கள் முடிவதில்லை பாதையும் தெரிவதில்லை பாடத்தின் முடிவில் ஒரு பத்தியும் புரியவில்லை நேரத்தின் நீளத்தில் புதைந்திருக்கும் கோலங்கள் மீதமில்லா வகையினிலே செலவாகிடும் காலங்கள் நிச்சயத்தின் முடிவினிலே நிசப்தமான நியாயங்கள் நெஞ்சத்தின் முன்றலில் சதிராடிடும் சாத்திரங்கள் விளக்கமில்லா விடயங்கள் வெளிச்சத்தின் கருமைகள் மூடியில்லா பெட்டியினுள் மோதிநிற்கும் நினைவலைகள் காரியத்தின் வெற்றியிலே காரணங்கள் அம்பலமே வீரியத்தின் ஓரத்திலே விவேகங்கள் பூஜ்ஜியமே நாணயத்தின் ஒருபக்கம் ஞாபகத்தின் அடித்தளமே கானல்நீரானதுவே நேரில் கண் பார்த்த உண்மைகள் சோதனைக்கு ஒரு தளமும் வேதனைக்கு மறு […]

Continue reading about காகிதப்பூ வாசங்களே ! »

Category: கவிதை | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

வழியில்லாப் பறவையன்றோ

on February 18th, 2016 by sakthi

பச்சை மரப் புதருக்குள்ளே பாடி மறையும் சிறு குருவி இளங்காலைப் பொழுது முதல் அந்தி சாயும் நேரம் வரை எதைத் தேடி ஓடுகின்றாய் ? இரை நாடி பறக்கின்றாய் சிறகுண்டு பறக்கின்றாய் நீ காற்றினிலே தவழ்கின்றாய் அடுத்தொரைக் கெடுத்து வாழும் அவலமிக்க அகிலம் போலே அன்பை மறந்த உலகம் தானோ உன்னுலகம் சொல்லிடுவாய் தானுண்டு, தமக்குண்டு என வாழும் தன்னலமிக்கவர்கள் உண்டோ சொல் மொழியிருந்தால் விளக்கிடுவாய் நீயோ வழியில்லாப் பறவையன்றோ சக்தி சக்திதாசன்

Continue reading about வழியில்லாப் பறவையன்றோ »

Category: Uncategorized | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

படித்”தேன்” . . . . சுவைத்”தேன்”

on February 18th, 2016 by sakthi

இன்று காலை எனது “வாட்ஸ் அப்” செய்திக் கோர்வையில் ஒரு படத்துடன் கூடிய கவிதை வரிகள் வந்து விழுந்தது. மிகவும் எளிமையாக ஆனால் தன்னுள் மறைந்துப் புதைத்திருக்கும் பொருட்செறிவு ஆழமானதாக இருக்கும் வகையில் அமைந்திருந்த அந்த கவிதை வரிகள் என்நெஞ்சத்தில் அழகாய்ப் பதிந்து விட்டது. நண்பர் இராஜா தியாகராஜன் அவர்களின் சிந்தையில் உதித்த ஒரு கவிதை. அது என்னெஞ்சில் ஏற்படுத்திய தாக்கம் அழகானது, இனிமையானது, ஆழமாய்ச் சிந்திக்க வைத்தது. அது கவிதையோ அன்றி வரிகளோ எதுவாயினும் என்னைப் […]

Continue reading about படித்”தேன்” . . . . சுவைத்”தேன்” »

Category: சொல்லச் சொல்ல இனிக்குதடா | 1 Comment, Join in »
Subscribe to RSS Feed

அஹிம்சை தேடி எண்ணங்கள் அலையும்

on February 17th, 2016 by sakthi

சித்தத்திலே தமிழ் ஊறும் – என் சிந்தையிலே தேனூறும் செந்தமிழின் வனப்பினிலே செம்மொழியின் மணம் கமழும் கவியாக்கும் கவிஞனல்ல –யான் கற்றறிந்த அறிஞனல்ல நெஞ்சிலெழும் மொழிக் காதலால் சுரந்திடுமிந்த சொற்கூட்டல் கவியரசன் பா கேட்டால் – நான் கானகத்தில் தொலைந்திடுவேன் மரபொன்றும் அறிந்திலேன் மன உணர்வினை வடித்திடுவேன் தமிழ் மணக்கும் மண்ணில் உதித்தேன் – நான் தமிழன்னை மடியில் தவழ்ந்தேன் தன்னை அன்று மறந்ததினால் தாயகம் விட்டுப் புலம் பெயர்ந்தேன் உள்ளத்திலே தோன்றுவதைத் தமிழாய் – நான் […]

Continue reading about அஹிம்சை தேடி எண்ணங்கள் அலையும் »

Category: கவிதை | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

காலமிட்ட ஆணையிது

on February 12th, 2016 by sakthi

சிந்தனையில் தேனூறும் பொன்னான வேளையிது எந்தனையின் இதயமதில் ராகமிடும் புதுத் தாளமிது தித்திக்கும் மாலைநேரம் திகட்டுகின்ற கானங்கள் தேடுகின்ற பொழுதெல்லாம் தேன்சிந்தும் கணங்கள் ஏதேதோ ஞாபகங்கள் எங்கெங்கோ நினைவலைகள் எத்தனையோ பயணங்கள் அத்தனையும் ஆனந்தமே ! மறைகின்ற வேளையிலும் மயக்குகின்ற ஆதவனும் பிறக்கின்ற பொழுதினிலே சுரக்கின்ற பால் நிலாவும் என்னுள்ளே உறங்குமொரு கவிஞனை தட்டியெழுப்பி கவிதையொன்றை ஆக்கிட காலமிட்ட ஆணையிது சக்தி சக்திதாசன்

Continue reading about காலமிட்ட ஆணையிது »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

நண்பனுக்கு ஒரு மடல்

on February 12th, 2016 by sakthi

அன்பு நண்பா ? நலமா ? என்றே நான் கேட்கும் நேரம் நலமே ! என்றே நீ கூற வேண்டும் மடலுக்கு மடல் மாதங்கள் பலவாயின வாழ்வென்னும் படகின் தளராத பயணம் பாதையில் மட்டும் பல்வேறு மாற்றங்கள் நீயென்றும் நானென்றும் நாமன்று வாழ்ந்த அற்புதக் காலங்கள் கலைந்து விட்ட மேகங்களாய் . . . . மறைந்து விட்ட மாயங்கள் ! வேஷங்களை மாற்றினோம் மேடை மட்டும் ஒன்றுதான் நாடகத்தின் கதாசிரியனோ கண்ணுக்கெட்டா தொலைவினில் காட்சிகள் மாறுவதையும் […]

Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இங்கிலாந்திருந்து ஒரு மடல்

on February 12th, 2016 by sakthi

அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள் . கடந்த வருடம் அதாவது 2015 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக் காலநிலை மிகவும் மாறுபட்டு 5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய நேரத்தில் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எங்கே விட்டுப் போன குளிரைத் தப்ப வொட்டு விடுமோமோ எனும் ஏக்கத்தில் காலதேவதை இந்த வாரம் கொஞ்சம் தன் குளிரின் கடூரத்தைக் காட்டத் தொடங்கி விட்டாள். கணணியின் முன்னால் இருந்து கொண்டு பனிபடர்ந்த சாரளத்தினூடாகக் கலங்கலாகத் தெரியும் வெளியுலகை நோட்டம் […]

Continue reading about இங்கிலாந்திருந்து ஒரு மடல் »

Category: Uncategorized | No comments yet, be the first »
Subscribe to RSS Feed

இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்

on April 21st, 2015 by sakthi

இனியதொரு காலையில் இன்பமுறு வேளையில் இதயமெனும் சுனையில் ஊற்றெடுக்கும் ராகமிது இயற்கையீந்த வரமாம் இனிமையான அகிலமதில் தந்தை விதைத்த விதையில் தாயின் கருவில் செடியாய் முகிழ்த்து நாமும் வளர்ந்து முழுமரமாய் விரிந்தோம் முத்தமிழின் சுவையறிந்து மூழ்கி அதில் முத்தெடுத்து அழகியதொரு மாலையாய் ஆக்கியிங்கு மகிழ்ந்திருந்தோம் அன்னைத்தமிழின் செழிப்பினிலே அழிந்தது அனைத்துத் துயரும் இல்லையென்ற சொல்லெதற்கு இயற்கையெனும் இல்லமதில் இருப்பதெல்லாம் அமைதியெனில் இல்லை ஒரு துன்பமென்பேன் தவழுகின்ற தென்றலோடு தத்திச் செல்லும் மேகம் கண்டு கூவும் அந்தக் குயிலின் […]

Continue reading about இனித்திடட்டும் உள்ளம் எல்லாம் »

Category: Uncategorized | 2 Comments, Join in »